தண்டிக்கப்பட வேண்டிய கொலைக் குற்றவாளி ….

தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க உலகம் துணை நிற்க வேண்டும்…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to தண்டிக்கப்பட வேண்டிய கொலைக் குற்றவாளி ….

 1. vimarisanam kavirimainthan சொல்கிறார்:

  இன்று –

  அனைத்து விவசாயிகள் சங்கங்களின்
  ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பாண்டியன்
  கூறி இருப்பது –

  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், பெரியாறு அணையில்
  136 அடி இருக்கும் போதே கேரள அமைச்சர்கள்,
  அதிகாரிகள் நீர் திறந்து விட்டது எப்படி ? இது குறித்து
  முதல்வர் ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார்.

  பத்திரிகைகள் செய்தியை திரிப்பதாகக்கூறி,
  நீர்ப்பாசன அமைச்சர் துரைமுருகன் சப்பை கட்டு
  கட்டுகிறார்.

  நம் நிர்வாக கட்டுப்பாட்டில் பெரியாறு அணை
  இருக்கும் போது, தமிழக அமைச்சர்கள் அணைப்
  பகுதிக்கு செல்லாத நிலையில், கேரள அமைச்சர்கள்
  எந்த அடிப்படையில் சென்றனர்…?

  ————————
  நாம் கேட்பது ….

  முல்லைப்பெரியாறு நதிநீரை தென் தமிழக
  விவசாயிகள் பெரிதும் நம்பியிருக்கும் நிலையில்,
  136 அடி நீர் மட்ட நிலையிலேயே –

  கேரள அமைச்சர் மற்றும் கேரள அதிகாரிகளின்
  மேற்பார்வையில், கேரளா பக்கம் உள்ள மதகுகள்
  எப்படி திறந்து விடப்பட்டன…?

  கேரள அமைச்சர் / அதிகாரிகள்
  திறக்கவில்லை என்று சொல்லும் அமைச்சர்,

  தமிழக அதிகாரிகள் திறந்ததை நியாயப்படுத்துகிறாரா ?

  திரு.துரைமுருகன் விளக்கம் அளிக்க வேண்டும்.

  ———————–

  • புதியவன் சொல்கிறார்:

   நீங்க என்ன பச்சப்பிள்ளை மாதிரி கேள்வி கேட்கறீங்க? எதிர்கட்சியாக திமுக இருந்தபோது, அதிமுக செய்ததை எல்லாம் எதிர்த்தது. ஆளும் கட்சியான பிறகு, அதிமுகவை விட அதிகமாக எல்லோருக்கும் பணிகிறது. நாளை அரசியல் ரீதியாக பிரச்சனை வந்தால், கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம் பக்கம்தானே கையேந்தணும் ஆதரவு தருவதற்கு, அதுவும் தவிர காங்கிரஸ் கட்சி துணை இல்லாமல் எங்க வெற்றி பெறுவது? அதனால் பம்முகின்றனர்.

   இதைத்தான் நான் ப.சி. விஷயத்திலும் பார்க்கிறேன். ஆட்சியில் இல்லாதபோது வக்கணையாகப் பேசுபவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு அதில் எதையும் செய்யமுடியாமல் நீட்டி முழக்குவார்கள். அதனால், இந்தப் பிரச்சனைகள் எதுவுமே தீர்க்க இயலாதவை அல்லது தீர்க்கப் பயப்படுவார்கள் ஆட்சியில் இருக்கும்போது. இவங்க எல்லோரும், ஆட்சியில் இல்லாது இருக்கும்போது வக்கணையாகப் பேசுவதில் மட்டும் வல்லவர்கள்

 2. atpu555 சொல்கிறார்:

  இந்தச் செய்தியைப் பதிவிட்டதற்கு நன்றி!

 3. Tamil சொல்கிறார்:

  இன அழிப்புக்கு காரணமான ராஜபக்சேவை எதிர்த்து எவனும் மனிதனாகவே இருக்க முடியாது என்று 2014 அந்த அரக்கன் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வந்தபோது சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன்.

  இந்தியா காந்தியின் தேசம் அல்ல அது கோட்சேவின் தேசம் இங்கே யார் வேண்டுமானாலும் வரலாம் மற்ற இடங்களில் வரலாமா கூடாதா என்பது அவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள் என்பதை பொருத்து

 4. புதியவன் சொல்கிறார்:

  ரொம்ப செண்டிமெண்டாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு தேசமும் செய்வதுதான் அது. எப்போதும் இரு மரங்கள் வாழும்போது, ஒரு மரத்தை வெட்ட இன்னொரு மரம்தான் உதவி செய்யும்.

