
ஒரு தலைப்புச் செய்தி பார்த்தேன் –
” தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு
நோட்டீஸ் – ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரும்
பி.ஜி.ஆர். நிறுவனம்! “
……………………………………..
ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே என்று
கொஞ்சம் உள்ளே போய்ப் பார்த்தேன்…
அண்ணாமலை “அண்ணா ” – வெறுமனே ” 4 கோடுகளை
இணைத்துப் பாருங்கள்…. ஏதோ தெரியும் ” என்று
சொல்லி இருக்கிறார்… அம்புட்டுத்தான்…!!!
அதற்கு மேல் மானம் எல்லாம் நஷ்டமாகிற மாதிரி
எதுவும் சொன்ன மாதிரி தெரியவில்லை.
இதுக்குப்போய் 500 கோடியா….?
ஏற்கெனவே, கம்பெனி நஷ்டத்தில் இருக்கிறது…
திவால் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள் என்றெல்லாம்
படித்தோமே…
ஒருவேளை அண்ணா’விடம் 500 கோடி பிடுங்கி
அதை திவால் கம்பெனிக்கு முதலாகபோட்டு அதற்கு உயிர் கொடுத்து விடலாமென்று நினைக்கிறார்களா…?
தேவலையே – இந்த ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது …!!!
ஆனால், மான நஷ்ட வழக்கு போடுவதில் ஒரு பிரச்சினை…
முதலில் – வழக்கு போடுபவர்களுக்கு –
மானம் இருக்கிறது ( அல்லது இருந்தது ) என்று
நிரூபிக்க வேண்டும்…
அப்புறம் அது போய் விட்டது என்பதையும்
நிரூபிக்க வேண்டும்…
பிறகு அதற்கான விலைமதிப்பென்ன, அது எப்படி
தீர்மானிக்கப்பட்டது போன்ற விவரங்களையெல்லாம்
வேறு விவரமாக கோர்ட் நம்புகிறா மாதிரிஎடுத்துச் சொல்ல வேண்டும்..
அதற்குள்ளாக, “அண்ணா ” பாட்டிற்கு – என்னிடம் இருப்பதைக்
கொடுக்கத் தயார் என்று கூறி ஆட்டைக்கொடுத்து
விட்டு தப்பித்து விட்டால்….?
ஆனால், இந்த கவலையெல்லாம்,
நிஜமாகவே கோர்ட்டுக்கு போகிறவர்களுக்கு தான்…
சும்மா – வக்கீல் நோட்டீஸ் விட்டு பயமுறுத்த அல்லது நாங்கள் யார் தெரியுமா என்று காட்ட நினைப்பவர்களுக்கு – இதெல்லாம் ஒன்றுமே வேண்டாம்..
வெறுமனே வக்கீலுக்கு – நோட்டீஸ் விட ஃபீஸ் மட்டும்
கொடுத்தால் போதும்… !!!
அதுவும் கோர்ட்டுக்கு எல்லாம் போவதாக உத்தேசமே இல்லையென்கிறபோது – சும்மா ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு டுபாக்கூர் வக்கீலே போதும்…
.
……………………………………………
அண்ணாமலைதான் எதற்கும் கவலைப்படாமல் எதை எடுத்தாலும் கோர்ட்டுக்குப் போங்கள் என்று 20 ரூபாய் கொடுத்து மின்சாரம் வாங்கிய அணில் புகழ் அமைச்சருக்கும் ராஜகண்ணப்பனுக்கும் ஸ்டாலினுக்கும் சொல்லிவிட்டாரே. இந்த டுபாக்கூர் கம்பெனியும் கோர்ட்டுக்குப் போகும் என்று நம்புவோமாக. (இந்த ஸ்வீட் ஊழல் பற்றி நான் படித்தது, குஜராத்தி கம்பெனி ஒருவருக்கு இந்த காண்டிராக்டைக் கொடுத்து 30 சதம் கமிஷன் அடிக்கலாம் என்று நினைத்திருந்தார்கள். பிறகு பிரச்சனை ஆகவும் 100 கோடி டர்ன் ஓவர் என்பதை 40 கோடி என்று ஆக்கி A2B யை உள்ளே கொண்டுவந்து அதைப்பற்றி மட்டும் அமைச்சர் ப்ரெஸ் மீட்டில் பேசினார். ஊழல் அம்பலமாகவும், இப்போது ஆவினிடமே வாங்குவோம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆறு மாதத்திற்குள் மூன்று பெரும் ஊழல்கள், கட்சித் தலைவரின் நெருங்கிய சொந்தம் 3 புதுக்கம்பெனிகளை உருவாக்கி அதற்கு தலைவராக ஆகியிருக்கிறார்…
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மற்றும் கோவில் திருவிழாக்களைத் தடை செய்திருக்கிறது திமுக அரசு. ஆனால் தங்கள் குடும்பப் படத்திற்காக (கேடி பிரதர்ஸ் தயாரிப்பு, ஆனால் வெளியிடுவது உதயநிதி 75 சதவிகித வருமானம் அவருக்கே தரணும் என்று வற்புறுத்தி வாங்குவதாக நிறைய அரசியல் காணொளிகள்/செய்திகளில் படித்தேன்) திரையரங்குகளையும் அதன் சார்பான தொழில்களையும் 100 சதவிகிதம் திறந்துவைத்திருக்கிறதே.. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
20 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஊழல் என்று நான் நம்பவில்லை.
காரணம் , Indian Energy Exchange, இது தொடங்கப்பட்ட ஆண்டு 2008 அதிலிருந்து ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களும் புதிய விற்பனை விலை வைக்கப்பட்டு மின்சாரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தனியார் மின் நிறுவனங்களின், PLF (Planned Load Factor) 40 சதவீதத்திற்கு கீழ், எனவே பல வருடங்களாக மின்சாரத்தின் விலை மிக குறைவாக இருக்கிறது அதுவும் தேவை குறைகின்ற போது அது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஒரு சில சமயங்களில் அது ஒரு ரூபாய் 1.20 பைசாவுக்கு கூட கிடைத்திருக்கிறது (அது 20 ரூபாய்க்கு வைக்கப்பட்ட நாளில் ஒரு சில மணிகளில் அது மிகக் குறைந்த விலைக்கும் கிடைத்திருக்கும்).
சமீபத்தில் ஏற்பட்டிருக்கின்ற நிலக்கரி தட்டுப்பாட்டினால் அனைத்து நிறுவனங்களும் தேவையற்ற மின்சார உற்பத்தியை குறைத்து வருகின்றன எனவே தேவையின் போது குறைவான மின்சாரம் இருப்பதினால் அது அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
மேலும் அதே 20 ரூபாய்க்கு தான் குஜராத் உட்பட சில மாநிலங்களும் வாங்கி இருக்கின்றன. எனவே திரு அண்ணாமலை அவர்கள் முழு புரிதல் இல்லாமல் இந்த விஷயத்தை (இருபது ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியது) பிரச்சினை ஆக்குகிறார் என்றே நினைக்கிறேன்.