குஜராத் அடானி போர்ட்’டில் மட்டும் இந்த குற்றச்செயல் எப்படி சாத்தியமாகிறது ….?

இந்த நாட்டில் எவ்வளவோ துறைமுகங்கள் இருக்கின்றன…
ஆனால், குஜராத்தில் அடானிக்கு சொந்தமான முந்த்ரா
துறைமுகத்தில் மட்டும் –

ஹெரோயின் போதைப்பொருள், தொடர்ச்சியாக, திருட்டுத்தனமாக
இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டுக்குள் கடத்தப்பட்டு
விநியோகிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.

இது எத்தனை ஆண்டுகளாக நடந்து வருகிறதோ
தெரியவில்லை – ஆனால் அண்மையில் தான் விஷயம்
வெளியே வந்திருக்கிறது.

முதலில் 21,000 கோடி மதிப்பிலான 3000 கிலோ ஹெரோயின் …

தற்போது, 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள
25,000 கிலோ ஹெரோயின் – குஜராத்தில், அடானி குழுமத்துக்கு
சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் இறக்குமதி
செய்யப்பட்டு, கஸ்டம்ஸிலோ, வருமான, புலனாய்வுத்
துறைகளிடமோ, போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிடமோ,
சிக்காமல், டெல்லி வரை கொண்டு வரப்பட்டுள்ள
செய்தி வெளியாகி இருக்கிறது.

துறைமுகத்தில் அதிகாரிகளால் தப்ப விடப்பட்டது
மட்டுமல்லாமல், இடையில் உள்ள குஜராத், ராஜஸ்தான்,
மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின்
அதிகாரத்திற்குட்பட்ட, செக் போஸ்டுகள் அத்தனையையும்
அசாதாரணமாக எந்தவித ரெக்கார்டும் இல்லாமல் கடந்து
டெல்லியை சென்றடைந்திருக்கிறது.

அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின்
உதவியின்றி இது நடந்திருக்குமா…?

யார் யாருக்கு எத்தனை கோடிகள் சென்றனவோ…?

இந்த ஹெரோயின், ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில்
தயாரிக்கப்பட்டு, ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு
கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து குஜராத்துக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டிருக்கிறது.

ஆந்திராவை சேர்ந்த ஆஷி டிரேடிங் என்கிற கம்பெனி பெயரில்
முந்த்ரா துறைமுகத்துக்கு இந்த ஹெராயின் கண்டெய்னர்கள்
வந்திறங்கி இருக்கின்றன…

முகப்பூச்சு பவுடர் என்ற பெயரில் இந்த ஹெராயின்
கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது…. ஆப்கானிஸ்தானிலிருந்து
ஒரு பொருள், அதுவும் முகப்பூச்சு பவுடர் என்கிற
பெயரில் வந்திறங்கும்போது, எந்தவொரு முன் அனுபவமும்
இல்லாத அதிகாரிக்கு கூட சந்தேகம் வந்திருக்க வேண்டுமே….
உடனடியாக திறந்து பரிசோதனை செய்யப்பட்டிருக்க
வேண்டுமே… ? அது ஏன் நடக்கவில்லை…? உயர் அதிகாரிகள்
இதற்கு உடந்தை என்பதாலா…?

இதில் சட்டவிரோதமான அந்நியப் பணப்பரிமாற்றம் வேறு
சம்பந்தப்பட்டிருக்கிறதே.

இதெல்லாம் இந்தியாவில் எப்படி சாத்தியமாகிறது….?
இது என்ன ஆப்பிரிக்காவில் எங்கோ ஒரு மூலையில்
இருக்கும் துக்குனூண்டு சர்வாதிகார நாடா…?

ஆந்திர ஆஷி டிரேடிங் கம்பெனி, அரிசி ஏற்றுமதி,
இறக்குமதி செய்வதற்கான லைசென்சு மட்டும் தான்
வைத்திருக்கிறதாம்…

முதலில் – இந்த கம்பெனியின் பெயரில் முகப்பூச்சு பவுடர்
என்கிற சமாச்சாரம் இறக்குமதியாக எப்படி அனுமதிக்கப்பட்டது….?
யாருக்குமே சந்தேகம் வரவில்லையா … ?