  அப்பாவி தமிழர்களும் அழிக்கப்பட்டதற்குத் துணை நின்றது கருணாநிதி, ப.சிதம்பரம், சோனியா என்ற பெரிய கும்பல். இந்திய ராணுவத்தின் உதவியையும் அவர்கள் இலங்கைக்குக் கொடுத்தனர். இந்த உதவி இல்லாமல் இலங்கைத் தமிழர் இன ஒழித்தொழிப்பு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்திரா இருந்திருந்தால் அது நடந்திருக்கவே நடந்திருக்காது. அவர்கள் செய்ததை மறந்துவிட்டு, அந்த நாட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரைச் சந்திக்கக்கூடாது என்று இப்போது எழுதுவதில் ஏதேனும் அர்த்தம் உண்டா? இன்றைக்கு பிரபாகரனைப் பற்றிப் பேசுபவர்கள், அவருடைய தாயாரை தமிழகத்துக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பிய கருணாநிதியைப் பற்றிப் பேசமாட்டார்கள். இப்போது ஏன் மோடி இன்னொரு நாட்டின் அதிபரைச் சந்திக்கணும் என்று எழுதுகிறார்கள். இதற்குக் காரணம் மோடி எதிர்ப்புதானே தவிர ராஜபக்‌ஷே எதிர்ப்பு இல்லை.

  பிரபாகரன் செய்த கொடுஞ்செயல்களுக்கும் அவருக்கு பண உதவி அளித்த அதே வெளிநாட்டுவாழ் தமிழர்கள் பொறுப்பு ஏற்க வேண்டாமா? அந்தக் கொலைகளில் அவர்களுக்குப் பங்கில்லையா? தமிழகத்தில் ராஜீவ் கொலைகாரர்களைத் தப்புவிக்க முயன்ற திக, திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு அந்தக் குற்றங்களில் பங்கில்லையா? குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த/இருக்கும் நபர்களுக்கும் தி.க வுக்கும் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது தெரியாதா?

 5. Rajan சொல்கிறார்:

  இந்திராவையும், தற்பொதைய தலைமையையும்
  ஒப்பிடுவது அறிவுடமையல்ல.
  இந்திரா ஆட்சியிலிருந்தால், இலங்கை அரசுக்கு
  இந்த அளவு துணிச்சல் இருக்குமா?
  இந்தியாவின் எதிர்ப்பை கொஞ்சம் கூட
  சட்டை செய்யாமல் சீனாவிற்கு இந்த அளவு
  இடம் கொடுத்திருக்குமா ? கொடுத்திருந்தால் ?
  இந்நேரம் இந்திராவின் ஆசியுடன்
  தமிழ் ஈழம் பிறந்திருக்கும். இந்திராவிற்கு
  இருந்த துணிச்சலும், ராஜதந்திரமும் இதுவரை
  பதவியில் இருந்த, இருக்கும், வேறு எவருக்கும்
  இல்லை என்பதே உண்மை.

  • புதியவன் சொல்கிறார்:

   இந்திராவுக்கு நீங்கள் நினைக்கும் அளவு துணிச்சல் இல்லை. அவரும் அமெரிக்காவிற்கு பயப்பட்டவர். இல்லையென்றால் வெற்றி பெற்றும் பாக்கிஸ்தானுக்கு காஷ்மீர் நிலத்தை விட்டுக்கொடுத்திருக்க மாட்டார், கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்திருக்கமாட்டார். காஷ்மீர் விஷயத்தில் என்ன செய்தார் என்று ஒரு அஃபீஷியல் டாகுமெண்டை நான் இரண்டு நாட்களுக்கு முன் வாட்சப்பில் காண நேர்ந்தது.

   “தற்போதைய தலைமை”யை ஒப்பிடமுடியாவிட்டால் அடிமை மன்மோகன் சிங், வெட்கமில்லாமல் ராஜபக்‌ஷேவிடம் பல்லிளித்துப் பணம் பெற்ற கனிமொழி, திருமா, ராஜபக்‌ஷேவிற்கு உதவிய கருணாநிதி, சோனியா போன்றவர்களைப் பற்றி நீங்கள் விமர்சித்ததுபோலத் தெரியவில்லையே

   இலங்கைத் தமிழர்கள் செய்தது பச்சைத் துரோகம். அவர்கள் இந்தியாவுடன் இல்லை… மாறாக இலங்கை அரசுடன் இருந்தார்கள். (ஐபிகேஎஃப்). இந்தியப் பிரதமரைக் கொலை செய்வதற்குத் துணை நின்றார்கள். அவர்களோடு தமிழகத்தில் இருந்த திக மட்டும் இந்திய நாட்டுத் துரோகிகளும் துணை நின்றனர். அதனால் இந்தியா உதவ வேண்டும் என்று நினைப்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்ட ஈழத் தமிழர்கள் நடந்துகொள்ளும் விதம் பற்றி நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்.

