
தற்போதைய இளைஞர்களின் most favourite singer
‘சித் ஸ்ரீராம்’ தான்… இந்த பாப்புலாரிடி ஸ்ரீராமுக்கு கிடைத்தது
அவரது திரைப்பட பின்னணிப் பாடல்களின் மூலம் தான்….
ஹிட்’ ஆன அவரது திரைப்படப் பாடல் ஒன்றை –
அவர் மேடையில் நேரடியாக பாடும் காணொலி ஒன்று கீழே –
( விசுவாசம் படத்திலிருந்து “கண்ணான கண்ணே…” )
( இன்று இந்தப்பாடலுக்காக, இசையமைப்பாளர் இமானுக்கு தேசியவிருது கிடைத்திருப்பதாக ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது…!!! )
………..
………..
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,
இதே சித் ஸ்ரீராம் –
கர்நாடக சங்கீதத்திலும் முறையாக
பல வருடங்கள் பயிற்சி பெற்று,
முழுநேர சங்கீதக் கச்சேரி நடத்தும் அளவிற்கு
திறமை உள்ளவர் என்பது தான்….
டிசம்பர் மார்கழி உத்சவம் உட்பட,
பல கர்நாடக சங்கீத சபா மேடைகளில் பாடியும்
வருகிறார்…..
இந்த மாதிரி கர்நாடக சங்கீதத்திலும் புலமை பெற்று – கச்சேரிகள் செய்து வரும் அதே நேரத்தில்,
திரைப்பட பின்னணி பாடகராகவும் புகழ்பெற்றவர்கள் அபூர்வம் தான் – திரு.கே.ஜே.யேசுதாஸ் போன்று…..
மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் அந்த தனித்துவமான குரல் தான் சித் ஸ்ரீராமின் ப்ளஸ் பாயிண்ட்….அது தான் அவரது வெற்றிக்கும் காரணமென்று தோன்றுகிறது…!!!
கீழே அவரது கர்நாடக மேடையிலிருந்து ஒரு பாடல் –
(நகுமோமு – தியாகராஜர் கீர்த்தனை ,,,,)
………
………
திரையில் வெளிவந்த ” கண்ணான கண்ணே ” பாடலின் காட்சிகள் ….
…………………………………………….
Sid Sriramக்கு நீங்க சொல்லியிருக்கற மாதிரி இளைஞிகள் இளைஞர்கள் மத்தியில பெரிய பேர் இருக்கு. அவர் பாடும் பாடல்கள் மத்தவங்களால பாடமுடியாதுன்னு என் பெண் சொல்லிட்டிருப்பா. கைல காசு, பிறகு தோசை என்ற அளவில் அவர் சினிமாப் பாடல்களைப் பாடித் தருவாராம். கர்நாடக இசை பாடிப் பாடி சம்பாதிப்பதைவிட திரைப்படப் பாடல்கள் நல்லா சம்பாதிச்சுத் தரும். அவர் நேரம், அவர் பாடும் எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆகிவிடுகின்றன.
ஒரு நிகழ்ச்சியில் he conducted himself very nicely.
I am not impressed with his carnatic talent. ஆனால் திரைப்படப் பாடல்களுக்கு, நல்ல வசீகரமான வித்தியாசமான குரல்.