
திருவாளர் சத்யபால் மாலிக் –
தற்போது மேகாலயா மாநிலத்தின் கவர்னராக
பணியாற்றி வருகிறார். பாஜக-வைச் சேர்ந்தவர்….
இதற்கு முன்னர், அவர் ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தார்.
அதற்கு முன்னர் பீஹார் கவர்னராக இருந்தார்…
பின் கோவா கவர்னராகவும் இருந்தார்….
தான் காஷ்மீர் கவர்னராக இருந்தபோது நடந்த சில
விஷயங்கள் பற்றி 3 வருடங்கள் கழித்து – அவர் நிதானமாக,
இப்போது சொல்லி இருப்பது அகில இந்திய அரசியலில்
கொஞ்சம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
அவர் சொன்ன சில வார்த்தைகள் மிக முக்கியம் –
அதை அப்படியே படித்தால் தான் அதன் பின்னணியில் உள்ள
விவரங்கள் புரியும் என்பதால், அது அப்படியே ஆங்கிலத்திலேயே
கீழே தரப்படுகிறது.
அதற்கு முன்பாக ஒரு விஷயம்….
பொதுவாக கவர்னர்கள் நடப்பு அரசியல் பேசக்கூடாது…
நேரடியாக அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது மரபு.
ஆனால், இவர் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை
ஆதரித்து பேசி இருக்கிறார். இந்த போராட்டம் மத்திய அரசை
எதிர்த்து நடக்கிறது… பாஜகவைச் சேர்ந்த இவர்,
அதுவும் கவர்னர் பதவியில் இருக்கும் இவர் எப்படி
மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க முடியும்….?
ஏன் இப்படிச் செய்கிறார் …?
கீழே …. திரு.சத்யபால் மாலிக் பேசியிருப்பது –
லிங்க் -(PTI)
…………
……………………….
22/OCT/2021 – New Delhi:
Former Jammu and Kashmir governor Satya Pal
Malik has claimed that he was told he would
get a Rs 300 crore bribe if he cleared
two files belonging to “Ambani” and an
“RSS-affiliated man” during his tenure
but he cancelled the deals, and praised
Prime Minister Narendra Modi for supporting
his decision by saying there is no need
to compromise on corruption.
Malik, who currently holds the gubernatorial
post in Meghalaya, also supported the
ongoing farmer agitation against the Union
government’s farm laws and said he is ready
to leave his post and stand with them if
their protest continues.
“After going to Kashmir, two files came
to me (for clearance), one belonging
to Ambani –
and another to an RSS-affiliated
man who was a minister in the previous
Mehbooba Mufti-led (PDP-BJP coalition)
government –
- and claimed to be very
close to the prime minister.
“I was informed by secretaries in both
the departments that there is a scandal
involved and I accordingly cancelled both
the deals.
The secretaries told me that ‘you will
get Rs 150 crore each for clearing the
files’ but I told them that I have come
with five kurta-pajamas and will leave
with that only,” Malik told a gathering
at an event in Jhunjhunu in Rajasthan.
A video of his speech has gone viral.
Malik did not elaborate on the two files,
but he was apparently referring to a file
related to the roll-out of a group health
insurance policy for government employees,
pensioners and accredited journalists,
for which the government had tied up
with Reliance General Insurance,
part of the Anil Ambani-led Reliance Group.
In October 2018, Malik who was then the
governor of J&K, had cancelled the tie-up
with Reliance General Insurance Company
for providing the group health insurance
to employees as there was “some bungling”
in it.
Two days later, the governor approved
foreclosure of the contract with Reliance
General Insurance –
and referred the matter to the
Anti-Corruption Bureau for examining the
entire process to see whether it was
conducted in a transparent and fair manner.
“As a precaution, I took time from the
prime minister and briefed him about the
two files and the scandal –
- as the people
involved were taking his name.
I straightaway told him that
“I am ready
to leave the post –
- but if I stay back,
I am not going to clear the files,”
he claimed and praised Modi for saying
that there is no need to compromise
on corruption.
He said after his departure from Kashmir,
he made a statement in favour of the
agitating farmers. He said that he being
poor is his strength and he can fight
any powerful man in the country.
“If the farmer agitation continues,
I will leave my post and stand with them
without caring for anyone.
It is possible when I have done no wrong
and do not have any wrong item in
my wardrobe. I am satisfied that I have
not done anything wrong,” he said.
(PTI)
……………………………………….
பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்ட பின்
ஜம்மு-காஷ்மீரில் -மெஹ்பூபா மப்டி அரசு
ராஜினாமா செய்தது – ஜூன் 19, 2018 -ல்.
அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட
குடியரசுத் தலைவரின் ஆட்சியில் –
திரு.சத்யபால் மாலிக் – ஜம்மு-காஷ்மீர் கவர்னராக
நியமிக்கப்பட்டது – ஆகஸ்ட் 2018-ல்.