   இதுவே ஈழம் முழுமையாக இந்தியாவின் உணர்வு பூர்வமான ஆதரவை இழந்ததற்குக் காரணம். இப்போதும் வேற்று நாட்டில் இருக்கும் கஷ்டப்படும் இனம் என்ற அளவில்தான் இந்தியா உதவி செய்கிறது.

 6. Rajan சொல்கிறார்:

  கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது
  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த
  வாஜ்பாய் என்ன சொன்னார் ?
  ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகி விட்டனவே;
  உங்கள் தற்போதைய தலைமை என்ன
  செய்திருக்கிறது ?

  • புதியவன் சொல்கிறார்:

   காங்கிரஸ் ஊழல் பெருச்சாளிகள் வங்கிப் பணத்தைக் களவாடி தொழிலதிபர்களுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு கொடுப்பார்களாம். அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி பாஜக அரசு தண்டனை வாங்கித்தரணுமாம். நல்ல வேடிக்கை. கச்சத் தீவைத் தாரை வார்ப்பார்களாம் ராஜனின் கட்சிக்காரர்கள். ஏன் எதிர்கட்சி அதனை எதிர்க்கவில்லை, ஏன் 7 வருடமாக ஆளும் பாஜக அதனை மீட்கவில்லை என்று கேள்வி கேட்பாராம். ராகுல், சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரஸ் அரசின் பிரதிநிதி என்ற முறையில் லஞ்சம் வாங்கி, புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொள்வாராம். அதனை பாஜக கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தரணுமாம்.

   கேள்வி.. இந்திரா, புதுக்கோட்டை மஹாராஜாவின் சொத்தை, எந்த முறையில் இன்னொரு தேசத்திற்குத் தாரை வார்த்தார்? ஏன் அவர் வெற்றி பெற்ற பிறகும், பாகிஸ்தானிற்கு காஷ்மீரத்தின் ஒரு முக்கியப் பகுதியைத் தாரை வார்த்தார்?

   அப்படிப் பார்த்தால் பாஜக மீது குறை சொல்லும் ஒவ்வொருவரும், எழுதுவதற்குப் பதிலாக, கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்று அல்லது குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டியதுதானே என்று மற்றவர்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் கொடுக்க முடியும்? சரி..எதிர்கட்சிகள் இருக்கின்றனவே..அவைகள் ஏன் வழக்குத் தொடுத்து தண்டனை பெற்றுத் தரமுடியாது?

   என்னுடைய நிலை இந்த கச்சத்தீவுப் பிரச்சனையில்… இந்திராவின் காங்கிரஸ் அரசு, ஏதோ காரணத்துக்காக தீவைத் தாரைவார்த்துவிட்டது. அந்த ஒப்பந்தத்தில் என்ன என்ன ஷரத்துகள் உள்ளன, மறைமுக புரிந்துணர்வு என்ன என்பது தெரியாது. இனி கச்சத்தீவைப் பெற வாய்ப்பே இல்லை. திமுக ஆட்சி இழக்கும்போது, கச்சத்தீவை மீட்போம் என்று போராட்டம் நடத்தும்… இப்போது முதல்வர் ஸ்டாலின், தன்னை, ஈழத் தமிழர்கள் சொந்தச் சகோதரனாக ஏற்றுக்கொள்ளணும் என்று வேண்டுகிறார். (நல்ல நகைச்சுவை). எதிர்கட்சி ஆன பிறகு, தனி ஈழம், தமிழ் ஈழம் என்றெல்லாம் பேசுவார். கேட்டு கை தட்டவேண்டியதுதான்.

 7. புதியவன் சொல்கிறார்:

  முல்லைப் பெரியார் அணையைத் திறக்கவேண்டிய அதிகாரி தமிழகம். ஆனால் இப்போது கேரள அதிகாரிகள் தாங்களே அணையைத் திறந்திருக்கிறார்கள். கேள்வி கேட்கவேண்டிய தமிழகம், கருணாநிதியைப் போலவே பயந்துகொண்டு பம்மிக்கொண்டுவிட்டது என்று பலர் இணையத்தில் பேசுகிறார்கள் (காவிரி விஷயத்தில் கருணாநிதி தமிழகத்திற்கு துரோகம் இழைத்து, தங்கள் கர்நாடக பிஸினெஸைக் காப்பாற்றிக்கொண்டது போல என்றும் சொல்கிறார்கள்)

  நாமோ, ஏர் இந்தியாவை வாங்க டாட்டாவுடன் போட்டி போட்ட இன்னொரு திமுக கார்பொரேட் நிறுவனமான மாறன் பிரதர்ஸையோ, இல்லை இலங்கையில் 28,000 கோடி ரூபாய் (ஏ அப்பா எவ்வளவு பணத்தைக்) முதலீடு செய்ய முயன்ற திமுகவின் ஜெகத் ரட்சகனின் கார்பொரேட் நிறுவனத்தையோ கண்டுகொள்ளாமல், அதானி அம்பானி என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறோ.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.