………


கீழே இருப்பது பத்திரிகை / தொலைக்காட்சி செய்திகள் –
November 10, 2021, டெல்லி:
ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் ஒருவருக்கு பல கோடி
லஞ்சம் கைமாறியது தெரிந்தும் கூட சிபிஐ எந்த நடவடிக்கையும்
எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாஸ்ஸால்ட் நிறுவனம் –
650 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுத்தாக பிரான்ஸ் செய்தி
நிறுவனமான மீடியாபார்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.
சுஷன் குப்தா என்ற இடைத்தரகருக்கு இந்த லஞ்சம்
கொடுக்கப்பட்டதாகவும், அவரின் உதவியுடன் இந்த ரபேல்
ஒப்பந்தம் இந்திய அரசுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் புகார்
வைக்கப்பட்டுள்ளது.
சுஷன் குப்தா என்ற இடைத்தரகருக்கு பொய்யான இன்வாய்ஸ்
மூலம் மொரீஷியசில் இருக்கும் Intersteller
Technologies என்ற பொய்யான நிறுவனத்தின் பெயரில்
இந்த லஞ்ச பணம் கைமாறியதாக மீடியாபார்ட் செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு லஞ்சம் கொடுத்து டீலிங்
முடிக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பண பரிவர்த்தனை விவரங்களை அந்த மீடியாபார்ட்
ஊடகம் வெளியிட்டுள்ளது. 2014க்கு முன் காங்கிரஸ்
ஆட்சியிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், சந்தேகத்திற்கு
உரிய பண பரிவர்த்தனை 2015-க்கு பின் பாஜக ஆட்சியில்தான்
செய்யப்பட்டதாக மீடியாபார்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.
அதேபோல் இது தொடர்பான ஆவணங்கள் 2018லேயே சிபிஐ
அமைப்பிற்கும், அமலாக்கத்துறைக்கும் கிடைத்துள்ளதாக
மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.
தெரிந்து நடவடிக்கை இல்லை – அதாவது ரபேல் ஒப்பந்தத்தில்
இடைத்தரகர் ஒருவருக்கு பல கோடி லஞ்சம் கைமாறியது
தெரிந்தும் கூட சிபிஐ இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
இருந்ததாக இதில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் இருந்து விஐபி
ஹெலிகாப்டர்கள் வாங்கிய ஊழல் வழக்கை 2018ல் சிபிஐ
விசாரித்து வந்தது. அந்த வழக்கை விசாரிக்கும் போது அதில்
சுஷன் குப்தாவிற்கு பணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த விசாரணையின் போது ரபேல் ஒப்பந்தத்திலும்
சுஷன் குப்தா லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் வழக்கை சிபிஐ
விசாரிக்கும் போது ரபேல் ஒப்பந்தத்திலும் சுஷன் குப்தாவிற்கு
பணம் கைமாறியது குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு
ஒப்பந்தத்திலும் இவர் லஞ்சம் பெற்றுள்ளார்.
ஆனால் இதை பற்றி தெரிந்தும் சிபிஐ நடவடிக்கை எதுவும்
எடுக்கவில்லை என மீடியாபார்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.
இதே குற்றச்சாட்டு இதே குற்றச்சாட்டு தற்போது என்டிடிவி
ஊடகம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக என்டிடிவி ஊடகம் வெளியிட்டுள்ள
விசாரணை கட்டுரையில், 2019-லேயே ரபேல் ஒப்பந்தத்தில்
சுஷன் குப்தாவிற்கு பணம் கைமாறியது சிபிஐக்கு தெரிந்துள்ளது.
அகஸ்டா வெட்ஸ்லேண்ட் வழக்கை சிபிஐ விசாரிக்கும்போது
தீரஜ் அகர்வால் என்ற நபரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இவர் ஐடிஎஸ் என்று நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சுஷன் குப்தாவிற்கு
முறைகேடாக பணம் கைமாற தீரஜ் உதவி உள்ளார்.
