கட்சிக்காரரிடமே 15 % கமிஷன்-மூத்த திமுக நிர்வாகி – முதல்வரிடம் புகார் ….!!!

15 % கமிஷன் என்றால், நாலரை லட்ச ரூபாய் டெண்டருக்கு
67,500 ஆகிறது…. ஒரு சின்ன பஞ்சாயத்தில், ஒரே ஒரு டெண்டரில்
நிலை இப்படி….

இன்று வெளிவந்துள்ள ஒரு பத்திரிகைச் செய்தி –

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீதி கேட்டு எழுதியுள்ள கடிதம் மேலே –

ஆலங்குடி பகுதியில் திமுகவை வளர்த்த தன்னிடமே திமுக
ஆட்சியில் 15% கமிஷன் கேட்கப்படுவதாக அந்த கடிதத்தில்
புகார் கூறப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடியை
சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் திமுக பொதுக்குழு உறுப்பினராக
இருந்ததுடன் ஆலங்குடி நகர திமுக செயலாளராக இரண்டு முறை
இருந்தவர். இதுமட்டுமல்லாமல் ஆரம்பக்காலத்தில் திமுக
இளைஞரணி ஒன்றிய அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

மேலும், இவரது மனைவி குமுதவள்ளி ஆலங்குடி பேரூராட்சி
தலைவராக கடந்த 1996-2001 வரை பதவி வகித்திருக்கிறார்.
தலைமை அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தவறாது
கலந்துகொண்டு ஆலங்குடி பகுதியில் திமுகவை வளர்க்க
சொந்த நிதியை கணக்கு வழக்கில்லாமல் செலவும் செய்திருக்கிறார்.

இப்படி திமுகவில் ஆஹா ஓஹோவென ஒரு காலத்தில் இருந்த
இவர் இப்போது அடிப்படை உறுப்பினராக மட்டும் இருக்கிறார்.
இந்நிலையில் ஆலங்குடி பேரூராட்சியில் ஓடை பாலம்
கட்டுவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டதை அறிந்து 3 ஓடை
பாலங்களை கட்ட டெண்டர் போட்டிருக்கிறார். ஒரு
ஓடை பாலத்தின் திட்ட மதிப்பு ஒன்றரை லட்சம் என்ற வீதத்தில்
மூன்று ஓடை பாலத்தின் திட்ட மதிப்பு நான்கரை லட்சம்
என பேரூராட்சி நிர்வாகம் எஸ்டிமேட் கொடுத்துள்ளது.

( நாலரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள டெண்டருக்கு
15% கமிஷன் என்றால் 67,500 ரூபாய்…கமிஷன் கொடுக்க
வேண்டும்…இது தலைமைக்காக பெறப்படுவதாக,
லஞ்சம் கேட்ட திமுக தலைவர் சொல்லி இருக்கிறார்…!!!)

10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக இருந்ததால் எந்தப் பணியையும்
எடுத்துச்செய்ய முடியாமல் இருந்த சத்தியமூர்த்தி, இப்போது
நடப்பது நம்ம ஆட்சி என்ற அதீத நம்பிக்கையில் அந்த ஓடை
பாலங்களுக்கான பணியை தாம் செய்வதாக கேட்டிருக்கிறார்.

” செய்யுங்கள் ஆனால் 15% கமிஷன் கொடுத்துவிட்டு செய்யுங்கள் “
என செக் வைத்திருக்கிறார் ஆலங்குடி பேரூராட்சி திமுக நகரச்
செயலாளர்.

என்னப்பா இது என்னிடமே இப்படி கேட்கிறீர்கள், கட்சிக்காக
நாயாக பேயாக உழைத்த எனக்கே இந்த நிலையா என தனது
ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.

15% கமிஷன் எனினும் கட்சிக்காரன் என்ற அடிப்படையில்
கமிஷன் தொகையை கூட குறைத்துக் கொள்ள மறுத்த
ஆலங்குடி திமுக நகரச் செயலாளர் பணம் இல்லை என்றால்
வேலை இல்லை என முகத்தில் அடித்தது போல் கூறி
அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது
உள்ளக்குமுறலை கொட்டித்தீர்க்கும் வகையில் சத்தியமூர்த்தி
எழுதியுள்ள கடிதத்தில், ஆலங்குடி பேரூராட்சியில் ஒப்பந்தப்
பணிகளுக்கு நான் டெண்டர் போட்டால், 15% தனியாக லஞ்சம்
கேட்பதாக தெரிவித்திருக்கிறார்.

