…
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு
அரசு உணவளிக்கும் பழக்கம், சில வருடங்களுக்கு முன்
ஏற்பட்டது தானே….
அதற்கு முன்னர் …?
சமூகநல அமைப்புகள் சில சிறிய அளவில்
இந்த செயலில் ஈடுபட்டிருந்தன…
1960-ல் முதல் முறையாக திரையுலகம் இதில் அக்கறை
காட்டியது… அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர்
சிவாஜி கணேசன்.
தன் வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே பெரிய அளவில்
தற்காலிக சமையல்கூடத்தை நிறுவி, ரசிகர்கள், சமூக சேவகர்களின்
உதவியுடன், பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் ஆயிரக்கணக்கான
பேர்களுக்கு உணவளித்தார். மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு
திரும்பும்வரை தொடர்ந்து இதைச் செய்தார்…
தனது வீட்டில் நடக்கும் சமையலை,
சிவாஜியே, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு –
மேற்பார்வையிடும் ஒரு அபூர்வ புகைப்படம் கீழே –

ஏதோ அந்தக் காலத்துல சிவாசி, எம்சார்லாம் தங்களின் நல்ல நிலைமைக்கு மக்களும் முக்கியக் காரணம், தாங்களும் ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட்டவர்கள்தாம் என்பதை உணர்ந்து, மக்கள் கஷ்டப்படும்போது உதவினார்கள். அதுக்காக இப்போதைய நடிகர்களெல்லாம் இப்படி சொந்தக் காசுல உதவணும்னு எதிர்பார்க்கலாமா?
அதுக்குத்தான் இப்போதைய நடிகர்கள் அரசியலுக்கு வர்றாங்க. அவங்களை முதலமைச்சராக மக்கள் ஆக்கினால், அரசு கஜானாவிலிருந்து மக்களுக்கு இலவச உணவு போன்றவற்றைச் செய்து தருவாங்க. புல்லுக்குப் போகும் வாய்க்கால் வழிந்தோடி நெல்லுக்கும் போகுமாறு அவங்க பார்த்துப்பாங்க.