
ஸ்விஸ் நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு அற்புதமான திட்டம் பற்றிய செய்தி இது…
மிகவும் பயனுள்ள ஒரு யோசனை.. நாமெல்லாம் கொஞ்சம் பழமைவாதிகள்…வெளியாட்களுடன் சட்டென்று பழகுவதில் கொஞ்சம் தயக்கம் இருக்கும். அதனால் நம் நாட்டில் பெரிய அளவில் இதை நடைமுறைப்படுத்துவது கொஞ்சம் சிரமமாக இருக்கும்….
ஆனாலும், முடிகிறதோ இல்லையோ – குறைந்த பட்சம் இந்தக் கோணத்தில் நாம் யோசிப்பது சமூகத்தில் எதாவது ஒருவகையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம்…
இந்த செய்தியை சுருக்கமாக தமிழில் விளக்குகிறேன்… ஆனால், இதை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியுடன் ஆங்கிலத்தில் அப்படியே படித்தால் தான் ரசிக்கும். எனவே அதை ஆங்கிலத்தில் அப்படியே கீழே தந்திருக்கிறேன்.
SWISS TIME BANK – என்கிற இந்த வங்கி செயல்படும் விதத்தை அறிய மிகுந்த வியப்பு ஏற்படுகிறது. முதியோர்களின் நலனை அடிப்படையாக கொண்டு,
– வயது முதிர்ந்த காலங்களில், உறவினர்கள் யாரும் கூட இல்லாமல், தவிக்கும் முதியோர்கள் –
உதவிக்கு யாரை அணுகுவது என்று கவலைப்படாமல், தங்களுக்கு தாமே உதவி செய்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கிறது இந்த அமைப்பு.
முதலில், தாம் இந்த திட்டத்தில் இணைந்து, உதவி செய்யவும், பெற்றுக்கொள்ளவும் விரும்புகிறோம் என்று இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வங்கியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தங்களுக்கு, உடலில் வலு இருக்கும்போது, நேரம் கிடைக்கும்போதெல்லாம்,
எதாவது ஒரு வகையில் சமூகத்தில் – உடல் ரீதியாக உதவி
தேவைப்படுவோர்க்கு (வீட்டில் தனியாக இருக்கும் முதியோருக்கு
தேவையான சிறு சிறு உதவிகள், மருத்துவ மனைக்கு அழைத்துச்
செல்வது, நடைப்பயிற்சி செய்ய உதவுவது -என்பது போன்ற…. )
உதவிகளை இந்த வங்கி மூலம் செய்து –
அதை டைம் வங்கியில் பதிவு செய்துக்கொண்டால், இத்தகைய உதவிகள் செய்வதை, நேரக்கணக்கில் – டைம் வங்கி குறித்துக் கொள்ளும்….
வருடக்கடைசியில், அவர்கள் அந்த வருடம் முழுவதும் ஆற்றிய தொண்டுப்பணிக்கான நேரம் கணக்கிடப்பட்டு, அவர்களுக்கு சேவிங்க்ஸ் கார்டு கொடுக்கப்படும்…..
பின்னர், தாம் முதுமையடைந்து, உதவி தேவைப்படும் நேரத்தில்,
தான் ஏற்கெனவே செய்து பதிவு செய்து வைத்திருந்த உதவியை
இப்போது, அதே அமைப்பில் கோரி -தனக்கு பெற்றுக் கொள்வது.
இந்த திட்டத்தின் நோக்கம் – முதுமைக் காலத்தில், தனியே
வசிப்பவர்கள், தங்களுக்கு மனித உதவி தேவைப்படும்போது,
யாரைக் கூப்பிடுவது, எப்படி உதவி கேட்பது என்பது போன்ற
தயக்கங்கள் இல்லாமல்,
முன்னர் வங்கியில் சேமித்து வைக்கும் பணத்தை, பின்னர்
தேவைப்படும் நேரத்தில் எடுத்து பயன்படுத்திக் கொள்வது போல் –
தாங்கள் ஒரு காலத்தில் பிறருக்கு செய்த உதவியை, தங்களது
இயலாமைக் காலத்தில் உரிமையுடன் கோரி பெற்றுக்கொள்ளலாம்
என்பதே…
எனக்கு கிடைத்த தகவலை கீழே அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன்..