மேலிடம் என்றால் யார்….?

மேலிடத்திற்காக பணம் வாங்கியபிறகே டெண்டரை
உறுதிப்படுத்த முடியும் என கூறுவதாகவும் தனக்கு தற்போது
வயது 67 ஆவதாகவும் தன்னை போன்ற – கட்சியை
வளர்த்தவர்களுக்கே இந்த நிலை என்றால் திமுக எப்படி வளரும்
என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதே நிலை நீடித்தால் பேரூராட்சி தேர்தலில் திமுக பலவீனம்
அடையும் என ஸ்டாலினை அவர் எச்சரித்திருக்கிறார்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மேலிடமாக இருந்தாலும்
கூட அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்
என ஸ்டாலினை திமுக நிர்வாகி சத்தியமூர்த்தி கேட்டுக்
கொண்டுள்ளார்.

சத்தியமூர்த்தி விளக்கம் –

இதனிடையே இது தொடர்பாக பேசிய ஆலங்குடி திமுக நிர்வாகி
சத்தியமூர்த்தி, ”அந்தக் கடிதத்தில் என்ன
எழுதியிருக்கிறேனோ அது முழுவதும் உண்மை. எனக்கு
ஒன்றும் யாரைக் கண்டும் பயம் கிடையாது. நான் யாரிடமும்
அஞ்சு பைசா அனாமத்தாக எதிர்பார்க்கமாட்டேன். கட்சிக்காக
பல வருஷம் உழைச்சும் நான் எதையும் – பெரிசா – சம்பாதிக்கலை,

என் மகன் படித்து அவர் பெறக்கூடிய ஊதியத்தில் தான்
வீடே கட்டினோம். தலைவருக்கு நான் இப்படி ஒரு கடிதம்
எழுதியது தெரிந்ததும், பல இடங்களில் இருந்து கட்சியினர்
அழைத்து அண்ணே நாங்க சொல்ல முடியாதை நீங்க
சொல்லீட்டீங்க எனக் கூறுகின்றனர்.

……………………………………………………………………………………………………………………..


15 % லஞ்சம் கேட்டதே அக்கிரமம்….
அதுவும் அது திமுக தலைமைக்காக வாங்கப்படுகிறது
என்று சொன்னது அதைவிட பெரிய அக்கிரமம்….

பாதிக்கப்பட்டவருக்காக இல்லாவிட்டாலும் –

திமுக தலைமையின் பெயரைக் கெடுக்கிறார்
என்பதற்காகவேனும், ஆலங்குடி திமுக நகரச் செயலாளர் மீது
திமுக தலைமை உடனடி நடவடிக்கை எடுக்குமா…? அல்லது –

ஆட்சிக்கு வந்ததன் பயனை கட்சி நிர்வாகிகள் அனைவரும்
அனுபவிக்கட்டும் என்று கொள்கை முடிவெடுத்து,
விட்டு விடுமா ….!!!

இந்த மாதிரி இன்னும் எத்தனை பஞ்சாயத்துகளோ,
எவ்வளவு ஓடைப் பாலங்களோ….?

5 மாதத்திலேயே இப்படியென்றால் – 5 வருடத்தில்
இவை எந்தெந்த ரூபத்தில் வளருமோ….?

உடனடியாக, வெளிப்படையாக – திமுக தலைமை
நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்,
இந்த எலிகள் பெருச்சாளிகளாக மாற அதிக நாட்களாகாது…

.
…………………………………………………………………………………………………………………..….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to கட்சிக்காரரிடமே 15 % கமிஷன்-மூத்த திமுக நிர்வாகி – முதல்வரிடம் புகார் ….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    திமுகவை வளர்த்தாராம். இவருக்கு காண்டிராக்ட் வேண்டுமாம். உடனே புத்தம் புதிய ரோடுகள், ஒப்பந்தப் பணிகளை சூப்பராகச் செய்துவிடுவாராம். நல்ல வேடிக்கை.

