இன்னுமொரு அமாவாசை ….!!!கண்டக்டர் டு கேபினட் அமைச்சர்….

நம் தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப வித்தியாசமானவர்கள் …

5 வருடத்திற்கொரு முறை 500-ஓ, 1000-மோ
கொடுத்து விட்டால் போதும் –


அதன் பின் எவ்வளவு அடித்தாலும், எப்படி அடித்தாலும்,

எதால் அடித்தாலும் –


தாங்குவார்கள்….!!!

இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு அமாவாசையை
பார்த்தோம்…. இங்கே இன்னுமொரு அமாவாசை ….!!!

……..

…………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

6 Responses to இன்னுமொரு அமாவாசை ….!!!கண்டக்டர் டு கேபினட் அமைச்சர்….

 1. vimarisanam kavirimainthan சொல்கிறார்:

  இன்று –

  ஏனிப்படி என்று யாருக்காவது தெரிந்தால்
  சொல்லலாம்…!!!

  LPG மானியத்தை நிர்ணயிப்பது மத்திய அரசு தான் –

  வீட்டில் நாம் பயன்படுத்தி வரும் சமையல் எரிவாயு
  சில ஆண்டுகளுக்கு முன்னர் விலை உயர்த்தப்பட்டு
  அந்த difference மானியமாக வழங்கப்படும்
  என அறிவிக்கப்பட்டது. வங்கிக்கணக்கில் நேரடியாகச்
  சமையல் எரிவாயு மானியம் செலுத்தப்பட்டு வந்தது.

  2019 ஏப்ரல் மாதம் 14.2 கிலோ சிலிண்டர் விலை
  ரூ.722 ஆக இருந்த போது 238.27 ரூபாய் மானியமாகச்
  செலுத்தப்பட்டது.

  2019-ம் ஆண்டு டிசம்பரில் கேஸ் சிலிண்டர்
  விலை ரூ.714 ஆகவும், அதற்காக வாடிக்கையாளர்களின்
  கணக்கில் செலுத்தப்பட்ட மானியம் ரூ.174.72 ஆகவும்
  இருந்தது.

  2020 மே மாதம், சிலிண்டர் விலை ரூ.569 ஆக இருந்தபோது
  மானியத் தொகை ஏதும் வாடிக்கையாளர்களுக்குச்
  செலுத்தப்படவில்லை. ஏனோ தெரியாது.

  அதற்கு அடுத்த மாதங்களில் இருந்து,
  மானியத் தொகை ரூ.23.95 – ரூ.25.45க்கு இடைப்பட்ட அளவில் வழங்கப்பட்டுவருகிறது.

  தற்போதும் அதே அளவில் 30 ரூபாய்க்குள் தான் மானியம்
  வழங்கப்பட்டுவருகிறது.

  ஆனால், தற்போது தமிழகத்தில் சிலிண்டர் விலை
  890 ரூபாயில் இருந்து 960 ரூபாய் வரை
  விற்கப்படுகிறது.

  இந்த மாற்றங்களையெல்லாம் தீர்மானிப்பது யார்…?
  எதன் அடிப்படையில்….?

  கடலிலிருந்து Gas எடுத்து விற்கும் ரிலையன்ஸ்
  அம்பானிக்கும் இவற்றிற்கும் எதாவது சம்பந்தம் உண்டா….?

  ஏனிப்படி என்று யாருக்காவது தெரிந்தால்
  சொல்லலாம்…!!!
  ————————

  • Tamil சொல்கிறார்:

   LPG price is Decided based in Imported LPG price. our Production is stable and not increasing , our consumption is increasing so mostly now the LPG price is given without any under recovery (i.e if Oil companies buy for X and Sell for Y, then Y-X is positive then its profit, otherwise its under recovery which they expect government to compensate in the form of subsity)

   • Tamil சொல்கிறார்:

    read subsity as subsidy

   • vimarisanam kavirimainthan சொல்கிறார்:

    Tamil,

    என் கேள்விக்கு – உங்கள் விளக்கம்
    பொருத்தமானது என்று உங்களுக்கே
    தோன்றுகிறதா….?

    மாயா … மாயா… எல்லாம் மாயா…!!!

    இண்டர்நேஷனல் அளவில் விற்கப்படும்
    LPG விலையை விட, இந்தியாவில், உள்நாட்டில்
    (அம்பானி கம்பெனியையும் சேர்த்து )
    உற்பத்தியாகும் LPG விலை குறைவாகவே
    இருக்கிறது…

    இருந்தாலும், மத்திய அரசு, உள்நாட்டில்
    உற்பத்தியாகும் LPG விலையையும்
    இண்டர்நேஷனல் அளவிற்கு செயற்கையாக
    உயர்த்துகிறது…. இதன் மூலம் இண்டர்நேஷனல்
    அளவில் விலை உயரும்போதெல்லாம்
    உள்நாட்டு LPG விலையும் செயற்கையாக
    உயர்கிறது.. இதன் பயன் அரசுக்கும்,
    கூடவே ரிலையன்ஸ் போன்ற தனியார்
    உற்பத்தியாளர்களுக்கும் கூடுதல் லாபத்தை
    தருகிறது. எனவே LPG விலை ஏறும்போதெல்லாம்,
    அது அரசுக்கும், ரிலையன்ஸுக்கும் லாபத்தை
    உயர்த்தித் தருகிறது என்பதை உணருங்கள்.

    வருடத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும்
    12 LPG சிலிண்டர்களுக்கு தொடர்ந்து மான்யம்
    கொடுக்கப்படும் என்கிற உத்தரவாதத்தை
    அவ்வப்போது மான்யத் தொகையை
    குறைப்பதன் மூலம் அர்த்தமற்றமாக்குகிறது அரசு.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  விகடனின் செய்திகள் உள்நோக்கமுடையது என்று எனக்குத் தோன்றுகிறது. விகடனின் எஜமானர், கட்சியில் தனக்குப் பிடிப்பு குறைவாக உள்ளது என்பதை உணர்ந்து, முக்கியமான ஆட்களுக்கு வெடிவைக்கத் துவங்கியிருக்கிறார் தன் பத்திரிகையின் மூலமாக. எ.வ.வேலு அடுத்ததாக முதலமைச்சராவதற்கு முயற்சிக்கிறார் என்று விகடனில் சொல்வதன் மூலம் இது நிரூபணமாகிறது. அதேசமயம் திமுகவில் பழம்பெருச்சாளிகளை விட, மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்குத்தான், தங்களுக்கு வசதி என்பதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதிலும் உண்மை இல்லாமலில்லை.

  விகடன் இதைவிட அதிகமாகச் சொல்வதற்கு தயாநிதி/கலாநிதி மாறன்களைப் பற்றிச் செய்திகள் உண்டு. அவையும் விகடன் சொல்லுமானால், விகடன் நேர்மையாகத்தான் இதனை அணுகியிருக்கிறது என்பது புலப்படும். பார்ப்போம்.

  • Tamil சொல்கிறார்:

   மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்குத்தான், தங்களுக்கு வசதி என்பதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதிலும் உண்மை இல்லாமலில்லை. – 100% true

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.