இதெல்லாம் நல்லதற்கா…. கெட்டதற்கா…? யாருக்கு…..?

சீனியர் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி டெல்லிக்கு
வந்த திருனமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை
அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று சந்தித்திருகிறார்.

பாஜக சார்பில் எம்.பி.யாகி இருந்தாலும், அண்மைக்
காலங்களில் பாஜகவையும், பிரதமரையும், உள்துறை
அமைச்சரையும் மிகக்கடுமையாக விமரிசித்து வருகிறார்
சு.சுவாமி.

மமதாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை
சந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி.

அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நீங்கள்
இணையப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு நான் எப்போதும்
மமதா பானர்ஜியின் பக்கம்தான் இருக்கிறேன் என புதிராக
பதில் அளித்திருக்கிறார்….

அதன்பின்னர் தமது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சு.சுவாமி,
தாம் இதுவரை இணைந்து பணியாற்றிய தலைவர்களான
ஜேபி (ஜெய்பிரகாஷ் நாராயண்), மொரார்ஜி தேசாய்,
ராஜீவ் காந்தி, சந்திரசேகர், பி.வி.நரசிம்மராவ் ஆகியோருக்கு
இணையானவர் மமதா பானர்ஜி என ஏகத்திற்கு புகழ்ந்து
தள்ளியிருக்கிறார்.

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர்
கீழே –

…………………………………………………………………………………..

– இதெல்லாம் நல்லதற்கா…. கெட்டதற்கா…? யாருக்கு…..?

…………………………………..……….

………………………………………………………………………………………………………………………….

பின் சேர்க்கை –

மேலே உள்ளதை பதிப்பித்த பிறகு, இன்று மீண்டும் டாக்டர் சு.சுவாமி இன்னொரு ட்விட்டர் செய்தியை வெளியிட்டிருக்கிறார்…. அதை கீழே தந்திருக்கிறேன்….. இது மோடிஜி மீதான நேரடித் தாக்குதல் … ஒர் முடிவிற்கு வந்து விட்டாரென்றே தெரிகிறது…..

…………………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், டாக்டர் சுப்ரமணியன் சுவாமி,,, மம்தா பானர்ஜி,. Bookmark the permalink.

2 Responses to இதெல்லாம் நல்லதற்கா…. கெட்டதற்கா…? யாருக்கு…..?

  1. புதியவன் சொல்கிறார்:

    சுப்ரமண்யன் ஸ்வாமி அவரது useful lifetimeஐக் கடந்துவிட்டார். இனி அவரால் எதையும் செய்யமுடியாது. சோனியா, ப.சி. போன்றவர்களை ஜெயிலுக்கு அனுப்புவேன் என்றார். ஒன்றும் நடக்கவில்லை. பாஜக அரசில் அவருக்கான முக்கியத்துவம் இல்லை. பாஜக இவர்களைப் போன்றவர்களைக் கடந்து மேலே சென்றுகொண்டிருக்கிறது (ie leaving them behind).

    Who is responsible என்ற இடத்தில் ஏன் Subramanyan Swamy என்று அவர் பெயரையே போட்டுக்கொண்டிருக்கிறார்? கட்சி மாறினால் நல்லதுதான், பாஜகவுக்கு.

    மன்மோகன்சிங் பெற்ற மதிப்பு 1 சதம் என்றால் மோடி 80 சதம் மதிப்பை வெளிநாட்டுத் தலைவர்களிடம் பெற்றுள்ளார். இவரைப்பற்றி பல நாட்டுத் தலைவர்கள் பேசின பேச்சுக்களே சான்று. உள்நாட்டு செக்யூரிட்டிக்கோ இல்லை தேசிய பாதுகாப்புக்கோ 2014லிலிருந்து எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. (தலைவர்கள் கொலை-வெளிநாட்டிலிருப்பவர்கள் மூலம், பாகிஸ்தானின் தீவிரவாதத்தால் நடந்த பயங்கரம், உள்நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு-கோத்ரா, பெங்களூர் குண்டுகள், கோவை கலவரம் என்று பலப் பல தீவிரவாத பயங்கரவாதச் செயல்கள் இன்று வரை நடக்கவில்லை) கஷ்மீரில் 370 நீக்கப்பட்டது. கொரோனா வைரஸ்-மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகப் பெரும் நாடான இந்தியாவில் ஓரளவு மேனேஜ் செய்யப்பட்டது. குறைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் 2004 லிலிருந்து 10 வருடங்கள் நடந்த கொள்ளைகள், அரசு பயங்கரவாதங்கள் நடந்தமாதிரித் தெரியலை.

    இவர் பணியாற்றியபோது, அந்த அந்தக் கட்சிகள் வளர்ந்தனவா? இவருக்கும் PKக்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா? அரசியல் வியாபாரிகள்

    அப்போ சு.சுவாமியின் achievementதான் என்ன? அவரே சொல்வாரா?

    • புதியவன் சொல்கிறார்:

      அல்லது எதிர்கட்சிகளின் கூட்டணி ஏற்படாமல், காங்கிரஸை தனிப்படுத்த அல்லது பலவீனப்படுத்த மேற்கொள்ளும் தந்திரமாகவும் இருக்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.