    ஒவ்வொரு தேர்தலுக்கும் இவ்வளவு செலவழிப்பேன் என்று திமுக தலைமையிடம் சொல்லி சீட் பெறுபவர்களுக்கு எதுக்கு சீட் கொடுக்கறாங்க? செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன், எ.வ.வேலு, நேரு…. என்று முடிவில்லாத லிஸ்டுகளுக்கு ஏன் சீட் கொடுக்கறாங்க? தமிழகத்தை அமெரிக்காவாக ஆக்குவதற்கா?

    கட்சிக்கு உழைச்சாராம், கமிஷன் குறைக்கணுமாம்… நல்ல ஜோக்

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அவரது கோரிக்கையில் நியாயம் இருக்கிறது….

    ஆட்சிக்கு வந்தால்,
    கட்சிக்காரர்கள் சம்பாதிக்க
    அனுமதிக்கப்படுவார்கள் என்றால் –

    அது கட்சியிலுள்ள சகலமானவர்களுக்காகவும்
    இருக்க வேண்டும்…. ” முந்நாள் ” – ” இந்நாள் ”
    நிர்வாகிகள் என்று பாகுபாடு காட்டப்படுவது
    நியாயமல்லவே…

    குறைந்தபட்சம் “முந்நாள்”களுக்கு கமிஷனில் – ஒரு
    50 % தள்ளுபடியாவது தரப்பட வேண்டும்… அல்லவா…!!!

    • புதியவன் சொல்கிறார்:

      புலன் விசாரணை என்ற தன் முதல் படத்தை இயக்குநர் செல்வமணி இயக்கி வெற்றிப்படமாக ஆக்கியபோது (விஜயகாந்த்/இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பு), தயாரிப்பாளர் ஜீவி, அடுத்த படத்தை இயக்க செல்வமணிக்கு (புலன் விசாரணைக்கு 10,000 ரூ க்கும் குறைவான சம்பளம்) 2 1/2 (ஆ அல்லது 25 லட்சம் என்றுதான் நினைவு) லட்சம் சம்பளம் தர்றேன்னு சொன்னாராம். ஆனால் அதற்குள் விஜயகாந்திற்கே அடுத்த படத்தை இயக்க வேண்டிய நிர்ப்பந்தம், 14,000 ரூபாய் சம்பளத்தில். அதற்குப் பிறகு உங்களுக்கு இயக்குகிறேன் என்று சொன்னபோது, இந்த 25 லட்சம், உங்களின் முதல்பட வெற்றியினால். இதே ஆஃபர் பிறகு கிடையாது, அது உங்களின் இரண்டாவது படத்தின் ரிசல்டைப் பொறுத்தது என்றாராம்.

      வியாபாரத்தில், அன்று என்ன மதிப்பு என்பதுதான் முக்கியம்.

      முந்நாள்களுக்கு மரியாதையெல்லாம் அரசியலில் கிடையாது. அவர்களை 2கிலோ இறால் வாங்கிக்கொடுத்தால் வீட்டைக் கழுவி விடக்கூட வருவார்கள் என்று இழிவுபடுத்தினாலும் திமுக கட்சித் தலைமை கண்டுகொள்ளாது.

      ஆனால் அதிமுகவில், கடைக்கோடி நிர்வாகி வரை கவனித்துக்கொள்ளப் படுவார்கள் என்பதுதான் நான் கேட்டறிந்தது.

  3. bandhu சொல்கிறார்:

    இதை இரண்டு விஷயமாக பார்க்கிறேன்.

    முதலாவது, இந்த மாதிரி பணிகளுக்கு 15% கமிஷன் கேட்கப்படுகிறது என்பது. இவர் கடிதத்தையே ஆதாரமாக கொண்டு லஞ்ச ஊழல் வழக்கு தொடர முடியுமா என்று பார்க்க வேண்டும்.

    இரண்டாவது கட்சிக்கு ‘உழைத்த’ ஒருவருக்கு அநியாயம் நடக்கிறது என்பது. அவர் பொது நன்மைக்கா செலவு செய்தார். பின்னால் வரப்போகும் நன்மைக்கு செய்தார். அந்த நன்மை கிடைக்காதபோது வயறு எரியத்தான் செய்யும்! ஆனாலும், இது வெறும் உள்கட்சி விவகாரம். அதில் கருத்து சொல்ல நமக்கு ஒன்றும் இல்லை.

