ரவுடிகளை உதவியாளர்களாக வைத்திருக்கும் மந்திரி ….

.

தூத்துக்குடியில், அமைச்சரின் உதவியாளர்கள் என்று
சொல்லப்படும் ரவுடிகளின் லேடஸ்ட் கதை –

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு
உறுப்பினர் பில்லா ஜெகன். இவர் தூத்துக்குடி மாவட்ட
விஜய் ரசிகர் மன்ற தலைவரும்கூட.

ஆனால் அனைத்தையும் விட, தமிழக மீன்வளத்துறை
அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனின் அரசியல் பிஏ என்று
இவரை கூறுகிறார்கள். சுருக்கமாக சொன்னால் இவர்
அமைச்சரின் வலதுகரம் என்றும் சொல்கிறார்கள்.

சொந்தமாக லாரி ஷெட் ஒன்றினை பில்லா ஜெகன் நடத்தி
வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு சொந்த தம்பியை சொத்து
தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக இவர்
கைது செய்யப்பட்டார்.

அதோடு மேலும் பல அடி தடி வழக்குகளிலும் பில்லா ஜெகன்
பெயர் முதல் குற்றவாளியாக உள்ளது. இதனால் இவரை
குண்டர் சட்டத்தில் கூட கைது செய்து போலீசார் சிறையில்
அடைத்துள்ளனர். அந்த சமயத்தில் இவரை திமுகவில் இருந்து
மு.க.ஸ்டாலின் சஸ்பென்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன் பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் ரெகமன்டேசனில்
திமுகவில் மறுபடியும் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு,
திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் பில்லா ஜெகன்
நியமிக்கப்பட்டார்.

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு
சொந்தமான சுற்றுலா மாளிகையின் காவலாளியாக சதாம் உசேன்
என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 29 வயதாகிறது.

நேற்று முன்தினம் மாலை, சதாம் உசேன் வழக்கம்போல்
டியூட்டியில் இருந்துள்ளார். அப்போதுதான் பில்லா ஜெகன்,
தனது சொகுசு காரில் அங்கு என்ட்ரி தந்துள்ளார். அவருடன்
மேலும் 5 பேர் இருந்தனர்.

அங்கிருந்த சதாம் உசேனிடம், “தண்ணி அடிக்க போறோம்..
அதற்காக ரூம் ஒன்றை ஒதுக்கி தரணும்” என்று கேட்டுள்ளனர்.
ஆனால் ரூம் எதுவும் காலியாக இல்லை என்று சதாம் உசேன்,
கூறியிருக்கிறார். அதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
சம்பவத்தை விசாரிக்கும் நீதிபதியின் ரூம் காலியாகத்தானே
உள்ளது, அதனை தனக்கு கொடுக்கும்படி பில்லா ஜெகன்
வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அது நீதிபதிக்கான பிரத்யேக ரூம், விசாரணை
முடியும் வரை வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என்று சதாம்எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும்
நீதிபதியின் அந்த ரூமை தங்களுக்கு திறந்து விடவேண்டும்”
என்றும் பில்லா ஜெகன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த ரூமை வேறு யாருக்கும் ஒதுக்கிக் கொடுத்தால்
தனக்கு வேலை போய்விடும் என்று சதாம் கெஞ்சியதாகவும்
ஆனால் அதனை பொருட்படுத்தால் ஆத்திரம் அடைந்த
பில்லா ஜெகன் & கோ, காவலாளி சதாமை அடித்து உதைத்து
கல்லால் தாக்கியதாக தெரிகிறது.

“அத்தோடு போலீசில் புகார் ஏதாவது தந்தால், துப்பாக்கியால்
சுட்டு கடலில் தூக்கி போட்டு விடுவோம்” என்று துப்பாக்கியை
காட்டி மிரட்டி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த சதாம் உசேன் தூத்துக்குடி அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நடந்த சம்பவம்
குறித்து போலீசிலும் புகார் தந்துள்ளார்..இதையடுத்து,
தெற்கு காவல் நிலைய போலீசார் பில்லா ஜெகன் உள்ளிட்ட
6 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்கு
பதிவு செய்தனர்..

இப்போது பில்லா ஜெகன் மறுபடியும் தலைமறைவாகி உள்ளார்.
அவர் உட்பட 6 பேரையும் தேடும் பணி நடந்து வருவதாக
போலீசார் கூறுகிறார்கள்.

ஆனால், பில்லா ஜெகன் முன்ஜாமீன்
வாங்கும் வரை கைது நடவடிக்கை எடுக்க கூடாது என்று
போலீசாருக்கு நெருக்கடி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு அனிதாவின் உதவியாளர் கிருபா என்பவர்
திருச்செந்தூரில் போலீஸ் கான்ஸ்டபிள் முத்துக்குமாரை
கன்னத்தில் அறைந்த புகாரில் சிக்கினார்.

இது தொடர்பாக முத்துக்குமார் முதலில் காவல் நிலையத்தில் புகார் அளித்த
நிலையில் பிறகு அதனை (பயமுறுத்தல் காரணமாக ….?) வாபஸ்
பெற்றார்.

இதனால் அனிதாவின் உதவியாளர் கிருபா மீது
அப்போது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

( https://tamil.oneindia.com/news/chennai/dmk-thoothukudi-executive-billa-jegan-attack-on-guard-and-police-have-registered-case-438061.html )

இத்தகைய ரவுடி அமைச்சர்களின் சேவை திமுக அரசுக்கு
அவசியம் தேவையா…? இவர்களின் துணையின்றி, ஆட்சி நடத்த
முடியாதா…? இத்தகையோரால், ஆட்சிக்கு அவப்பெயர் வருவது திமுகதலைவருக்கு தெரியவில்லையா….?

நல்ல பலத்துடன், தனிப்பட்ட மெஜாரிடி அரசை நடத்தி வரும்
திமுக தலைவர் – இத்தகையோரைத் தயவு தாட்சண்யமின்றி
தூக்கி எறிய வேண்டாமா …..?

.
………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to ரவுடிகளை உதவியாளர்களாக வைத்திருக்கும் மந்திரி ….

  1. Tamil சொல்கிறார்:

    இதையெல்லாம் சொன்னீர்கள் என்றால் உங்களைத்தான் வினோதமாக பார்ப்பார்கள்.

    ஊழல் ரவுடியிசம் ஆகியவை இப்போது வேறு பரிமாணத்தில் இருக்கின்றது எனவே தாங்கள் இவற்றைக் கடந்து சென்றுதான் ஆகவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.