
ஒரு அற்புதமான தகவல், இயற்கையின் விந்தையை
எண்ணியெண்ணி வியக்கச் செய்கிறது…
புவியின் வட கோடியில், வட துருவத்திற்கு மிக அருகாமையில்
இருக்கும் ஃபின்லாந்து (Finland) நாட்டில் பறவைகளை
கூர்ந்து கவனிக்கும் ஒரு குழுவினர் ஒரு ஆச்சரியமான
தகவலை வெளியிட்டிருக்கின்றனர்.
ஒரு ஹனி பஜார்ட் (European Honey Bazzard Bird )
பறவை குளிருக்கும், வெய்யிலுக்குமாக இடம் பெயர்ந்து
சுமார் 10,000 கி.மீ. வரை பறந்து செல்வதை பதிந்திருக்கிறார்கள்.
satellite Tracking System பொருத்தப்பட்ட
ஒரு பறவை, தென்னாப்பிரிக்காவின் தென் முனையிலுள்ள
REITZ -லிருந்து ஏப்ரல் 20-ந்தேதி தன் பயணத்தை –
வடக்கு நோக்கி துவங்கி இருக்கிறது. சுமார் 10,000 கி.மீ.
தாரத்தை (தினமும் சராசரியாக 230 கி.மீ.) பறந்து கடந்து,
ஜூன் 2-ந்தேதி ஃபின்லாந்தை அடைந்திருக்கிறது….
அந்தப்பறவை பயணம் செய்த மொத்தம் 42 நாட்களில்,
அது கடந்து(பறந்து) சென்ற பாதையை அதில் பொருத்தப்பட்டிருந்த
satellite tracking system மூலம் கண்காணித்து,
ஒரு வரைபடத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதில் இன்னொரு அதிசயிக்கத்தக்க விஷயம் என்னவென்றால்,
எந்தவித சாதனமும் இல்லாமலே -அநேகமாக ஒரு
நேர்க்கோட்டிலேயே அது அத்தனை தூரமும் பயணித்திருக்கிறது.
கூடவே, நீண்ட தூரம் கடலுக்கு மேலாக பறந்து செல்வதை அது
புத்திசாலித்தனமாக தவிர்த்திருக்கிறது… கடலைத் தவிரிப்பதற்காக, சூடானுக்கு அருகே அருகே செல்லும்போது மட்டும் நேர்கோட்டிலிருந்து விலகி, நைல் நதியை ஒட்டிச்சென்று, பிறகு மீண்டும் திசையை மாற்றி –
நீர் மேலான பயணத்தை குறைத்து பறந்திருக்கிறது.
பிரமிக்க வைக்கும் இந்த பறவையின் பயணம் ஒரு
வரைகோட்டின் மூலம் விளக்கப்பட்டிருக்கிறது….
கீழே –

அன்புள்ள அய்யாவிற்கு வணக்கங்கள். கடவுள் மனிதனுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைப் படைத்தது இவ்வாறான ஆதிசயங்களைப் பார்த்து அறிந்துக்கொள்ளத்தான். ஆனால் அவன் அவைகளைக் கொன்று , தின்று மிருகமாகிறான்.
வருக அப்பண்ணசுவாமி,
நீண்ட நாட்களாகி விட்டன உங்களைப் பார்த்து….
நலமாக இருக்கிறீர்களா….?
இயற்கையிடமிருந்தும், இதர படைப்புகளிடமிருந்தும்
மனிதன் கற்றுக்கொள்ள
இதுபோல் எத்தனையோ பாடங்கள்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அருமையான தகவல் நன்றி