    எப்போதையும் விட இப்போது கட்சி நடத்துவது பெரிய செலவு பிடிக்கும் விஷயம். அப்போதெல்லாம், ‘உடன்பிறப்புகளே’ ‘ரத்தத்தின் ரத்தங்களே’ போன்ற முழக்கங்களை கேட்டு ஒரு டீ குடித்தபடி பல மணிநேரம் உழைக்க பலர் தயாராக இருந்தார்கள். இப்போது அப்படியா? கை மேல் காசு வாயில் தோசை பாலிசிதான் எங்கும்.

    அதனால், ‘ஒரு காலத்தில் கட்சிக்கு செலவு செய்தேன்’ ‘தடியடி வாங்கினேன்’ ‘சிறைக்கு போனேன்’ என்பதெல்லாம் ஒரு குவாலிஃபிகேஷனே இல்லை!

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த செய்தியை,
    எந்த தமிழ் தொலைக்காட்சியிலாவது /
    செய்திப் பத்திரிகைகளிலாவது,
    யாராவது பார்த்திருக்கிறீர்களா…?
    ——————————————————————————————

    DMK WORKERS ATTACK RESIDENTS
    PROTESTING OVER SEWAGE ENTERING HOUSES

    ———————————-

    A DMK cadre trying to cross the
    road on his two-wheeler picked up
    an argument with one of the
    residents. Ten more DMK cadres
    from the MLA office reached the
    spot and started attacking the public.

    CHENNAI: Residents of Devananthan
    Street in Mandaveli staged a
    protest on Friday morning demanding
    that officials clear the water mixed
    with sewage entering their houses.

    However, the protest turned violent
    as DMK cadres attacked them for
    blocking the road. DMK MLA of
    Mylapore constituency D Velu later
    visited the spot and promised
    to clear the waterlogging.

    For four days, there has been
    no power supply and residents have
    pooled in several thousands of
    rupees to arrange diesel for
    the motor to pump out water from
    their streets.

    While two trucks from the CMWSSB
    reached the spot to clear water
    from the streets, they disappeared
    after the MLA left the spot.

    The residents are still hoping
    that the waterlogging would be
    cleared.

    ( LINK – https://www.newindianexpress.com/cities/chennai/2021/nov/12/dmk-workers-attack-residentsprotesting-over-sewageentering-houses-mla-promises-action-2382757.html )
    —————————————————————————————————-

    • புதியவன் சொல்கிறார்:

      தமிழகத்தின் உண்மையான செய்திகளுக்கு வெளிமாநிலப் பத்திரிகைகளைத்தான் படிக்கணும். தமிழகத்தில் இருப்பதெல்லாம் காசுக்கு விலைபோன ஊடகங்கள். ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இந்த வியாபாரிகளால் உண்மையை என்றுமே உரக்கச் சொல்ல முடியாது.

      கோவாலசாமி, திருமா, மற்ற NGOக்கள் பெயரை வைத்துக்கொண்டு தேச விரோதக் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்த criptoக்கள் எல்லோருமே இப்போது திமுகவின் கொத்தடிமைகள். (நம்ம புளி முதல்கொண்டு). வாயைத் திறந்தால் ஆளே காணாமல் போய்விடுவார்கள் என்பதால் காலை நக்கிக்கொண்டு வாலை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

  5. Tamil சொல்கிறார்:

    நேற்று எனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன் அவர் கட்டிட வேலைகளை செய்கின்ற சிவில் இன்ஜினியர் அவர் சொன்னது, ரோடு மற்றும் கட்டிட வேலைகளுக்கு 50% வரை மேல்மட்ட அளவில் கமிஷன் பெறப்படுகிறது.

    எனவே இந்த 15 சதவீதம் என்பது மிக குறைவாக தெரிகிறது ,மேலும் இது இந்த ஆட்சியை விட குறைவாக இருக்கிறது என்கின்ற ஒரு பிம்பத்தை உருவாக்க கூட இப்படிப்பட்ட செய்தி கசிய விடப்பட்டு இருக்கலாம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.