புளியந்தோப்பு கே.பி.பார்க் ஊழலில் திமுக-வுக்கும் பங்கா….?

புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்புற
மேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின்
கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழலில் –

முன்னாள் அதிமுக ஆட்சிக்கு சம்பந்தம் உண்டு
என்பது வெளிப்படை….

ஆனால் – அதில் இந்நாள் ஆட்சிக்கும் பங்கு இருக்கிறது;
அதனால் தான் கட்டுமான நிறுவனத்தின் மீது
திமுக ஆட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை –

 • என்று சொல்கிறது இந்த ஊழலை முதன் முதலில்
  வெளிக்கொண்டு வந்த அறப்போர் இயக்கம்…

அறப்போர் இயக்கம் கொஞ்சம் வித்தியாசமான தகவல்களை
தருகிறது… இந்த பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்திற்கு
முதலில் 2007-ல் திமுக ஆட்சியில் தான் டெண்டர் தரப்பட்டது
என்று சொல்கிறது…

அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசன் தந்திருக்கும்
தகவல்களிலிருந்து –

……………

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு
நகர்புற மேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின்

கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழல் குறித்து அறப்போர்
இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆதாரங்களுடன் புகார்
அனுப்பி இருக்கிறது…..

மேலும் கட்டுமானத்தின் தரம் குறித்து ஐஐடியின் CUBE
நிறுவனம் அளித்த முழு ஆய்வு அறிக்கையையும் அறப்போர்
இயக்கம் வெளியிட்டது.

“இன்று வரை கே.பி.பார்க் கட்டுமானத்தில் ஊழல் செய்தவர்கள்
மீது எந்த அரசு விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பி எஸ் டி நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட
பதிவு செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையிடம்
CUBE நிறுவனத்தின் முழு ஆய்வு
அறிக்கையுடன் புகார் அளித்துள்ளோம்.

2007-ல் (திமுக ஆட்சி… ) சிங்கிள் டெண்டர் – கே பி பார்க் கட்டுமானத்திற்காக
விடப்படுகிறது…. பி எஸ் டி நிறுவனம் மட்டுமே தகுதி
பெற்றவராக அறிவிக்கப்பட்டு ஒருவர் மட்டுமே விலை பட்டியலில்
பங்கெடுக்கும் Single Bid Tender ஆக வழங்கப்பட்டுள்ளது.
32,000 சதுர மீட்டருக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

89 கோடி 92 லட்சம் ரூபாய் A,B,C,D ஆகிய 4 ப்ளாக்குகளுக்கு
ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு 800 ரூபாய் சந்தை மதிப்பை
விட அதிகமாக பி எஸ் டி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் 27 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டத்தில் கட்டப்பட்ட 1056 வீடுகள் தருண்
கட்டுமான நிறுவனம் என்ற நிறுவனம் கட்டியதாக
சொல்கிறார்கள். அந்த டெண்டரிலும் முறைகேடு நடந்துள்ளது.
தருண் கட்டுமான நிறுவனமும் நாமக்கலை சேர்ந்த நிறுவனம்
தான். அந்த நிறுவனத்துக்கும் பி எஸ் டி க்கும் தொடர்பு உள்ளது.

அது பற்றியும் லஞ்சஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.

 • ஐஐடி ஆய்வறிக்கை வந்த பிறகும் ஏன் இன்னும்
  FIR பதியப்படவில்லை என்பதற்கு தமிழக அரசு
  பதிலளிக்க வேண்டும்.

பி எஸ் டி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யாமல் இந்த
விவகாரம் ஏன் மூடி மறைக்கப்படுகிறது. அமைச்சர் தா.மோ.
அன்பரசனுக்கும் பி.எஸ்.டி. நிறுவனத்துக்கும்
என்ன தொடர்பு …?

 • என்பதை வெளிப்படையாக கேட்கிறோம்.
  ஏன் வழக்கு பதியப்படாமல் உள்ளது?

திமுக அரசு பி எஸ் டி நிறுவனத்தை
காப்பாற்ற முயற்சிக்கிறது.

45 நாட்களுக்குள் கட்டிடத்தை சரி செய்ய
வேண்டும் என்று தமிழக அரசு பி எஸ் டி நிறுவனத்துக்கு
உத்தரவிட்டுள்ளது. அது எப்படி முடியும்? அத்தனை பூச்சு
வேலைகளையும் முழுவதுமாக சுரண்டி விட்டுத்தானே, புதிதாக
பூச்சு வேலை நடத்த வேண்டும்.

தமிழக அரசின் இந்த உத்தரவு வெறும் கண்துடைப்பு
வேலைதான்… ” – என்கிறது அறப்போர் இயக்கம்.

…………….

திமுக ஆட்சிக்கு வந்து 5-6 மாதங்களுக்குள் சில சீனியர்
அமைச்சர்கள் மீது பல ஊழல் புகார்கள் வெளிவந்திருக்கின்றன.
அவற்றில் சில நம்பும்படியும் இருக்கின்றன.

திமுக தலைவர் உண்மையிலேயே ஊழலற்ற, நேர்மையான
ஆட்சியை தர விரும்பினால் – ஊழல் பெருச்சாளிகளான
இந்த சீனியர் அமைச்சர்களை ஏன் அமைச்சரவையில் சேர்த்தார் ….?

.
…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to புளியந்தோப்பு கே.பி.பார்க் ஊழலில் திமுக-வுக்கும் பங்கா….?

 1. Tamil சொல்கிறார்:

  மக்கள் பணம் வாங்கிய பிறகு கேள்வி கேட்பது என்பது தவறு.
  அதுபோல் அரசியல்வாதிகள் பணம் வாங்கிவிட்ட பிறகு எவ்வாறு தவறை தட்டிக் கேட்பார்கள்.
  பிரச்சினை என்னவென்றால் பல கட்டுமானப் பணிகள் அதிமுக அரசாங்கத்திடம் கமிஷன் கொடுக்கப்பட்டு முடியும் தருவாயில் இருந்தபோது இந்த அரசாங்கத்திடம் 9 சதவீதம் வரை கமிஷன் தர வேண்டும் என்று வாங்கினார்கள் என்பது. அந்தக் கட்டிடங்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்

Tamil க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s