ஆனால் – குறுகிய காலத்திலேயே, சத்யபால்
ஜம்மு-காஷ்மீரை விட்டு கோவா கவர்னராக –
அக்டோபர் 2019 -ல் மாற்றப்பட்டு விட்டார்.
அவர் மீண்டும் கோவாவை விட்டு மேகாலயா கவர்னராக
மாற்றப்பட்டது – 18 ஆகஸ்ட் 2020 -ல்.
ஆக – ஆகஸ்ட் 2018 முதல் அக்டோபர் 2019 -வரையிலான,
இடைப்பட்ட 14 மாத குறுகிய காலத்திற்கு மட்டுமே அவர்
ஜம்மு காஷ்மீர் கவர்னராக பணியாற்றி இருக்கிறார்…
300 கோடி ரூபாய் லஞ்சம் பற்றி அவர் சொல்வது
இந்த குறுகிய காலத்திற்குள் தான் நடந்திருக்கிறது…
ச.பா.மாலிக் – இந்த சம்பவம் நடந்த சில மாதங்களுக்குள்ளாகவே
முக்கியத்துவம் இல்லாத சிறிய மாநிலமான கோவா-விற்கு
மாற்றப்பட்டது ஏதோ ஒரு செய்தியை சொல்வதாகத்
தோன்றவில்லை…..?
அவரை ஜம்மு-காஷ்மீரிலிருந்து அகற்றும் முயற்சியில்
அந்த 300 கோடி ரூபாய் lobby வெற்றி பெற்று
விட்டது என்கிற செய்தியைச் சொல்வதாகத் தோன்றவில்லை …?
இங்கே இன்னொரு பின்னணியையும் சொல்ல வேண்டும்…
ச.பா.மாலிக் – ஆர்.எஸ்.எஸ்.-க்கு சம்பந்தமில்லாதவர்.
2004-ல் வி.பி.சிங் கட்சி தோற்ற பிறகு – அங்கிருந்து
பாஜக-விற்கு வந்தவர்.
அவருக்கு – பாஜக தலைமை மீதோ,
பாஜக தலைமைக்கு – அவர் மீதோ –
விசேஷ அபிமானமோ, பிடிமானமோ எதுவும் இல்லை;
உத்திரப் பிரதேசத்தில் 1974-லிருந்து அரசியலில் இருப்பதால்,
அவர் ஏரியாவில் கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர்.
அவர் தேர்தலுக்கு ஓரளவு உதவியாக இருப்பார்
என்பதாலேயே அவருக்கு இன்னும் பதவி நீடிக்கிறது…
மார்ச் 22-ல் உ.பி.தேர்தல் முடிந்த பிறகு, தான் கழட்டி
விடப்படுவோம் என்பதை அவரும் உணர்ந்திருக்கலாம்…
அவர் காஷ்மீரை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு,
அவர் கவர்னர் பதவியிலிருந்த காலத்தில் –
அந்த (300 கோடி) 2 கேஸ்களை inestigate
செய்ய போடப்பட்ட உத்திரவு வாபஸ் பெறப்பட்டிருக்கும்
என்பதை யூகிக்கலாம். ஏனெனில் அதைப்பற்றிய எந்தவித
செய்தியும் கடந்த 3 வருடங்களில் வெளியாகவில்லை;
இது ஒரு பக்கமிருக்க – அவர் பேசியதை மீண்டும் ஒருமுறை
ஆழமாகப் படித்தால், வேறொரு விஷயம் கூட அதில்
மறைமுகமாக சொல்லப்பட்டிருப்பது புரிகிறது….
அதை – நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை;
வாசக நண்பர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
.
……………………………………
லஞ்ச ஊழலுக்கு நீங்கள் அடி பணிய
வேண்டியதில்லை என்று அவருக்கு
ஆலோசனை சொல்லப்பட்டு, ஆனால்
அவர் அந்தப் பதவியிலிருந்து
தூக்கப்பட்டு, வேறொருவர் அங்கே
அமர்த்தப்பட்டால் அதற்கென்ன அர்த்தம்
கே.எம்.சார் ?
நீங்கள் அடியபணிய வேண்டாம். அதற்கு வேறு ஒருவரை அனுப்புகிறோம் என்று இருக்குமோ?
Exactly அதே தான்.
நீங்கள் இதற்கெல்லாம் பயன்பட மாட்டீர்கள் என்கிற
நிலையில் தண்டத்திற்கு இங்கெதற்கு இருக்கிறீகள்.
போய்ச் சேருங்கள் !
அதை வெளியே சொல்ல இந்த ஆசாமிக்கு தெகிரியமில்லை;
3 வருடம் கழித்து முனகுகிறார்.