
முன்னாள் துணைப்பிரதமரும், இன்றிருக்கும் பாஜக
தலைவர்கள் அனைவருக்கும் மூத்தவருமான
திரு.எல்.கே.அத்வானி அவர்களின் 94-வது
பிறந்த தினமான இன்று –
பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானிஜியை
அவரது இல்லத்தில் சென்று பார்த்து வாழ்த்து
தெரிவித்திருக்கிறார்கள்…..
ரொம்ப – ரொம்ப – சந்தோஷம்….!!!
இவர்களில் – யாருக்காவது,
யாராவது ஒருவருக்காவது –
ஒரே ஒருவருக்காவது…..
மனசாட்சி, செய்நன்றி என்கிற விஷயங்களுகெல்லாம்
அர்த்தமாவது தெரியுமா…?
பாஜக ஆட்சிக்கு வந்து ஏழரை ஆண்டுகளாகி விட்டனவே…
அத்வானிஜிக்கு இவர்கள் காட்டிய நன்றி என்ன….?
ஜனாதிபதி பதவியில் அத்வானிஜியை அமர்த்தி
மரியாதை செய்ய முடியாதபடி இவர்களை
எது தடுத்தது…..?
குற்ற உணர்வு – இன்று இல்லாவிட்டாலும்
என்றாவது ஒரு நாள் –
இவர்களில் யாராவது ஒருவருக்காவது –
தோன்றாமலா போகும்….?
.
……………………………………………….
அவர் இப்போது irrelevant ஆகிவிட்டார். அரசியலில் ஒருவர் irrelevant ஆகிவிட்டால் அதோடு முடிந்தது. ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆக்கியிருக்கலாம். ஆனால் அதற்கு இடம் கொடுத்தால் பூதாகரமாக வளர்ந்து விடுவாரோ என்ற பயம் தான் அவர் கவர்னர் ஆகாததற்கு காரணம்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
அது தான் பாஜக நாளைக்கு இதே நிலைமை தான் மோடி மற்றும் அமிட்ஷா. பாஜக என்ன சங்கர மடமா ( ஆமா சங்கர மடத்துல என்ன வாரிசு தான் பதவிக்கு வர முடியுமா என்ன )
என்ன காரணம் என்று தெரியவில்லை. பல பெரிய தலைகள் ஒதுக்கிவைக்கப் பட்டிருக்கிறார்கள். ஏதேனும் உள் காரணமோ இல்லை கட்சி வளர்ச்சிக்கு இப்போது இருப்பவர்களுக்குப் பதவி கொடுக்கணும் என்ற நிர்பந்தமோ காரணமாக இருக்கலாம். ஒரே பதவிக்கு பலர் இருக்கும்போது தகுதியான சிலர் தவறவிடப்படலாம்.
//மனசாட்சி, செய்நன்றி என்கிற விஷயங்களுகெல்லாம் அர்த்தமாவது தெரியுமா…?// – அரசியலில் செய்நன்றி என்பது, தன்னைத் தப்பிக்கவைக்கும் விதமாக யார் உதவினார்கள், அவருக்கு உதவி செய்தால் அதனால் பிற்காலத்தில் பயன் உண்டா என்பதுதான் க்ரைட்டீரியா.. சமீபத்தில்கூட, எம்ப்டன்.வேலு என்ற ஒருவர் எடுபிடியாக இருந்து கட்சி கட்சியாகத் தாவி, தன்னை ஏற்றிவிட்டவர்களை எல்லாம் கவிழ்த்து…. என்று ஒரு திரைக்கதையைப் பார்த்தோமே லோகலில். இது அகில இந்திய பாலிடிக்ஸ்…
இப்போதுகூட வரும் தேர்தலில் அவருடைய ஆதாயத்தை தேடித்தான் இந்த மனிதர்கள் அங்கு சென்று இருப்பார்கள்