அய்யோ …!!!

கீழே உள்ள வீடியோவை பாருங்கள் –

இவர்களை நம்பி வாங்கிச் சாப்பிடுகிறோமே –
தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி
இருக்கிறதா….?

இத்தனைக்கும், இவர்களது கம்பெனி வெப்சைட்’டில் பெருமையோடு சொல்லிக்கொள்கிறார்கள் –

” By delivering best products holding ourselves responsible and accountable, we have earned the trust of millions of families across generations. “

இந்த மாதிரி உணவுப்பண்டங்களை உற்பத்தி செய்யும் இடங்களை சம்பந்தப்பட்ட நகர, மாநகர சுகாதார அதிகாரிகள் அடிக்கடி சோதனை (inspection) செய்ய வேண்டியது மிக மிக அவசியம்… சுகாதாரக்கேடு விளைவிக்கக்கூடிய விதத்தில் அவர்கள் உற்பத்தி முறையோ, செயல்பாடுகளோ இருந்தால், எந்தவித சமரசமும் இன்றி அவர்களின் லைசென்ஸு ஒருகுறிப்பிட்ட கால அளவிற்காவது ரத்து செய்யப்பட வேண்டும். அதிக பட்ச அபராதமும் விதிக்கப்பட வேண்டும்….

இனியாவது உரிமையாளர்கள் அக்கறையோடு
செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்….

இவர்களது உற்பத்தி இடங்கள், அடிக்கடி கண்காணிக்கப்பட வேண்டும். 2- வது முறையோ, 3-வது முறையோ கண்டுபிடிக்கப்பட்டால், தண்டனை பலமடங்கு அதிகரிக்கப்படுவதுடன், லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும்.

இந்த மாதிரி செய்திகளுக்கு அதிகபட்சம் விளம்பரமும் கொடுக்கப்பட வேண்டும்…. வியாபாரம் பாதிக்கப்பட்டால் தான் அவர்கள் திருந்துவார்கள்.

………….

.
………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to அய்யோ …!!!

 1. Tamil சொல்கிறார்:

  அரசியல் கலப்படமாக மாறிவிட்டது அதனால் இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாது.

 2. கந்தவேல் சொல்கிறார்:

  இது போன்ற விடீயோக்களை பகிர்வது தான் அருவெறுப்பாக உள்ளது. எப்படியும் இவற்றை நாம் வாங்காமல் விடப்போவதில்லை. திருப்பதி லட்டுவும் இதைப்போன்று தான் காலால் மிதிக்கப்பட்டு பிசையப்படுகிறது. ரோட்டு ஓர கடைகளில் விற்கப்படும் பாணி பூரியுடன், சிறுநீர் பெய்யும் விடீயோவையும் பார்த்திருக்கிறேன்.
  மற்றும் அவர்கள் சாக்கடை தண்ணீரில் அவர்கள் தன் பாத்திரங்களை கழுவுவதையும் பார்த்திருக்கிறேன்.
  ஆனாலும் ரோட்டோர கடைகளில் இன்னமும் நாம் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறோம்.
  அடுத்தவர்கள் வீட்டு சமையலறையை எட்டி பார்க்க கூடாது என்பதே நான் கற்று கொண்ட பாடம்.
  நாம் சாப்பிட்டோமா , பசியாற்றி கொண்டோமா என்று இருப்பதே உத்தமம்.
  ரெய்டு நடத்திய அதிகாரிகளுக்கு , தகுந்த சன்மானம் பெற்று கொள்வார்கள். ஒரு வேளை , அவர்களுக்கு, இந்த மாதம் சன்மானம் காலதாமதம் ஆகிவிட்டது போலும்.

  • புதியவன் சொல்கிறார்:

   தவறாக எழுதவேண்டாம். திருப்பதி லட்டல்ல..அது ஓரளவு ஆட்டமேடட் ப்ராசஸ்.. முன்பு பழனி பஞ்சாம்ருதம் அப்படி கால்களால் நசுக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது (இப்போது அந்த வழிமுறை மாறியிருக்கும் என நினைக்கிறேன்) திருமணங்களின்போது காய்கறிகளை எப்படி வெட்டுகிறார்கள் என்று பார்த்தால் (கழுவவே மாட்டார்கள், சுத்தக் குறைவு) சாப்பிடவே தோன்றாது.

   Kitchenஐ எட்டிப்பார்த்தால் எங்கேயும் நாம் உணவு உண்பது கடினம். எல்லா இடங்களிலும் கீரை, காய்கறிகளின் மேல் ஃப்ரெஷ் உணர்வைத் தர, தெருக்கடைகளில் சாக்கடைத் தண்ணீர்தான் விடப்படுகிறது. பலமுறை நான் இதனைப் பார்த்திருக்கிறேன். காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்றவை கெமிக்கலில் முக்கி எடுக்கப்படுகின்றன, அதில் உள்ள பூச்சிகள் சாகவேண்டும் என்று. International அளவில், பால் உற்பத்தி, அந்த இண்டஸ்ட்ரியில் நடப்பவைகளை நாம் பார்த்தால், பாலைக் குடிக்கவே மனம் ஒப்பாது.

 3. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… இப்போது இண்டஸ்ட்ரியில் போட்டி அதிகமாகிவிட்டதால் அடுத்த பிராண்டைக் காலி பண்ணுவது நடக்கிறது. ஜவ்வரிசி, சேமியா – இவைகளின் ப்ராசஸ் ஒன்றேதான். இனிப்புகள், சோன்பப்டி போன்ற பலவகைகள் எப்படிச் செய்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்தால் அதன் பக்கமே நாம் போகமாட்டோம். ஆச்சி மசாலாவின் கெமிக்கல் கண்டெண்ட் மிக மிக அதிகம் என்று கேரளாவில் அதனைத் தடைசெய்திருக்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s