ஆந்திர கம்பெனி இறக்குமதி செய்த கண்டெயினர்கள்
ராஜஸ்தானைச் சேர்ந்த லாரியால், டெல்லி வரை கொண்டு
செல்லப்பட்டது யாருடைய கவனத்தையும் கவரவில்லையா ….?

ஒருவேளை, இதே போர்வையில், வெடிமருந்து பொருட்களும்
கொண்டு வரப்பட்டிருந்தால்….?

இது நாட்டின் பாதுகாப்பிற்கு இது எப்பேற்பட்ட ஆபத்தான,
எவ்வளவு பயங்கரமான பலவீனம்… ?

இதைப்பற்றி வெளிவரும் செய்திகள் எதையும் –
பொறுப்பானவர்கள் யாரும் சீரியசாக எடுத்துக் கொண்டதாகவே
தெரியவில்லை….

அதெப்படி அடானி துறைமுகத்தில் மட்டும் இப்பேற்பட்ட
எசகு பிசகான விவகாரங்கள் நடக்கின்றன; அவையும்
சீரியசாக கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன….?

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to குஜராத் அடானி போர்ட்’டில் மட்டும் இந்த குற்றச்செயல் எப்படி சாத்தியமாகிறது ….?

 1. Tamil சொல்கிறார்:

  //ஆந்திர ஆஷி டிரேடிங் கம்பெனி, அரிசி ஏற்றுமதி,
  இறக்குமதி செய்வதற்கான லைசென்சு மட்டும் தான்
  வைத்திருக்கிறதாம்…

  முதலில் – இந்த கம்பெனியின் பெயரில் முகப்பூச்சு பவுடர்
  என்கிற சமாச்சாரம் இறக்குமதியாக எப்படி அனுமதிக்கப்பட்டது….?
  யாருக்குமே சந்தேகம் வரவில்லையா … ?//

  if needed company can be closed easily

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Tamil,

   இங்கு நாம் பேசுவது அந்தக் கம்பெனி
   இயங்க அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது
   மூடப்பட வேண்டுமா என்பதைப்பற்றி அல்ல….

   இந்த தடை செய்யப்பட்ட போதைப்பொருள்,
   அடானி போர்ட்டிலிருந்து எப்படி வெளியே வந்தது….?
   அதற்கு யார் யார் துணை போனார்கள்… ?

   – என்பது குறித்து தான்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Tamil சொல்கிறார்:

  அதைத்தான் நானும் சொல்கிறேன் ஐயா.

  இப்படிப்பட்ட தவறுகள் இதுபோன்ற சிறிய சிறிய கம்பெனிகளின் பெயரில்தான் நடத்தப்படும் அப்போதுதான் பெரிய மீன்கள் பிரச்சினை இல்லாமல் புதிய பெயர்களில் தங்கள் தொழில்களை செய்யலாம்.

  இதைக் கண்டுபிடித்தவர் இன்னும் சில நாட்களில் பிணமாக மீட்கப்பட்டார் என்று செய்தி செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாக வரும்.

  500 ரூபாய்க்கு எதையும் செய்யத் துணிந்த புண்ணியவான்கள் இருக்கின்ற புண்ணியபூமி இந்தியா.

 3. bandhu சொல்கிறார்:

  இவ்வளவு பெரிய அளவு பணம் புழங்குவதால் பலருக்கும் இதில் தொடர்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறைந்த பட்சம் மிக உயர் பதவியில் இருப்பவர்களின் ஆசீர்வாதமாவது இருக்கும்.

  நீங்கள் சொன்னது போல், இவ்வளவு எளிதாக இதை கடத்திக்கொண்டு வர முடியும் என்றால் என்னதான் சாத்தியமில்லை?

  மிகக் கவலை அளிக்கும் தகவல்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.