
இன்றைய இந்தியாவை ஆட்டி வைப்பது யார்….?
அரசியல்வாதிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், பாஜகவோ, காங்கிரசோ – எது ஆட்சியில்
இருந்தாலும், உண்மையில் ஆள்வது அவர்கள் தானா ….?
அல்லவே… அவர்களை உண்மையில் இயக்குபவர்களின்
முகங்கள் வெளியே தெரியாது…
எனவே, நம்மில் பெரும்பாலாருக்கு அவர்களைத் தெரியாது.
பெரும் பணக்காரர்கள்…
மேலும் மேலும் செல்வத்தைக் குவித்துக்கொண்டே போகிறவர்கள் –
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் –
அவர்களுக்கு கவலை இல்லை….
ஏனெனில், யார் வந்தாலும், அவர்களை இயக்குவது –
இவர்களாகத்தான் இருக்கும்…..
அந்த “இவர்களில்” முதன்மையில் இருப்பவர்கள் –
முந்தைய இந்திரா காந்தி அரசால் துவக்கத்தில்
வளர்க்கப்பட்டவர்கள்…. இன்றைய அரசால் தொடர்ந்து
வளர்ந்து கொண்டிருப்பவர்கள் –
(இப்போதைய தலைமையால், உருவாக்கப்பட்டு
வளர்ந்து கொண்டிருப்பவர்கள் – இதற்கு அடுத்த நிலையில்
இருப்பவர்களே…!!!)
இவர்களின் முழு விஸ்தீரணத்தை விவரிப்பது கடினம்.
ரிலையன்ஸ் குழு – உண்மையில் எவ்வளவு பெரியது…..?
வீடியோவை பார்த்தால் – ( கொஞ்சம் … !!! ) – தெரிய வரலாம்….!!!
முதலில் இருப்பிடம்….
பின்னர் தொழிலிடம் –
………..
………………………
.
……………………………………………………………………………………………………………….……..
எந்த தேசத்தையும் அந்த தேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஆட்டுவிப்பதாக எப்போதுமே புகார்கள் உண்டு. அமெரிக்கா யுத்தங்களில் ஈடுபட அந்த நாட்டின் ஆயுத வியாபாரிகள்தான் முக்கியக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.
அரசியலுக்கு பணம் வேண்டும். தேர்தல் சமயத்தில் ஏராளமான பணம் விளையாடுகிறது. அதற்கு தொழிலதிபர்கள் பணம் வழங்குகின்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுக்கு ஏற்றவாறு சட்டங்கள் போடப்படுகின்றன. இடையில் ஊழல் வேறு.
ஒரு நிலையில் அரசியல் ஆதரவு எந்தத் தொழிலுக்கும் தேவைப்படுகிறது. நமக்கு கண்ணில் ரிலையன்ஸ் போன்றவைகள் தெரிகின்றன… தமிழகத்தில் கேடி பிரதர்ஸ், இந்தியா சிமிண்ட்ஸ், … என்று ஏகப்பட்ட தொழிலதிபர்கள் அரசியல் ஆதரவுடன் வளர்ந்திருக்கிறார்கள். அகில இந்திய தொழிலதிபர்களோ உள்ளூர் தொழிலதிபர்களோ, அவர்கள் தொழிலில் ஏகப்பட்ட அரசியல் முதலீடுகள் இருக்கின்றன.
சமீபத்தில் படித்தேன்… அம்பானி, லண்டனில் வாங்கியிருக்கும் பங்களாவில் ஆறு மாதம், மும்பையில் ஆறு மாதம் என்று வாழப்போகிறாராம்… என்ன இருந்தாலும் இந்தத் தொழிலதிபர்களால் கோடீஸ்வரரான மக்கள் லட்சக்கணக்கில் உண்டு (ஷேர் வாங்கி அதில் லாபம் சம்பாதித்து).
புதியவன்,
சிமெண்ட் ஸ்ரீநிவாசனைப்பற்றியோ,
மாறன் சகோதரர்களைப் பற்றியோ –
ஏன் – அடானியைப் பற்றியோ கூட,
இந்த மாதிரி தெளிவான, ஆவண பூர்வமான
ஆதாரங்கள் வெளியே வருவதில்லையே … ஏன்…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அதானியைப் பற்றி இப்போதில்லாவிட்டாலும் பிறகு வரும் என நினைக்கிறேன். மற்ற இருவரும்—–வர வாய்ப்பே இல்லை, சாராய ஆலைகள் திமுகவினருக்குச் சொந்தமானது, டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானது, அதன் ஷேர்கள்…. இவருக்கும் உண்டு என்பது போன்ற விஷயங்கள் எப்போதுமே வெளிவர வாய்ப்பில்லாததைப் போல