
எனக்கு சாருஹாசன் அவர்களை –
கமலஹாசனின் அண்ணன் என்றோ,
சுஹாசினி அவர்களின் அப்பா என்றோ அடைமொழிப்படுத்த
விருப்பமில்லை…
ஏனெனில், இந்த இரண்டு பேரும்
மேக்கப் போடாவிட்டாலும் கூட எப்போதுமே நடிப்பவர்கள்…!
சாருஹாசனின் இயல்பு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
மிகவும் வெளிப்படையாகப் பேசுபவர்…
எந்த இடமாக இருந்தாலும் சரி – மனதில் தோன்றுவதை
அப்படியே ஒளிவுமறைவின்றி சொல்பவர்….
அவரிடம் எனக்குப் பிடிக்காத பல விஷயங்கள் –
(திருமணத்தில் நம்பிக்கை இல்லை;
தினமும் 2000 ரூபாய்க்கு குடிப்பது etc.etc. )
உண்டு என்றாலும் கூட – நான் அவரை
ரசிக்கிறேன்…..அவரது கொள்கைகளைப்பற்றி நான் இங்கு
எதுவும் விமரிசிக்கப்போவதில்லை …
அவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் …
சுவாரஸ்யமான ஒரு பேட்டியின் காணொலி கீழே –
………………
…
……………………………………………
ஆச்சரியம்…
//(திருமணத்தில் நம்பிக்கை இல்லை; தினமும் 2000 ரூபாய்க்கு குடிப்பது etc.etc. )
முழுவதுமாக ஒத்துக் கொள்கிறேன்
//எந்த இடமாக இருந்தாலும் சரி – மனதில் தோன்றுவதை அப்படியே ஒளிவுமறைவின்றி சொல்பவர்….
திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் குணமடைந்து
வீடு திரும்பி இருக்கிறார் என்கிற மகிழ்ச்சியான
செய்தி வெளியாகி இருக்கிறது….
இந்த நல்ல செய்தியை இதர வாசக நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
(நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
……………………………..
அனைவரது பிரார்த்தனைகளுக்கும் நன்றி –
தன்னுடைய நம்பிக்கைகள், செயல்கள், கமலஹாசன் கட்சி/தனிப்பட்ட வாழ்வு என்று அனைத்தையுமே ஒளிவு மறைவின்றி பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் சொல்லக்கூடிய இயல்பு சாருஹாசன் அவர்களுக்கு உண்டு. (அவருக்கும் கமலுக்கும் 17+ வயது வித்தியாசம். கமல், இன்னொரு அண்ணணுடன்/சந்திரஹாசனுடன் இன்னும் க்ளோஸ்). அவருடைய வெளிப்படையான பேச்சு/கருத்துதான் என்னைக் கவர்ந்தது. அவர் பெண்ணும் (அனுஹாசன்) அவரைப் போன்றே வெளிப்படையானவர். சாருஹாசன், கமல் கட்சி ஆரம்பிப்பது வேஸ்ட், 5 சதத்திற்கு மேல் அவரால் ஒரு நாளும் வாக்கு வாங்க முடியாது என்று கூறினவர், தொடர்ந்து அதே கருத்தையே முன்னெடுப்பவர்.
கமலுக்கு திரையில் நடித்து நடித்து போலிகள் தன்னைச் சூழ்ந்திருப்பதை, ஜால்ராக்களை மட்டும் தன்னைச் சுற்றி இருப்பதை விரும்புவார். இதையும் பலர் எழுதியிருக்கின்றனர். (திறமையானவர்.. அதில் சந்தேகம் இல்லை)
leela thomson?
bandhu,
நீங்கள் யூகித்திருப்பது ஒரு விதத்தில்
நியாயமானது தான்… லீலா தாம்சன் கிட்டத்தட்ட
இதே போல் தான் இருப்பார்..
ஆனால், இந்த புகைப்படத்தில் இருப்பது,
நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின்
பாட்டி திருமதி சரோஜா என்பவர்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தாதா 87 ஷூட்டிங் ?