சும்மா செலவழிங்க – அப்பன் வீட்டு பணமா போகுது….!!!

ஒரே ஒரு கவலை தான்….
நம்ம ஊர் தலைவர்கள் கண்களில் இந்த செய்தி பட்டால் …?

………………………………………………….


ஒரு செய்தி படித்தேன்… ஊதாரித்தனத்திற்கும்,
உதவாக்கரை அரசியல் தலைவர்களுக்கும் இதை விட
சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், திருவாளர் சிவ்ராஜ் சிங்
முதலமைச்சராக உள்ள அந்த மாநில அரசு ஒரு நிகழ்ச்சியை
ஏற்பாடு செய்திருக்கிறது…

ஜஸ்ட் – 4 மணி நேர நிகழ்ச்சி… செலவு …?
23 கோடி ரூபாய் அரசுப்பணம் …!!!

மத்திய பிரதேச பழங்குடி மக்களின் அபிமான தலைவர்,
பகவான் பிர்சா முண்டாவின் நினைவாக மத்தியப் பிரதேசம்
” ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் ” என்ற நாளை நவம்பர் 15 ஆம் தேதி கொண்டாடுகிறது… இது பழங்குடி மக்களுக்கான விழா.

ஜம்போரி மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மக்களை
அழைத்துச் செல்ல மட்டுமே மத்திய பிரதேச அரசால் 13 கோடி செலவிடப்படுகிறது.

ஜம்போரி மைதானம் மிகப்பெரிய இடம். எனவே இந்த
மைதானத்தை நிரப்புவதற்காக, மத்தியப் பிரதேசம் முழுவதிலும்
இருந்து இரண்டு லட்சம் பழங்குடியினர் இங்கு அழைத்து
வரப்பட உள்ளனர்.

மேலும் அந்த இடம் முழுவதும்
பழங்குடியினரின் கலை மற்றும் பழங்குடி புராணங்களின்
படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஒரு
வாரமாக 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

52 மாவட்டங்களில் இருந்தும் அழைத்து வரப்படும் பழங்குடி
மக்களின் போக்குவரத்து, உணவு மற்றும் தங்கும் வசதிக்காக
ரூ.13 கோடியும், ஐந்து குவிமாடங்கள், கூடாரங்கள்,
அலங்காரம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்காக 9 கோடிக்கு
மேலும் (தண்ட …?)செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது….
( இது அரசின் செலவு மட்டும்…!!!)

இவ்வளவு பொருட்செலவில், அமர்க்களமாக ம.பி.அரசு இந்த
கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்வதற்கான அவசியம் என்ன
என்று கேட்கிறீர்களா….?

இருக்கிறது ….. சோழியன் குடுமி சும்மா ஆடுமா…?

ம.பி. மாநிலத்தில் பழங்குடியினருக்கு 47 சட்டமன்ற தொகுதிகள்
ஒதுக்கப்பட்டுள்ளன.

2008- ல் பாஜக இதில் 29-ல் வெற்றி பெற்றது;
2013- ல் இந்த எண்ணிக்கை 31ஆக அதிகரித்தது,
ஆனால் 2018ல் 47-ல் பாஜக 16 இடங்களை மட்டுமே பெற்றது.

இந்த நிலையில்தான், பழங்குடியினரின் ஓட்டுகளை கவர்ந்திழுக்க,
அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு
விசேஷ கவனம் கொடுக்கிறார் பழங்குடி இன மக்களின் மீது
( அதாவதுஅவர்களின் 47 சீட்டுகளின் மீது … )
மிகுந்த அக்கறை கொண்ட முதல்வர் திருவாளர் சிவராஜ் சிங் சவுகான்…!!!

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to சும்மா செலவழிங்க – அப்பன் வீட்டு பணமா போகுது….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    ஆக்கபூர்வ செலவுகளைத் தவிர (அதுவும் என் opinion L&T மாதிரியான கம்பெனிகளுக்கு மட்டும்தான் கட்டிடவேலை கொடுக்கவேண்டும். உள்ளூர் காண்டிராக்டர்கள் எல்லோரும் ஊழல் பேர்வழிகள்) வேறு எல்லாச் செலவுகளையும் கட்சிகள்தான் செலவு செய்யணும் என்று கொண்டுவந்தால் தேவலை. இல்லைனா, ஆயிரக்கணக்கான கோடிகளைச் சேர்த்துவைத்த சொந்த அப்பனையே அரசு செலவில் மருத்துவமனையில் போட்டு, காசைச் செலவழிக்காமல் இருக்கும் அயோக்கியர்கள் அரசியலில் இருக்கும் காலம் இது.

  2. Tamil சொல்கிறார்:

    தமிழகத்தில் ஊழல் செய்த பணத்தை நடக்கிறது இங்கே நேரடியாக அரசு பணத்தில் நடக்கிறது அதுதான் வித்தியாசம்.

    • புதியவன் சொல்கிறார்:

      பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை, ஐந்து நிமிடங்களுக்கு மாஸ்க் என்றால் என்ன, அதை எப்படிப் போடணும் என்றெல்லாம் முதலமைச்சர் வகுப்பு எடுக்கும் தொலைக்காட்சி விளம்பரங்களெல்லாம் அந்த அந்தத் தொலைக்காட்சிகளே இலவசமாகப் போடுகின்றதோ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.