

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள்
(பெரும்பாலும் வட இந்தியர்கள் ) தொடர்ந்து போராடி வரும்
நிலையில் –
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூட,
அந்த சட்டங்களை கைவிட முடியாது என்று உறுதியாக இருந்த
நிலையில் –
இன்று –
3 சட்டங்களும் வாபஸ் பெறப்படுகின்றன. விரைவில்
அதற்கான முறையான நடவடிக்கைகள் நிறைவேற்றப்படும்
என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காரணமாகச் சொல்லப்படுவது – ?
” விவசாயிகளின் நன்மைக்காகவே இந்த சட்டங்கள் கொண்டு
வரப்பட்டன… ஆனாலும், விவசாயிகளுக்கு இதைப் புரியவைக்கும்
முயற்சியில் நாங்கள் தோற்று விட்டோம். இதற்காக
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்….”
ஆமாம் – பிறகென்ன – குறிப்பிட்ட சில பிரிவினர் பயன்பெற,
நாங்கள் தவறான ஒரு சட்டத்தை, கொண்டு வந்து
நிறைவேற்றி விட்டோம்… என்று சொல்லியா மன்னிப்பு
கேட்க முடியும் … ?
சட்டம் கொண்டு வரப்பட்டதன் காரணம், பின்னணி – என்னவென்பது
எல்லாருக்கும் தெரியும் என்பதைப் போலவே,
இந்த தருணத்தில் அவற்றை வாபஸ் பெறுவதன் காரணத்தையும்
மக்கள் – குறிப்பாக – போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் –
நன்கு புரிந்து கொள்ளவே செய்வார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளில் பெரும்பாலானோர்,
பஞ்சாப், உத்திர பிரதேசம், ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
பஞ்சாபிலும், உ.பி.யிலும் சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கிவிட்ட
நிலையில், பாஜகவுக்கு எதிராக நாங்கள் மிகத்தீவிரமாக
செயல்படுவோம் என்று வேறு அவர்கள் வெளிப்படையாக
அறிவித்து விட்ட நிலையில் –
தேர்தல் களம் பாஜகவை பயமுறுத்துகிறது
என்பதைத் தானே இது வெளிப்படுத்துகிறது ..?
இந்த வாபஸ், மற்றும் மன்னிப்பு கோரல் மூலமாக மக்களை
சரிக்கட்டி விட முடியும் என்று நினைத்தால் ……
கூடவே இன்னொரு மன்னிப்பு கோரலையும் வெளியிட்டு
விடலாம்…(இந்த விஷயத்தில் வாபஸுக்கு வழியில்லை
என்பதால்…)
திடீரென்று ஒரு நள்ளிரவில், 500,1000 ரூபாய் நோட்டுக்களை
அதிரடியாக ரத்து செய்து, பண மதிப்பிழப்பீட்டின் மூலம்,
இந்த நாட்டு மக்கள் அத்தனை பேரையும் – தாங்கவொண்ணா
துன்பத்திலும், துயரத்திலும், பெரும் நஷ்டத்திலும்,
ஈடுபடுத்தி விட்டதற்கும் மன்னிப்பு கோருகிறோம்
என்று சொல்லி விட்டால் –
விவசாயிகள் மட்டுமல்லாமல் –
நாட்டு மக்கள் அனைவருமே மகிழ்ச்சி அடைந்து விடுவார்கள்.
வரவிருக்கும் தேர்தல்களில் பாஜகவை மகத்தான வெற்றியை
நோக்கி இட்டுச் சென்று விடுவார்கள்….!!!
.
……………………………………………..
விவசாயச் சட்டங்களை பஞ்சாப் விவசாயிகள் எதற்கு எதிர்த்தார்கள், அவர்களுக்கான funding எது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது உ.பி தேர்தல் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பஞ்சாபில் கட்சி வளரணும் என்பதும் காரணம்.
மத்தபடி ஸ்டாலின், நடிகர்கள் வரவேற்று அறிக்கை கொடுப்பதைப் பார்த்து சிரிப்பு வருகிறது. ஏரிகளையும் விளைநிலங்களையும் அழித்துவிட்டு, விவசாயிகளின் நன்மைகளை இவங்க நினைக்கறாங்களாம். சந்தடி சாக்கில், தேசவிரோதத்திற்குத் துணை போவதற்கு CAAவையும் நீக்கணும்னு அறிக்கை விடறாங்க.
The worst thing is…
No farmer is ready to believe the PM’s Request/Message and urge him to put a paper on the floor of Parliament, so that they can trust his words.
இதைவிட கேவலம் எந்த ஒரு பிரதமரும் சந்தித்ததில்லை.
சில செய்திகளில் படித்தேன் 700 பேர் இந்த போராட்டத்தில் தங்கள் உயிரை இழந்தார்கள் என்று அது உண்மை என்றால் தினந்தோறும் இருவர் வீதம் கடந்த ஒரு வருட காலமாக தங்கள் உயிரை இழந்து இருக்கிறார்கள், அப்படி என்றால் இந்த சமூகம் இதைப் பார்த்துக்கொண்டு மவுன பார்வையாளர்களாக இருந்தார்களா என்கின்ற கேள்வி நம் முன்னால் இப்போது!!
இது என்ன கேள்வி? லட்சக்கணக்கில் ஈழத்தில் படுகொலை நடந்தபோது மழை முடிந்து தூவானம் என்றவர்களை ஆதரித்த சமூகம் இது.
லட்சத்திற்கு மேல் சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது, ஆலமரம் விழும்போது சில செடிகள் அழிவது இயற்கைதான் என்று சொன்ன ராஜீவ்காந்தியை ஆதரித்த சமூகம் இது
இது மாதிரி பலப் பல கேள்விகளை எழுப்பலாம்.
ஏகப்பட்ட சட்டங்களை நீக்காத பிரதமர், (#பணமதிப்பு இழப்பை திரும்ப பெறாதவர் #CAA NRC NPR சட்டங்களை திரும்ப பெறாதவர் #370 சட்டப் பிரிவை ரத்து செய்து, அதை திரும்ப பெறாதவர் #முத்தலாக் விஷயத்தில் உறுதியாக இருந்தவர்) இப்போது விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். இதனை மெதுவாக அறியமுடியும்னு தோன்றுகிறது
உங்கள் அத்தனை கேள்விகளும் உண்மை ஆனால் நான் கேட்க விரும்புவது 700 பேர் இந்தப் போராட்டத்தில் இறந்தார்கள் என்றால் அது ஏன் விவாதிக்கப்படவில்லை?