
” டெல்லியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒரு நாய்
செத்தால் கூட அதற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் விவசாயிகள் மரணத்திற்கு யாரும் இரங்கல்
தெரிவிக்கவில்லை. விவசாய போராட்டத்தில் 600 விவசாயிகள்
வரை மரணம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு யாரும்
இரங்கல் கூட தெரிவிக்கவில்லை… ? “
நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது –
மேகாலயா மாநில கவர்னர் பதவியிலிருக்கும்
திருவாளர் சத்ய பால் மாலிக் இதையும்,
இதைவிட மிக மோசமான சில கருத்துகளையும் கூறி,
மத்திய அரசையும், பாஜக தலைமையையும்
வாய்க்கு வந்தபடியெல்லாம் சகட்டுமேனிக்கு
தாக்கிப் பேசி இருக்கிறார்…..
ஒரு கவர்னர் பதவியில் இருப்பவர் இந்த அளவிற்கு
தீவிர அரசியல் பேசுவது எப்படி ….?
அதுவும் மத்திய அரசுக்கு எதிராகவே….?
மத்திய அரசையும், பாஜக தலைமையையும் மிகக்கேவலமாக
குறை கூறிப்பேசும் ஒருவர் இன்னமும் கவர்னர் பதவியில்
நீடிப்பது எப்படி….?
இத்தனைக்கும் –
இவர் பெரிய அரசியல் தலைவர் எல்லாம் இல்லை…
after all ஒரு சுண்டைக்காய் மாநில கவர்னருக்கு
இப்படியெல்லாம் பேச எப்படி துணிச்சல் வருகிறது….?
இப்படியெல்லாம் பேசிய பிறகும்,
பதவியில் நீடிக்க அவர் அனுமதிக்கப்படுவது ஏன்…?
இது பலத்த சந்தேகத்தை கிளப்புகிறது……
பாஜக தலைவர்களில் யாருடைய ரகசியமாவது
இவரிடம் சிக்கியிருக்கிறதா….?
அது யார் குடுமி….?
.
………………………………………………………………………………………………………………………….
எனக்குத் தோன்றுகிறது, ஒருவரின் ஸ்டேட்மெண்ட், கட்சியின் வாக்கு வங்கியைப் பதம் பார்க்காது, சொல்பவருக்கு வாக்குகளை வரவழைக்கும் பின்னணி இல்லை என்றால், கட்சித் தலைவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள், கண்டு கொண்டு, அதனைப் பெரிதாக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். சு.சுவாமி வறுக்காத வறுவலா? If I were the Head of Dept, I would have sacked such person at the right time in case if the person is an influential person, if he is an ordinary person, immediately I would have sacked. ஆனால் இது அரசியல் கட்சி.
ஆனால் இப்படிப் பேசுவது அவர்களுக்கான (பேசுபவர்களுக்கான) எதிர்கால வாய்ப்புகளைச் சுத்தமாக அழித்துவிடும், சு.சுவாமிக்கு மற்றும் சிலருக்கு நடந்ததைப் போல (அத்வானியும் இந்த கேடகரி என்று நினைக்கிறேன்)
// சொல்பவருக்கு வாக்குகளை வரவழைக்கும் பின்னணி இல்லை என்றால், கட்சித் தலைவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள், //
அரசியல் சட்ட விதிகளின்படி, கவர்னர் என்பவர்,
மத்திய அரசின் (ஜனாதிபதியின்) -பிரதிநிதி… ஏஜெண்ட்.
மத்திய அரசிடமிருந்து சம்பளம் பெறுபவர்.
ஒரு வேலைக்காரர் தன்னுடைய முதலாளியைப்பற்றி,
அவர் எதிரேயே தொடர்ந்து அசிங்கமாக, அவமானப்படுத்திப் பேசினால் –
அதை அந்த முதலாளி பொறுத்துக் கொண்டு,
தொடர்ந்து அவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் –
அந்த முதலாளிக்குப் பெயர் – ” கையாலாகாத கோழை….!!! ”
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அல்லது அந்த வேலைக்காரரிடம், முதலாளியின்
ரகசியம் ஏதோ மாட்டிக்கொண்டிருக்கிறது
என்று அர்த்தம்….!!!
//விவசாய போராட்டத்தில் 600 விவசாயிகள்
வரை மரணம் அடைந்தனர்.// இது உண்மையா?
அப்படி என்றால் உச்சநீதிமன்றம் தொடங்கி இந்த நாட்டில் இருக்கின்ற கடைசி குடிமகன் வரை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த அநீதியை தட்டிக் கேட்காமல்?
Tamil,
இது பொய்யென்றால், இதனை மறுக்க வேண்டிய
கடமையும், பொறுப்பும் யாருடையது நண்பரே….?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்