
பொதுவாக, அரசாங்கத்தில் –
இருக்கிற பதவிகளை – நிரப்புவதற்கு தான்
பொருத்தமான ஆட்களை தேடுவார்கள்.
இங்கே நாம் ஒரு நேர்மாறான அதிசயத்தைப் பார்க்கிறோம்.
ஜால்ராக்களுக்காக, ( ஆளும் கட்சிக்கு பலமாக ஜால்ராக்கள்
போடும் நபர்களுக்காக) – அரசு பதவிகள்
உருவாக்கப்படும் அதிசயத்தைப் பார்க்கிறோம்.
நேற்றைய செய்தித் தளத்திலிருந்து –
அரசு ஒரு புதிய குழுவை நியமித்திருக்கிறது ….
சுப வீரபாண்டியனுக்கு புதிய பதவி..!
முதல்வர் அறிவிப்பு…!!

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கூறியுள்ளதாவது:
“சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச்
செயல்படுத்தப்படுகிறதா என்பதைக்
கண்காணிப்பதற்காக தமிழக அரசால் ‘சமூகநீதிக்
கண்காணிப்புக் குழு’ அமைக்கப்படும்.
இந்த சமூகநீதிக் கண்காணிப்புக் குழு –
கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள்,
நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல்,
முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா
என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும்,
செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதோடு,
இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் –
உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும்.
7 பேர் கொண்ட இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்போர் –
திருவாளர்கள் – சுப. வீரபாண்டியன் – தலைவர்
முனைவர் கே. தனவேல், ஐஏஎஸ் (ஓய்வு) –
பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் –
கவிஞர் மனுஷ்யபுத்திரன் – ஏ.ஜெய்சன்
பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன்
கோ. கருணாநிதி – ஆகிய மற்ற 6 பேரும் உறுப்பினர்கள்.
……………………….
அதென்ன புதிதாக ஒரு கண்காணிப்பு குழு …?
அரசு நிர்வாகத்தில் ஏற்கெனவே – ஒவ்வொரு இலாகாவிலும்
மேற்பார்வை பணிக்காகவே ஏகப்பட்ட அதிகாரிகள்
இருக்கிறார்கள். குறைந்த பட்சம், 2-3 அரசுப்பணி அதிகாரிகள்
இருக்கிறார்கள். அவர்களுக்கும் மேலே இலாகா செயலாளர்
இருக்கிறார். இவர்கள் எல்லாருக்கும் மேலாக
தலைமைச் செயலர் இருக்கிறார்.
இதைத்தவிர ஒவ்வொரு இலாகாவிற்கும்
ஒரு தனித்தனியே அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
அரசால் ஏற்கெனவே இயற்றப்பட்டுள்ள சமூகநீதி சட்டப்படி
செயலாற்றுவதும்,
அதை உறுதி செய்வதும் தான் இவர்களது பணி.
இதற்கான ஊதியத்தையும் அவர்கள் பெறுகிறார்கள்.
அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்கத்தைப்பார்த்தால்,
இவர்கள் எல்லாரையும் மேற்பார்வை செய்வதற்காகவே
இந்த புதிய கங்காணிக்குழு அமைக்கப்படுகிறது
என்று தெரிகிறது.
அப்படிச் செய்வதென்றால், அரசு கோப்புகள் எல்லாவற்றையும்
பார்வையிடும் அதிகாரமும் அந்த குழுவிற்கு கிடைக்கும்.
அரசு ஊழியர்களை, அதிகாரிகளை மிரட்டும் வாய்ப்பும்
அந்த குழு உறுப்பினர்களுக்கு கிடைக்கும்….
ஆமாம் – அரசு கோப்புகளை பார்ப்பதாக இருந்தால்,
ரகசிய காப்பு பிரமாணம், உறுதிமொழி எடுத்துக்கொள்ள
வேண்டுமே….? இந்த கங்காணிக்குழுவினர் அதைச்
செய்யயும்படி பணிக்கப்படுவார்களா…?
