………………………………………………………….
இன்றைய செய்திகள் –
……………………….
மக்களைச் சந்திக்கும் முதல்வர் ….
ஒரு சூப்பர் ஐடியா – யார் தலையில் உதித்ததோ….!!!
ஒரு பகுதியில் மழை வெள்ள பாதிப்பை முதல்வர்
ஸ்டாலின் ஆய்வு செய்தபடியே வருகிறார்.. அங்கிருக்கும்
வீடுகளில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதவாறு,
கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது….
………..

…………………………………………………..
100 நாள் குடிநீர் ஒரே நாளில் கடலில் கலந்து வீண் –
…..
…..
சாப்பாடு வேணாம்! எங்க வீட வந்து பாருங்க –
கோரிக்கை வைத்த பெண்ணை கண்டுக்காத ஸ்டாலின்
…..
…..
.
………..
.
……………………………………………….
இன்றைய செய்தி –
அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் அருளியது –
எடப்பாடி பழனிசாமிக்கு கிரீன்வேஸ் சாலை,
தலைமைச் செயலக சாலை ஆகிய இரண்டு சாலைகளை
தவிர சென்னையில் வேறு எதுவுமே தெரியாது
———
சென்னையில் எந்தப் பகுதியில்
எதனால் தண்ணீர் தேங்கும் என்ற முழு விவரமும்
முதலமைச்சருக்கு தெரியும் என்பதால், அவரே
நேரடியாக களத்தில் இறங்கி மழைவெள்ள
நிவாரணப் பணிகளை கவனித்து வருகிறார்….
———-
(எனவே, வெள்ளம் வடியாவிட்டால்,
தண்ணீர் தொடர்ந்து சூழ்ந்திருந்தால்,
அதற்கு முதல்வரே முழுவதும் பொறுப்பு
என்று எ.வ.வே. சொல்கிறாரா…!!! )
—————————
சென்னையில், நுங்கம்பாக்கம் ஏரி, கோடம்பாக்கம் ஏரி, வியாசர்பாடி ஏரி… என்று 24 ஏரிகள் காணாமல்போய் உள்ளன அல்லது பரப்பளவு 70 சதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளன. கருணாநிதியே, வள்ளுவர் கோட்டத்தை நுங்கம்பாக்கம் ஏரிப்பகுதியில் அமைப்பதாகத்தான் விளம்பரம் கொடுத்திருந்தார். இந்த ஏரிகள் அனைத்தும் 1967க்குப் பிறகு காணாமல்போனவை.
வடிகால்கள் எதையுமே சென்னையில் அமைத்ததில்லை. சிங்கப்பூரைப் போல மாற்றுவேன் என்று மேயரானவர், சிங்கப்பூரை தன் வாழ்நாளில் பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை. சென்னையின் 100 நாள் தேவையான குடிநீர் கடந்த சில நாட்களாக கடலில் கலந்ததாம். இனி மே மாதத்தில் குடத்தைத் தூக்க ரெடியாக இருக்கவேண்டியதுதான். அதிலும் எல்லாம் தெரிந்த அமைச்சர் மா.சு, சென்னையின் நிலத்தடிநீர் மட்டம் ரோடு வரை உயர்ந்துவிட்டதால்தான் இந்த வெள்ளம் என்று சொல்லியிருக்கிறார்
“”” மா.சு, சென்னையின் நிலத்தடிநீர் மட்டம் ரோடு வரை உயர்ந்துவிட்டதால்தான் இந்த வெள்ளம் என்று சொல்லியிருக்கிறார் “”””
🙂 🙂 🙂
இப்போதைய முதல்வருக்கு சாம்பார் சாதம் கொடுக்க மட்டுந்தான் தெரியும்.
வெள்ளத்தை குறைக்க அவரால் நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால்தான்
அந்த பெண்மணிக்கு அவர் பதில் சொல்லவில்லை. சேகர்பாபு நிருபர்களை
கோபமாக பார்த்தது இன்னொரு நிகழ்ச்சியில் நடந்தது. இந்த அரசு மட்டுமல்ல
எந்த அரசாலும் சென்னையை வெள்ளத்திலுருந்து காப்பாற்ற முடியாது .
1967 முதல் சென்னையை சீரழித்த பெருமை இரண்டு கழகங்களுக்கும் உண்டு.
ஜெயலலிதா ஆட்சியில் வந்த மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒன்று தான் உருப்படியான திட்டம். சீனாவில் பரவலாக அமல்படுத்திக்கொண்டிருக்கும் sponge city இதற்க்கு ஒரு நல்ல முயற்சியாக அமைந்துள்ளது
புதிய தகவலை பகிர்ந்ததற்கு நன்றி
bandhu,
நல்ல காணொலியைத் தந்திருக்கிறீர்கள்.
நான் இந்த மாதிரி யோசனைகள் பற்றி படித்திருக்கிறேன்.
ஆனால், நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை இப்போது
தான் பார்க்கிறேன்.
ஆனால், இவையெல்லாம் நடக்க ஒன்று சர்வாதிகார ஆட்சி
வேண்டும் அல்லது உண்மையிலேயே பொதுமக்களுக்காக
உழைக்கக்கூடிய நல்ல தலைவர்கள் வேண்டும்.
இந்த இரண்டுமே நம் நாட்டில் சாத்தியமில்லை….!!!
எனவே தான் ஒவ்வொரு தேர்தலின்போதும் –
இருக்கிற கொள்ளிகளில் எந்த கொள்ளி தேவலை என்று
தேர்ந்தெடுத்து தலையை சொறிந்து கொள்கிறோம்….!!!
அடுத்த 5 ஆண்டுகளுக்கு எரிந்து கொண்டிருக்கிறோம்…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நாங்கள் மம்புட்டியை பிடித்து தூர் வாரணுமா….?
………………………………..
……………………………….
பின்ன… மத்த நிருபர்கள் (தொலைக்காட்சி, ஊடகங்கள்) மாதிரி ஜால்ரா போடாமல் கேள்வி கேட்க என்ன தைரியம் அந்த நிருபருக்கு. வந்தமா, பெட்டியை (அதாவது அரசு செயல்திட்டங்கள் விளக்கங்கள் அடங்கிய பெட்டி) வாங்கினமா, ஓசி டிபன் டீ சாப்பிட்டோமா என்று போகாமல், அமைச்சர்களையே கேள்வி கேட்பதா? நேர வானத்துக்குப் போய் மழையைப் பெய்யும் மேகத்தைக் கேள்வி கேட்க அந்த நிருபருக்கு தைரியம் இருக்கா? கொடுத்த லிஸ்டில் உள்ள கேள்விகளில் ஒன்றைக் கேட்காமல் இவரே யோசித்துக் கேள்வி கேட்பாராம்..அதற்கு அமைச்சர்கள் பதில் சொல்லணுமா? போய்யா போ… புள்ள குட்டிகளைப் படிக்க வைக்கிற வழியைப் பாருன்னு யாராவது அந்த நிருபருக்குச் சொன்னாத் தேவலை.
அந்தப் பேட்டியில் (முன்பே நான் பார்த்துவிட்டேன்) மாசு ஒருவர்தான் அமைச்சர் என்ற ஸ்தானத்தில் ஏதாவது பதிலைச் சொல்லணும் என்று முனைகிறார்.