
விளம்பரமே இல்லாமல்,
எதையாவது வெளியிட்டு விட்டு, சப்தம் போடாமல் –
‘கம்’முனு கிடப்பது பொதிகை டிவி’யின் ஸ்டைல்….
அண்மையில் தான் பார்த்தேன்…
ஜனவரியிலேயே பொதிகை வெளியிட்டிருக்கிறது…
இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பழைய பேட்டி
ஒன்றை “நினைவுக் குறிப்பு” என்கிற தலைப்பில்
பொதிகை “ரிலீஸ்” செய்திருக்கிறது….
காஷ்மீர் – தீவிரவாத பிரச்சினையைப்பற்றி எவ்வளவு அழகாக விளக்குகிறார் பாருங்கள்…. பிரச்சினைக்கு தீர்வு சொல்ல எல்லாராலும் முடியாது… ஆனால் அதை தெளிவாகப் புரியவைக்கும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்…
“ரோஜா” படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றபோது,
மணிரத்னம் அகில இந்திய அளவில் அறிமுகமானார்.
- இந்த பேட்டி, அப்போது எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
- ரோஜா படம் பற்றி சில விவரங்கள் –
முதலில் 1992-ல் தமிழில் வெளியானது….
இயக்குநர் கே.பாலசந்தர் இந்தப் படத்தை சிக்கனமாக –
மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரித்தார்…
அநேகமாக முக்கிய கதாபாத்திரங்கள்
எல்லாமே புதுமுகங்கள்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரெஹமான் கூட
இந்தப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
மணிரத்னம் 60 நாட்களில் ரோஜா ஷூட்டிங்
முழுவதையும் முடித்து விட்டார்….
தமிழில் “ரோஜா” பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு –
ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளிலும்
மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு,
அந்தந்த மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடியது…
அதன் பிறகு ஹிந்தியிலும், மற்ற மொழிகளிலும் கூட
அவர் பல ஹிட் படங்களை கொடுப்பதற்கு,
ரோஜா’வின் வெற்றி ஒரு அடித்தளமாக இருந்தது.
மணிரத்னம் ஆங்கில மீடியத்தில் படித்தவர்…
அவர் திக்கித் திக்கி, தமிழில் பேசுவது
ஒரு தனி சுவாரஸ்யமாக இருக்கிறது.
அந்த வயதிலேயே அவருடைய புரிதலும்,
விசாலமான பார்வையும் வியப்பைத் தருகிறது.
தமிழ் நாட்டிலிருந்து “உலக சினிமா இயக்குநர்”களில்
ஒருவராக இடம் பிடிக்கும் அளவிற்கு
பிரபலமான ஒரு அற்புதமான படைப்பாளி….
அவருடைய ஸ்பெஷாலிடி –
quality & perfection…!!!
எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் ஒருவர்…
(அவருடைய எல்லா படங்களுமே எனக்கு பிடிக்கும்
என்றாலும் அவற்றில் மிகவும் பிடித்தவை –
மௌன ராகம், கன்னத்தில் முத்தமிட்டால்…!!!)
மணி சார் – மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறோம்…
எப்போது பொன்னியின் செல்வனை
பார்க்க விடப்போகிறீர்கள்…?
………….
…………………………………………..