அந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டால்,
திருவாளர் மனுஷ்யபுத்திரன் போன்றவர்களால், டிவி
விவாதங்களில், சகட்டுமேனிக்கு உளற முடியாதே…?
வாயடக்கத்துடன் செயல்பட வேண்டியிருக்குமே…
அது அவர்களுக்கு சம்மதமாக இருக்குமா….?
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த 7 உறுப்பினர்
குழு அமர்ந்து பணியாற்ற, தங்களுக்குள் விவாதிக்க –
தனியாக அலுவலகங்கள் தேவைப்படுமே…
அலுவலகம் என்றிருந்தால், உதவிக்கு சுருக்கெழுத்தாளர்கள்,
எழுத்தர்கள், கடைநிலை ஊழியர்கள்…?
அரசு பணியாற்றும்போது அவர்கள் சொந்த செலவில்,
தொலைபேசியை பயன்படுத்துவார்களா…? அப்படியானால்,
அவர்களுக்கு தொலைபேசியும் அரசினால் வழங்கப்பட
வேண்டுமே… செய்வார்களா…?
பிறகு அரசு அலுவல்களுக்காக சென்று வர வாகனங்கள் –
கார்-ஜீப், டிரைவர், பெட்ரோல் கூப்பன் என்று….?
இவ்வளவு பணிகள் செய்யப்போகிறவர்கள் சமூக சேவையாக
கருதி இதை இலவசமாகச் செய்வார்களா…?
அவரவர் அந்தஸ்திற்கு ஏற்றவாறு, ஒரு
கௌரவ ஊதியமாவது (அலவுன்ஸ்) கொடுக்கப்பட வேண்டுமே…
இத்தனை வேண்டாத செலவுகளுக்கும் –
நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கைப்படி –
அரசின் நிதி நிலை இடம் கொடுக்கிறதா..?
………….
தண்டம் தண்டம் – அத்தனையும் வீண் செலவு…
ஜால்ரா’க்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக
செலவழிக்கப்படும் மக்கள் பணம்….என்று தோன்றுகிறதா…?
ஜால்ராக்களில் பலவிதம் உண்டு –
சுப.வீ.அவர்களுக்காக இந்த பதவியை உண்டு-பண்ணுவதில்
ஒரு விதத்தில் நியாயமுண்டு.
ஏற்கெனவே மே 1-ந்தேதியே வெளியிடப்பட்டு, அமேசான்
ஸ்டோரிலேயே கிடைக்கும் ஒரு புத்தகத்தை நேற்றைய தினம்
மீண்டும் ஒருமுறை ரிலீஸ் செய்ய யாருக்காவது
யோசனை தோன்றுமா…?
அப்படி என்ன புத்தகம் என்று கேட்கிறீகளா….?
“Why do we need MKS as PM of India “
இரண்டு முறைகள் வெளியிடப்பட்ட ஒரே புத்தகம்….
நேற்று 2-ம் முறையாக வெளியிட்டவர் – நமது நண்பர் புதியவன்
அவர்களுக்கு மிகவும் பிடித்த பிரபல பொருளாதார நிபுணர் –
ஜெயரஞ்சன் அவர்கள்…( அவர் ஏற்கெனவே திட்டக்கமிஷன்
துணைத்தலைவராக நியமிக்கப்பட்டு விட்டார்…!!!)


………………………………………………………………………………………………..
அனைத்து அரசு நூலகங்களும் இதை வாங்க ஏற்கெனவே
பொருத்தமான உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கும் என்று
நம்பலாம்.
பொதுவாக – மக்களை படுமுட்டாள்கள் என்றே அரசியல்வாதிகள்
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இவை மீண்டும்
உறுதிப்படுத்துகின்றன…. Ofcourse – நமது மக்களில்
பலரும் இதை நியாயப்படுத்தும் விதமாகவே இருக்கின்றனர்
என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.
.
………………………………………………………………………………………………………………….
