
நிச்சயமாக இதைப் படிக்கும் பலர் இந்த
“சிறைச்சாலை” திரைப்படத்தைப் பார்த்திருக்க
மாட்டீர்கள்… ஏனென்றால், இந்த மாதிரி படங்கள்
அதிக நாட்கள் ஓடுவதில்லை;வர்த்தக ரீதியாக
வெற்றி பெறுவதில்லை;
பல வருடங்கள் முன்பு, திருச்சி காவேரி தியேட்டரில்
திரையிடப்பட்ட இந்த படத்தை வாரக்கடைசியில் பார்க்க
நினைத்திருந்தேன்… ஆனால் – ஒரே வாரத்தில் தூக்கப்படுகிறது
என்கிற செய்தி கடைசி நாளான வியாழனன்று தான்
கிடைத்தது…..25 கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் தொழிற்சாலை
குடியிருப்புக்கு அப்போதெல்லாம் அதிகம் பஸ் வசதி
கிடையாது…..
இருந்தாலும் படத்தை விட எனக்கு மனமில்லை;
அன்றே இரவு 10 மணி காட்சிக்கு நான் எங்கே கூப்பிட்டாலும்,எப்போது கூப்பிட்டாலும் தட்டாமல் வரக்கூடிய ஒரு நண்பனையும்
கூட அழைத்துக் கொண்டு போனேன்…படம் முடிந்து 1 மணி சுமாருக்கு வெளியே வந்தோம்.
அங்கிருந்து மத்திய பேருந்து நிலையம் வரை நடந்தே வந்தோம்.
இந்தப்படம் எங்கள் இருவரையுமே மிகவும் பாதித்தது….
பஸ் நிலையத்தில், ஒரு டீக்கடையில் உட்கார்ந்து
நண்பனும் நானும், சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும்,
அந்தமான் சிறைக்கொடுமைகளை பற்றியும்
பேசிக்கொண்டே அதிகாலை 5 மணி வரை
(முதல் பஸ்) பொழுதைக் கழித்தோம்.
ஒரே சமயத்தில் தமிழில் “சிறைச்சாலை” என்கிற பெயரிலும்,
மலையாளத்தில் “காலா பாணி” என்கிற பெயரிலும்
எடுக்கப்பட்ட – “அந்தமான்” சிறையில், வெள்ளைக்காரர்களின்
காலத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை
- கிட்டத்தட்ட நிஜம் -சித்தரித்துக் காட்டும் படம்.
அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சியை இப்போது எதேச்சையாக
பார்க்க நேர்ந்தது… நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொள்ள
விரும்பி இங்கே பதிகிறேன்…
…………………………………
இதை எழுதிவிட்டு தேடினேன்….சிறைச்சாலை தமிழ்ப்படம்
யூ-ட்யூபிலேயே கிடைக்கிறது… நேரம் கிடைக்கும்போது அவசியம்
முழுப்படத்தையும் பாருங்கள்… லிங்க் கீழே தந்திருக்கிறேன்.
………….
.
……………………………………………