வீரமணியாரும் – காமாலைக் கண்ணரும்….!!!

………………………………………..

” காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ” –
என்பது பழமொழி….

“இல்லம் தேடி கல்வி ” என்கிற திட்டத்தை தமிழக அரசு
துவக்குகிறது. கொரோனா நோய்ப்பரவல் காரணமாக
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்ல முடியாமல்
தவித்திருந்த சிறுவர் சிறுமிகளுக்கு,

கற்பதில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை போக்கவும்,
உளரீதியாக அவர்களிடையே தன்னம்பிக்கையையும்,
இயல்பான மனோநிலையை மீண்டும் ஏற்படுத்தவும்
இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்….
மாலை நேரங்களில் வீட்டருகேயே நடத்தப்படக்கூடிய –
கிட்டத்தட்ட நமது முந்தைய “நைட் ஸ்கூல்” போன்ற
ஒன்றை –

மிகக்கடுமையாக எதிர்க்கிறார் வீரமணியார்….
” காமாலைக் கண்ணன் ……மஞ்சள் ” பழமொழியை
மிகச்சரியாக நிரூபிக்கிறது அவரது எதிர்ப்பு நிலை….

அவரது ” அறிவுமிகுந்த ” -அறிக்கையிலிருந்து கொஞ்சம் –

…………………………………………………


நமது பள்ளிக் கல்வித் துறை தெரிந்தோ, தெரியாமலோ
‘பழைய கள் புதிய மொந்தை’ என்பதுபோல் சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பதை அறிய –

மனுதர்ம சனாதனக் கல்வியை
ஒட்டகம் நுழைவதுபோல் நுழைய இடம் கொடுத்துவிடக்
கூடாது என்று உறுதியாய் உள்ள பலருக்கும் இப்போதுள்ள
போக்கு மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்படி ஒன்று முதல்
5 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க, பிளஸ் டூ
படித்தவர்களையும், 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு
ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம்”


என்று கூறியிருப்பது, யாரும் இதனைப் பயன்படுத்தி
நுழைந்து, பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில்,
மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே இந்த சர்க்கரைப்
பூச்சுள்ள விஷ (ஆர்.எஸ்.எஸ்.) உருண்டை என்றே கூறி
முன்பே எதிர்த்தோம். அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா?

அவசர கோலம் எதற்கு? ….

………………………………………………………..


தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இல்லம் தேடி கல்வி –
திட்ட விளக்கத்திலிருந்து ஒரு பகுதி –

……………………………………..

வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை மாநில கல்வியியல்
ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்கும்.

வகுப்புகள் தினமும் மாலை 5 மணி இரவு 7 மணி வரை
ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம்
நடத்தப்படவேண்டும்.
தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும்
விருதுகள் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு.
மாநில அளவிலான இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும்.

இப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதகாலம்
தினமும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல்,
பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு

புதுமையான முறையில் பாடம்
சொல்லிக்கொடுப்பார்கள். தற்போது, தன்னார்வலர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக (www.illamthedikalvi.tnschools.gov.in)
நடைபெற்று வருகிறது.

இல்லம் தேடிகல்வித் திட்டத்தை செயல்படுத்துவது
தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

கற்பித்தல் மையங்கள் பாதுகாப்பான, சுகாதாரமான, குழந்தைகள் அணுகக் கூடிய வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும். போதுமான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் இடம் மதச்சார்பற்ற மற்றும் பாகுபாடு
அற்ற இடமாக இருக்க வேண்டும். அரசு கட்டிடங்கள்,
சமுதாய கூடங்கள் போன்ற இடங்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட வேண்டும்.

…………………………………………….


இதில் ஆட்சேபிக்க என்ன இருக்கிறது….?
ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகள், சனாதன கல்வி என்றெல்லாம்
வீரமணியார் கூறுவது சிரிப்பையே வரவழைக்கிறது….

வீரமணியாரும், அவரது கூட்டமும், தமிழகத்தை கெடுத்து
குட்டிச்சுவராக்கியதை விடவா, இந்த திட்டம்
நமது குழந்தைகளை கெடுத்து விடும்…?

………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வீரமணியாரும் – காமாலைக் கண்ணரும்….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    இந்த “வீரமணியாரும் அவர் கூட்டமும்” என்பதில் கிருஷ்ணஸ்வாமி வீரமணியின் மகன், பெரியாரின் வாரிசு அன்புராஜும் உண்டா? இந்த வேலையற்ற வீணர்கள் நாட்டிற்குப் பிடித்த சனி.

    இது 30 ஜூலை 2019ல் வந்திருந்த செய்தி

    திராவிட கழக தலைவர் கி.வீரமணி சில தினங்களாக உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர கடவுள் எதிர்பாளர் கி.வீரமணியின் மகன் அன்புராஜ் மற்றும் மருமகள் வீரமணியின் உடல் நலம் பெற காஞ்சிபுரம் சென்று அத்தி வரதர் பிரார்த்தனை செய்த நிகழ்வு தற்போது வெளியாகி உள்ளது.

    விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி – நாஞ்சில் சம்பத் சொல்லும் கணக்கு!
    அத்தி வரதர் எழுந்து நடப்பாரா? என நக்கல் செய்த வீரமணி எழுந்து நடக்க அவரின் குடும்பம் அத்தி வரதர்பிரார்த்தனை செய்திருப்பது இவர்களின் பகுத்தறிவு வெறும் வேஷம் தானா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து கடவுள் நம்பிக்கை கொண்ட அரசியல்வாதி ஒருவர் கூறுகையில், 35 வருடங்களுக்கு முன் கி.வீரமணியின் மகன் அன்புராஜ் திருமணம் கடலூர் சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவிலில் முன்னாள் சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் தான் நடைபெற்றது என்றும், இவர்கள் பகுத்தறிவு, நாத்திகம் என்பது எல்லாம் வெறும் வேஷம் என்று குறிப்பிட்டார்.

    காஞ்சிபுரத்தில் கி.வீரமணி மகன் அன்புராஜ் அத்தி வரதர் பிரார்த்தனை செய்த காட்சியை பார்த்த தேவகோட்டையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “நாத்திகம் பேசி இந்துக்கள் மனதை புண்படுத்தி வந்த கி.வீரமணியின் உடல் நலம் பெற அவர்களின் குடும்பத்தார் அத்தி வரதர் பிராத்திப்பது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கிடைத்த வெற்றி என கூறினார்.

  2. bandhu சொல்கிறார்:

    இவர் எதிர்ப்பதை பார்த்தால் அது நல்ல திட்டம் என்று தோன்றுகிறது! இவருக்கு சமீபத்தில் அளிக்கப்பட ‘ஓசி சோறு’ பட்டத்துக்கு பொருத்தமானவர் என்று அடிக்கடி நிரூபிக்கிறார்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.