சுவாரஸ்யமாக இருக்கும்…. தவற விடாதீர்கள்…
*Swiss Time Bank*
A student studying in Switzerland observes:
While studying in Switzerland, I rented a house
near the school.
The landlady Kristina is a 67-year-old single
old lady who had worked as a teacher in a secondary
school before she retired.
Switzerland’s pension is very good, enough to not
worry her about food and shelter in her later years.
However, she actually found “work” – to take care of
an 87-year-old single old man.
I asked if she was working for money.
Her answer surprised me:
“I do not work for money, but I put my time
in the ‘time bank’, and when I cannot move in my
old age, I could withdraw it.”
The first time I heard about this concept of
“time bank”, I was very curious and asked the
landlady more.
The original “Time Bank” was an old-age pension program developed by the Swiss Federal Ministry of Social Security. People saved the ‘time’ taking care of the elderly when they were younger, and when they were old, ill or needed care could withdraw it.
Applicants must be healthy, good at communicating
and full of love. Everyday they have to look after
the elderly who need help.
Their service hours will be deposited into the
personal ‘time’ accounts of the social security
system.
She went to work twice a week, spending two hours
each time helping the elderly, shopping, cleaning
their room, taking them out to sunbathe,
chatting with them.
According to the agreement, after one year of her
service, “Time Bank” will calculate her working
hours and issue her a “time bank card”.
When she needs someone to take care of her,
she can use her “time bank card” to “time to
withdraw “time and time interest”. After the
information verification, “Time Bank” will assign
other volunteers to take care of her at the hospital
or her home.
One day, I was in school and the landlady called
and said she fell off the stool when she was
wiping the window.
I quickly took leave and sent her to the hospital
for treatment.
The landlady broke her ankle and needed to stay
in bed for a while.
While I was preparing to apply for a home to take
care of her, the landlady told me that I need not
worry about her.
She had already submitted a withdrawal request
to the “Time Bank”.
Sure enough, in less than two hours “Time Bank”
sent a nursing worker to come and care for
the landlady.
In the following month, the care worker took care
of the landlady everyday, chatted with her and made
delicious meals for her.
Under the meticulous care of the carer, the landlady
soon recovered her health.
After recovering, the landlady went back to “work”.
She said that she intends to save more time in the
“time bank” while she is still healthy.
Today, in Switzerland, the use of “time banks”
to support old age has become a common practice.
The Swiss government also passed legislation to
support the “Time Bank” pension scheme.
What a Beautiful concept. Hope it gets adapted all over the world too!
.
…………………………………………………….
மிக அற்புதமான திட்டம். முடிந்தவரை எல்லா நாட்டினரும் இதை நடைமுறைப்படுத்த முன் வரவேண்டும்!
ரொம்ப நல்ல யோசனை , நன்றி!
மத்திய நெடுஞ்சாலைத் துறையின்
ஒரு மிக நல்ல அறிவிப்பு –
சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு
அவசரகால உதவியினை முன்வந்து செய்யும்
பொதுமக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்
என்கிற ஒரு குறிக்கோளுடன் மத்திய
நெடுஞ்சாலைத்துறை ஒரு அறிவிப்பை
வெளியிட்டிருக்கிறது…
இதன்படி –
” பொன்னான நேரத்தில் சாலை விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு
ரூ.5000/- பரிசாக வழங்கப்படும்.
ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு
பரிசுத் தொகை வழங்கப்படும்.
சாலை விபத்து நடந்த பின் காவல் துறையினர்
அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை
குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல்
தெரிவிப்பர்.
அனைத்து விபத்துக்களும் மாவட்ட ஆட்சியரது
தலைமையின் கீழ் இயங்கும்” மாவட்ட
அளவிலான மதிப்பீட்டு குழு ” ஆய்வு செய்யும்.
இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5000/-
பரிசுதொகை வழங்குவதற்காக போக்குவரத்து
துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்.”
– விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும்
மனப்பான்மையை மக்களிடையே
வளர்க்கக்கூடிய இந்த நல்ல முடிவை மனதார
வரவேற்போம்.
-காவிரிமைந்தன்
//ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு
பரிசுத் தொகை வழங்கப்படும்.//
நல்ல தொடக்கம் ஏன் இந்த கண்டிஷன் என்றுதான் புரியவில்லை