

அதிமுக-வில் முக்கியமான அமைச்சராக இருந்த ஓருவர்
இன்று திமுக-விலும் வளம் கொழிக்கும் முக்கிய
இலாகாக்களை கையில் வைத்திருக்கும் கேபினட் அமைச்சராக
இருக்கிறார்….
2018-ல் தான் திமுக-விலேயே சேர்ந்தவர் இன்று முக்கியமான
அமைச்சராக இருக்கிறார் என்றால், விசேஷம் இல்லாமலா
இருக்கும்….!
அப்படி என்ன விசேஷம் அவரிடம்…? நமக்குத் தெரியவில்லை.
ஆனால், அவரது ” திறமை ” தெரிந்து தானே திமுக தலைமை
அவருக்கு இந்த இடத்தை தந்திருக்கிறது….
விகடன் தளத்தில் வெளிவந்திருக்கும் காணொலி ஒன்று
நமக்கு தெரிந்ததும், தெரியாததுமான பல தகவல்களை
தெளிவாகத் தருகிறது….
…………….
.
……………………………………………………………….
இன்றைய தலைப்புச் செய்திகள் சில –
பாம்பின் வாயில் சிக்கிய தவளையை போல்…
பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டது – திருமாவளவன்
திமுக கூட்டணியில் சிக்கிக்கொண்டு விசிக
சுதந்திரமாக எதையும் சொல்லமுடியாமல்
தவிப்பதைப் போல் … என்றும் சொல்லலாமே…!!!
வாடிகனில் போப் பிரான்சிஸ்சுடன் பிரதமர்
நரேந்திர மோடி சந்திப்பு.. இந்தியாவுக்கு வரும்படி
அழைப்பு !
மோடிஜியின் பார்வையில் –
போப் எதற்காக இந்தியாவுக்கு வர வேண்டும் ?
இது உலகப் பார்வையில் நியூட்ரல் என்று காண்பிக்க அல்லது அழுத்தத்துக்காக (ஏற்கனவே நிறைய தடவை போப் வர விழைந்தபோது மோடி அரசு அழைப்பு விடுக்கவில்லை என்ற கருத்து இருந்தது). Head of State என்ற முறையில்தான் அவர் வரமுடியும். அதனால் மோடி அரசுக்கு அரசியல் பிரகாரம் பத்துப் பைசா பிரயோசனமில்லை. பாஜக அனுதாபிகளான சில கிறிஸ்துவர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். அவ்ளோதான். இதனாலெல்லாம் வெளிநாட்டு நிதி முறைகேடாக மதம் மாற்றுவதற்காக இந்தியா வருவதை மோடி அனுமதிப்பார் என்றெல்லாம் நம்புவதற்கில்லை. HOS என்ற முறையில் போப்பை கட்டிப்பிடித்துத்தான் மோடி தன் மரியாதையைத் தெரிவித்தார் என்பதையும் புகைப்படம் மூலம் பார்த்திருக்கலாம்.
அதிமுகவில் இருந்தபோது இவர் நிகழ்த்திய
சாதனைகளை மிகத் தீவிரமாக குறை கூறிய
திமுக அந்த குறைகளையே நிறைகளாக,
திமுகவில் இணைவதற்கான இவருடைய தகுதிகளாக
எடுத்துக் கொண்டு சேர்த்துக்கொண்டது.
முக்கிய “வளம் கொழிக்கும்” இலாகாக்களை
இவருக்கு குத்தகைக்கும் கொடுத்திருக்கிறது.
வசூல் தொகையில், பெசிய அளவு குத்தகைப் பணத்தை
சொந்தக்காரருக்கு கொடுத்து விட்டு, மற்றதை இவர்
எடுத்துக் கொள்ளலாம் என்பது குத்தகைக்கான
கண்டிஷனாக இருக்கும். அந்த குத்தகை காலத்தில்,
அந்த பதவியைக் கொண்டு எப்படி வேண்டுமானாலும்
பணம் வசூலித்துக்கொள்ளலாம்.
அதிமுகவில் இவர் என்னவெல்லாம் செய்தார்
எப்படியெல்லாம் சம்பாதித்தார் என்று நன்கு தெரிந்திருந்தும்,
திமுக ஆட்சியில் இவருக்கு முக்கிய இலாகாவை
திமுக தலைமை கொடுத்ததன் நோக்கம் என்னவாக
இருக்க முடியும் ?
ஒரு வகையில் ஜெ. அவர்கள் யாரை நம்பலாம், யார் நம்பிக்கைக்குரியவர்கள் இல்லை என்பதை ஓரளவு சரியாகக் கணித்திருந்தார் என்று நம்புகிறேன். ஒரு சமயத்தில், இந்த அமாவாசையிடம் முதல்வர் பொறுப்பைக் கொடுப்பார் என்று நம்பிக்கொண்டு அதற்கு லாபி செய்ய ஆரம்பித்தபிறகுதான் இவருக்கு அதிமுகவில் ரெட் கார்ட் போடப்பட்டு, திமுகவை நோக்கிச் செல்லவேண்டியதாகிவிட்டது. திமுகவுக்குத் தாவிய அதிமுக பிரமுகர்கள் பலர் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர், ஆனால் பணம் புரட்டி கட்சிக்குத் தரத் தெரிந்தவர்கள்.
இதில் நகைப்புக்கிடம் என்னவென்றால் இவர் மீது திமுக வழக்கு பதிந்தது. பிறகு அந்த வழக்கில் இவர் விடுவிக்கப்பட்டதும் (அப்போது அவர் திமுக அமைச்சர்) திமுகவே அந்தத் தீர்ப்பை வரவேற்றது.
இவர்கள் நிறையவே கப்பம் கட்டுவார்கள், பரம்பரைக் கட்சிக்காரர்கள் இல்லை என்பதால் இவர்களைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் சுலபம். குறிநில மன்னர்கள் போல, தன்மானம், வரவில் நிறைய அமுக்கிக் கொள்வது போன்றவை செய்யமாட்டார்கள் என்பதால் இருக்குமோ? விகடன் இதைத்தான் சொல்கிறதோ?
இவர் மீது இருந்த இலஞ்சம் வாங்கிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது வாங்கிய இலஞ்சப்பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டார் என்கின்ற காரணத்துக்காகவே!!! எப்படி இருந்தாலும் முதலில் இலஞ்சம் வாங்கியது குற்றம்தானே!! அதற்கு தண்டனை இல்லையா? என்ன நியாயமோ என்ன லாஜிக்கோ!!!!
இன்றைய நிலைமையில் மக்கள் ஊழல் என்று சொன்னார் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கடந்து செல்கிறார்கள். வரும் காலங்களில் செந்தில் பாலாஜி அவர்கள் மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் மாற்றப்படலாம்