இதே தீரஜ் அகர்வால்தான் ரபேல் ஒப்பந்தத்திலும் டஸால்ட்
நிறுவனத்திடம் இருந்து லஞ்ச பணம் சுஷன் குப்தாவிற்கு
கைமாற உதவி உள்ளார்.
இதை சிபிஐ விசாரணையில்
2019-லேயே தீரஜ் அகர்வால் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
அதாவது சுஷன் குப்தா லஞ்சம் பெற்றார் என்று தீரஜ்
வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் இதை தெரிந்தும் சிபிஐ இதில் நடவடிக்கை
எடுக்கவில்லை. டஸால்ட் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது
தெரிந்தும் அதற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்யவில்லை சிபிஐ.
சிபிஐ அப்போதே நடவடிக்கை எடுத்து இருந்தால் டஸால்ட்
நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டு இருக்கும். இந்த
ரபேல் ஒப்பந்தம் ரத்தாகி இருக்கும். நீதி விசாரணையும்
நடந்து இருக்கும்.
ஆனால் டஸால்ட் நிறுவனம் லஞ்சம்
கொடுத்ததும் தெரிந்தும் சிபிஐ இதில் கண்டும்
காணாமல் இருந்தாக என்டிடிவி கட்டுரையில்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக
டாஸ்ஸால்ட் நிறுவனம் 650 மில்லியன் ரூபாய் லஞ்சம்
கொடுத்தாக பிரான்ஸ் செய்தி நிறுவனமான
மீடியாபார்ட் ஏற்கனவே குற்றஞ்சாட்டியது இங்கு
குறிப்பிடத்தக்கது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அடுத்தடுத்து
வெளியாகும் இந்த செய்திகள் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
https://mobile.twitter.com/sardesairajdeep/status/1458010147679137803
……………………………….
யார் இந்த சுஷேன் குப்தா …?
…………..
.
…………………………………………………………………………………………………………………………………………
650 மில்லியன் ரூபாய் = அறுபத்தி எட்டு கோடி, இதெல்லாம் ஒரு பணமா என்று நினைத்து விட்டார்களோ?
Tamil,
68 கோடி என்பது தரகருக்கு கிடைத்த கமிஷன் மட்டுமே…..
ஆட்சியில் இருந்தவர்களுக்கு கிடைத்த பணம் தனி…
அது இதைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும்…..அது எவ்வளவு
என்கிற விஷயம் என்றுமே வெளியே தெரிய வராது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில்,
பாரபட்சமற்ற ஒரு விசாரணை நடந்தால்….(எந்த ஜென்மத்தில்….?)
இரண்டு கட்சிகளின் உண்மை நிலையும் வெளிப்படலாம்….!!!
லஞ்சம், ஊழல் – என்பதெல்லாம் இங்கே பொது உடைமை மாதிரி.
எந்த ஒரு கட்சியும், தான் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது….
காங்கிரஸ் மட்டும் கமிஷன் பெற பாஜக விட்டு விடுமா….?
இங்கே தற்போதைய ஆட்சி 12 % கேட்கிறதாமே –
முந்திய ஆட்சியை விட 2 % -ஆவது கூட வாங்கா விட்டால்,
இவ்வளவு சிரமப்பட்டு ஆட்சியைப் பிடித்ததற்கு என்ன அர்த்தம்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//தற்போதைய ஆட்சி 12 % கேட்கிறதாமே –முந்திய ஆட்சியை விட 2 % //
இது எந்த மாதிரியான திட்டங்களுக்கு என்று தெரியவில்லை. சாலை போன்ற திட்டங்களில் 30% வரை பல இடங்களில் பெறப்பட்டதாக தகவல்.
“தேர்தலுக்கு உங்களால் எவ்வளவு பணம் செலவிடமுடியும்?” என்ற கேள்வியின் அடிப்படையிலேயே போட்டியிட வாய்ப்புப் பெற்றவர்கள் அவர்கள் செலவழித்த பணத்தை அறுவடை செய்யமுனைவதில் என்ன தவறு. இந்த விவரம் தெரிந்தும் அவர்களை தேர்ந்து எடுத்ததுதான் நாம் செய்த தவறு.