” கட்சிக்காரர்கள் 10,000 பேருக்கு அரசு வேலை ” – என்று சொன்னால் சரியாக இருக்குமோ …?

  • .

செய்தித்தளத்திலிருந்து –

…………………………….

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் பாதுகாப்புக்கென 10,000 பாதுகாப்புப்
பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

முதுநிலை திருக்கோயில்களான ………………………
……………………………………
47 கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோயில்
வாரியாக எத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புக்கு
தேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று
வருகிறது.

முதுநிலை அல்லாத திருக்கோயில்களான ……………………
………………………………..
489 கோயில்களுக்கு பாதுகாப்புப் பணியாளர்களும்,

மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்
உள்ள அனைத்து கோயில்களிலும் –

பாதுகாப்புப் பணியாளர்களை
நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுப்புப்
பணிகள் திருக்கோயில் அலுவலர்கள் மூலம் நடைபெற்று
வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்தவுடன் முறையான
பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்”
என்று கூறப்பட்டுள்ளது.

…………………………………………………………………………………………………………………………

இந்த செய்தி குறித்து சில கேள்விகள் –

இப்போது இருக்கின்ற பாதுகாப்பு போதவில்லை என்று எந்த கோயில் நிர்வாகமாவது தெரிவித்துள்ளதா….?

தற்போது இந்தக் கோயில்களில் உள்ள பாதுகாப்பு பணியாளர்கள்
என்ன ஆவார்கள்….?

புதிய பாதுகாப்பு பணியாளர்கள் எந்த முறையில்,
யாரால் – தேர்ந்தெடுக்கப்படுவார்கள்….?

அவர்களுக்கான தகுதி என்ன…..?

கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு
இப்படி அவசியமற்ற 10,000 அரசுப் பணிகளை உருவாக்கி –
செலவினத்தை அதிகரிப்பது சரியா….?

ஏற்கெனவே இருக்கின்ற பணிகளுக்கு பொருத்தமான ஆட்களை
அமர்த்துவது சரியா – அல்லது –

தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும்
என்பதற்காக இல்லாத வேலைகளை புதிதாக
உருவாக்குவது சரியா….?

இந்தக் கேள்விகள் எல்லாம் கேட்கப்படுவது –


சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் அல்லது பதில் அளிப்பார்கள்
என்று எதிர்பார்த்து அல்ல –

பொதுவில் உள்ள மக்கள் யோசிக்க வேண்டும்
என்பதற்காகவே –

.
………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to ” கட்சிக்காரர்கள் 10,000 பேருக்கு அரசு வேலை ” – என்று சொன்னால் சரியாக இருக்குமோ …?

  1. புதியவன் சொல்கிறார்:

    கோயில்களில் எது முக்கியம் என்பது கூடத் தெரியாத இந்து எதிர்ப்பு அரசு ஒரு புறம். அதிலும் எப்படி காசு சம்பாதிக்கலாம், கட்சிக் காரனை நுழைக்கலாம் என்று யோசிப்பவர்கள் ஒருபுறம். எப்படி மாற்று மதத்தவர்களை நுழைப்பது என்று ஆராயும் அரசுத் தலைமை. இந்து கோவில் நிலத்தை மாற்று மதத்தின் கல்லூரிக்கு குத்தகைக்குக் கொடுத்து தன் இந்து மத எதிப்பைப் பதிவு செய்யும் ஸ்டாலின் அரசு. இதற்காகவே இந்து அறநிலையத்துறையைக் கலைத்து அதனை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரவேண்டும். அறங்காவலர்களை மத்திய அரசு அல்லது இந்து மத சார்பான அரசே செய்யவேண்டும், தற்போது பணியில் இருக்கும் மூத்த நீதிபதிகள் உள்ள குழுவினருடன். இதில் திமுக போன்ற இந்து எதிர்ப்பு கட்சிகளுக்கும் கொத்தடிமை கோவாலசாமி திருமா போன்றவர்களுக்கும் இடம் இருக்கக்கூடாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.