திரு.ப.சிதம்பரம் – அவசியம் கேட்கப்பட வேண்டிய உரையொன்று …….!!!

திரு.ப.சிதம்பரம் அவர்களைப் பற்றி இந்த தளத்திலேயே
பலமுறை எதிர்மறையாக விமரிசித்திருக்கிறோம்.
அந்த கருத்துகள் இன்றும் அப்படியே தான் இருக்கின்றன…

அவற்றிற்கும் இன்றைய இடுகைக்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லை என்பதால், அதை அப்படியே ஒருபக்கமாக
தள்ளி வைத்துவிடுவோம்.

இந்திய பொருளாதாரத்தை மிகச்சரியாக புரிந்துகொண்ட
நிபுணர்கள் பலர் இந்தியாவில் உண்டு…

ஆனால், அதை – பொருளாதாரம் பற்றி ஒன்றுமே தெரியாத,
பாமரருக்கு கூட புரியும்படி விளக்கமாக எடுத்துச்
சொல்லக்கூடிய திறமை வெகுசிலருக்கே உண்டு…
அதிலும் தமிழில் – திரு.ப.சிதம்பரம் அவர்களை மட்டுமே
சொல்லலாம்.

அவரது பேச்சில், ஓட்டு அரசியலை விடுங்கள் –
பொருளாதாரத்தை மட்டும் கவனியுங்கள் –

Indian Chamber of Commerce-ன் சென்னை
கூட்டத்தில் அண்மையில் திரு.ப.சிதம்பரம் அவர்கள்
ஆற்றிய உரை கீழே –

இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை குறித்து
அறிய விரும்புபவர்களுக்கு மிகவும் பயன்படும்.

……………

.
……………………………………………………………………………………………………………..……..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

8 Responses to திரு.ப.சிதம்பரம் – அவசியம் கேட்கப்பட வேண்டிய உரையொன்று …….!!!

 1. Tamil சொல்கிறார்:

  பல தவறுகள் இவர் நிதியமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டவை உதாரணத்துக்கு Surcharge & Cess.

  வரி வருவாயை எப்படி மாநிலங்களுக்கு கொடுக்காமல் மத்திய அரசே முழுமையாக வைத்துக்கொள்வது எப்படி , மக்களிடமிருந்து அவர்கள் ரத்தத்தை அளவுக்கதிகமாக உறிஞ்சுவது என்பதை செயல்படுத்திக் காட்டியவர் பா.சிதம்பரம் அதை இப்போதிருக்கிற ஆட்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 2. ஸ்ரீதர் சொல்கிறார்:

  ஐயா.

  எவ்வளவு புத்திசாலியா இருந்தாலும், நேர்மை இல்லை என்றால் வீண்தான்.

  இவரையும் இவர் குடும்பத்தையும் என்றைக்குமே நம்ப முடியாது.

  காசு கொடுத்தால் பொய்யையும் உண்மை போல் சொல்லும் கூட்டம்.

 3. புதியவன் சொல்கிறார்:

  அறுக்கமாட்டாதவன் கையில் அறுபது அறுவாள் இருந்து என்ன பிரயோசனம்?

  இவர் பேசும் ஒன்றையாவது இவர் நிதியமைச்சராக இருந்தபோது செயல்படுத்தியிருக்கிறாரா? ஏன் அப்போது முடியவில்லை? வங்கி வித்டிராயல் ஒவ்வொன்றுக்கும் 10 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டபோது இந்தப் பொருளாதாரம் பற்றிய அறிவு அவருக்கு இல்லையா? இது, கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஷாட்டும் எப்படி அடிப்பது, எப்படி இந்த பவுலரை எதிர்கொள்வது என்று வேலையற்ற வீணர், (எவ்வளவு கிரிக்கெட் அறிவு இருந்தும்) தொலைக்காட்சியில் பேசுவது போன்றது. அவரால் தெரு கிரிக்கெட்டில்கூட 3 ரன் அடிக்க முடியாது ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிவுரைகள் கூறுவார்.

  பொய்யை உண்மை போலவும் உண்மையைப் பொய் போலவும் பேசத் தெரிந்ததனாலேயே இவர் பெரிய பொருளாதாரப் புலி என்று நம்பவேண்டியதில்லை.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ” எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பதறிவு….!!! ”

  -இதை நான் சொல்லவில்லை…!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நான் ஏற்கெனவே மேலே சொல்லி இருக்கிறேன்….

  ” அவரது பேச்சில், ஓட்டு அரசியலை விடுங்கள் –
  பொருளாதாரத்தை மட்டும் கவனியுங்கள் – ”

  அவர் சொன்ன புள்ளி விவரங்களில்,
  பொருளாதார கருத்துகளில் உள்ள குறைபாடுகளை
  யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை…

  அவரை குற்றம் காண நீங்கள் தேவையில்லை;
  நானே முதல் வார்த்தையிலேயே சொல்லி இருக்கிறேன்.

  இந்த இடுகையைப் பொருத்த வரை நாம் விவாதிக்க
  வேண்டியது இன்றைய இந்திய பொருளாதார
  நிலையைப்பற்றி தான்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • ஸ்ரீதர் சொல்கிறார்:

   ஐயா,

   என் எண்ணம் , இவரை மாதிரி மனிதர்கள் எப்போதும் உண்மையை பேச மாட்டார்கள் அதனால் இவர் சொல்லும் புள்ளி விவரங்களில் உண்மை இருக்க வாய்ப்பில்லை.

   இவருக்கே நீங்கள் காசு கொடுத்தால் இதே புள்ளி விவரங்களை தலைகீழாக மாற்றுவார்.

   எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

   உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்

   இவரது தரவுளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை இருந்ததில்லை அதனால் இவர் இப்படி சொல்லும் போது நாம் நன்றாக தான் இருக்கிறோம் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கி இருக்கும்.

   நன்றி

 6. bandhu சொல்கிறார்:

  இவர் பொருளாதார பாடம் எடுப்பது, அமெரிக்க மிலிட்டரி போனவுடன் நாட்டை விட்டு ஓடி நாட்டை நடுத்தெருவில் விட்ட Ashraf Ghani, How to fix failed states புத்தகம் எழுதியதை போல. என்ன அவர் புத்தகத்தை முதலில் எழுதினார். நாட்டை விட்டு பொறுப்பில் இருக்கும்போது ஓடினார். இவர் நிதி அமைச்சராக இருந்தபோது என்ன கிழித்தார் என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது பாடம் எடுக்கிறார்!

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இவர் மீது இத்தனை பேருக்கு கோபம் இருக்குமென்பது
  நான் எதிர்பார்த்தது தான்.. அதற்காகத்தான் அந்த
  விசேஷ முன்னுரையே…!!!

  உங்கள் கோபத்திலிருந்து
  என் கோபம் சற்றும் சளைத்ததல்ல என்பதை
  இதே தளத்தில் இருக்கும் பழைய இடுகைகளை
  பார்த்தால் தெரியவரும்…. பழைய வாசகர்களுக்கு
  தாங்கள் ஏற்கெனவே இங்கு படித்தது நினைவிற்கு வரும்.

  ஆனாலும், அவர் இங்கே சொல்லி இருக்கும்
  பொருளாதார விவரங்கள் அவசியம் சிந்திக்கப்பட
  வேண்டியவை என்பதே என் கருத்து.

  .
  வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.