சாத்தியமில்லாததை சாதிக்கும் ஒரு தமிழ்க் கலைஞர் ….!!!

ஹிந்தி திரையுலகில் மிகப் புகழ்பெற்ற 4 இசைக்கலைஞர்கள் –

மொஹம்மது ரஃபி,
கிஷோர் குமார்,
லதா மங்கேஷ்கர்,
ஆஷா போன்ஸ்லே –

இந்த 4 பேரின் குரல்களிலும் அப்படியே மாற்றி மாற்றி
பாடுகிறார் ஒரு இசைக்கலைஞர். கிஷோர் குமாரும்,
லதா மங்கேஷ்கரும் இணைந்து பாடும் டூயட் பாடல்களை
இவர் ஒருவராகவே, இடைவெளியின்றி விநாடியில்
குரலை மாற்றிக் கொண்டு பாடுகிறார்….

இதைச் செய்யும்போது ஏற்படும் வேதனையை மறைக்க
நிரந்தரமாக தன் முகத்தில் புன்னகையை தவழ விடுகிறார்….

தனது நிகழ்ச்சிகளில், பாடிக்கொண்டே, அரங்கில் இருப்போருடன்
மிகவும் சகஜமாக உலவி மகிழக்கூடியவர்…..

இந்த சாதனைகளைச் செய்பவர் –
ஒரு தமிழர் என்பது நமக்குப் பெருமை.

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சாய்ராம்.
பள்ளி வயதிலிருந்தே புகழ்பெற்ற ஹிந்தி திரைப்படப்பாடல்களை
பாடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தவர் இவர்.

சாய்ராம் – பகழ்பெற்ற இசைக்கலைஞர்களான பண்டிட் ரமேஷ்
நட்கர்னி, கஜல் மன்னர் மறைந்த மோஹன்கான் சாஹிப்,
இசையமைப்பாளர் அச்யுத் தாகூர், சாரங்கி கலைஞர் த்ருப கோஷ்
ஆகியோரிடம் பயின்றவர்.

ஹிந்தி உலகில் பாப்புலரான சாய்ராம் அய்யர்
தமிழ்நாட்டிற்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவர் என்பதால்,
இந்த இடுகையின் மூலம் அவரை இங்கு
அறிமுகப்படுத்த விழைகிறேன்.

இவர் மீது நான் ஆர்வம் கொள்வதற்கான முக்கிய காரணம் –
அவரது இசைத்திறமை மட்டுமல்ல….

இந்தியாவில் மட்டுமல்லாமல், பல வெளிநாடுகளிலும்
இசை நிகழ்ச்சிகளை நடத்தி –

இந்த இளம் வயதிலேயே பொதுநலனில் மிகுந்த
அக்கறை கொண்டு, தனது நிகழ்ச்சிகளின் மூலம் சேரும்
பணத்தில் பெரும்பகுதியை –

முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள், கேன்சர் மருத்துவ
மனைகள், பார்வையற்றோருக்கான இல்லங்கள்,
மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள், இயற்கை பேரிடர்களால்
பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்கள் – ஆகியவற்றிற்கு உதவுவதில்
செலவழித்து வருவது தான்.

நமது தள வாசகர்களுக்காக
சாய்ராம் – அளிக்கும் சில பாடல் நிகழ்ச்சிகளை
கீழே தருகிறேன் –
( நேரம் இல்லாதவர்கள் – கொஞ்சம் கொஞ்சமாக
பாருங்கள் /கேளுங்கள் – ஆனால்,
அவசியம் பார்க்கவேண்டும் என்று சொல்வேன்…)

………………..

…………………

…………………

…………

.


……………………………………………………………………………………………………………………………….……


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சாத்தியமில்லாததை சாதிக்கும் ஒரு தமிழ்க் கலைஞர் ….!!!

  1. Tamil சொல்கிறார்:

    நல்ல குரல் வளம்.

  2. sparklemindss சொல்கிறார்:

    Great talent & good human! Thank you for sharing this!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.