Exclusive: ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி.. இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டது அவருக்கே தெரியாது -கதிர்
By Arsath Kan
Updated: Sunday, October 24, 2021,
சென்னை: ஸ்டாலின் ஏன் பிரதமராக வேண்டும் என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான தகவல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெரியாது எனக் கூறுகிறார் அந்த நூலின் ஆசிரியர் கதிர்.
https://tamil.oneindia.com/news/chennai/why-do-we-need-mks-as-pm-of-india-book-author-kathir-interview-436748.html
சுப வீ தலைமையில் குழு.. பாலின சமத்துவமே இல்லை..
சமூக நீதி சாத்தியம் எப்படி .. எழும் விமர்சனங்கள்
By Velmurugan P Updated: Sunday,
October 24, 2021,
சென்னை : சுப வீரபாண்டியன் தலைமையிலான சமூக நீதி கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக ஒரு பெண் கூட இல்லை. பாலின சமத்துவமே இல்லாத குழு எப்படி சமூக நீதியை கண்காணிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
https://tamil.oneindia.com/news/chennai/why-excluded-women-s-in-suba-veerapandian-lead-social-justice-monitoring-committee-436759.html
நீங்க என்னவோ இதையெல்லாம் தவறு என்று தொனிக்கும்படி பதிவு எழுதியிருக்கீங்க கா.மை.சார். அப்போ இந்த புளி, சுபவீ ஜால்ரா, லியோனி போன்ற அல்லக்கைகளுக்கு எப்படி அரசுப் பதவி கொடுப்பது? வயது லிமிட் கிடையாது, போய் பரீட்சை எழுதுங்க என்று சொன்னால், எந்த ஜென்மத்தில் இவங்களுக்கு வேறு வேலை கிடைக்கும்? அதனால் சுலப முறையாக அரசுப் பணி கிடைத்திருக்கிறது. இந்தப் பதர்கள், திமுக ஆட்சி இல்லாதபோது, திரும்பவும் பழைய பணி (வெட்டிவேலைதான்) க்குத் திரும்ப வேண்டியதுதான்.
ஏற்கனவே லியோனி, தமிழக அரசுப்பள்ளி பாடத்திட்டத்தில் கருணாநிதியைப் பற்றி பாடத்தை நுழைத்துவிட்டார் என்று பலர் எழுதினார்கள். இப்போ சுபவீ முறை. அது சரி… திட்டக்குழுவில் புளியை நுழைத்து சம்பளம் கொடுத்தபோதே ஏதோ உலகப் பொருளாதார திட்டப் புளிகள் 5 பேரை கன்சல்டண்ட்டாக அரசு நியமிக்கும் என்று சொன்னார்களே… அவங்க வேலை பார்க்க ஆரம்பித்தாகிவிட்டதா?
அல்லது இந்த ஜெயரஞ்சன் அவர்கள்தான், இனிப்பு பாக்ஸ் சப்ளை செய்ய 100 கோடி டர்ன் ஓவர் இருக்கும் கம்பெனிதான் வேணும், மின்சாரம், இந்த மாதிர் போலிக் கம்பெனிகளிலிருந்து 20 ரூபாய் கொடுத்து வாங்கணும், திமுகவுக்கு உதவுவதற்காக, அண்ணாத்த படம் ரிலீஸுக்கு முந்தைய நாள் திரையரங்குகள், உணவகங்கள் போன்றவை திறப்பதற்கு இருந்த தடைகளையெல்லாம் நீக்கணும் என்பதெற்கெல்லாம் திட்டம் போட்டுக் கொடுத்தார் என்று யாரேனும் தவறாக எழுதாமல் இருந்தால் சரிதான்.
புதியவன்,
“யாரேனும் தவறாக எழுதாமல் இருந்தால் சரிதான்”
என்று – நீங்கள் தவறாக எழுதி விட்டீர்கள் போலிருக்கிறதே…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அனைத்தும் பிரகாசமாக இருக்கும், அதற்கு உதாரணங்கள் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி