
” பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக போர் புரிந்ததாக
என் மீது குற்றம் சாட்டி இருக்கிறீர்கள்….
போர்க்களத்தில் சிக்கிக்கொண்ட ஒரு எதிரியை
எப்படிக் கொல்வீர்கள்…
தூக்கிலிட்டா… துப்பாக்கியால் சுட்டா…?
உங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமானால் –
போர்வீரன் என்னை சுட்டுக் கொல்லுங்கள் …”
மரண தண்டனை விதிக்கப்பட்டபோது “புரட்சி வீரன் பகத் சிங்”
பிரிட்டிஷாருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது ….?
————————–
சாவர்க்கர் பற்றிய ஒரு விவரமான கட்டுரையை
இங்கே எழுதும்போதே நினைத்தேன்…
சாவர்க்கருக்கும், பகத்சிங்குக்கும் உள்ள வித்தியாசத்தைப்
பற்றியும் ஒப்பிட்டு எழுத வேண்டுமென்று…
சாவர்க்கர், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கோரியும்,
தன்னை சிறையிலிருந்து விடுதலை செய்தால்,
பிரிட்டிஷார் எதிர்பார்க்கும் விதத்தில், தான் நடந்துகொள்ள
தயாராக இருப்பதாக தெரிவித்தும் எழுதிய கடிதம்
சாவர்க்கர் பற்றிய இடுகையில் வெளியிடப்பட்டது.
—————————–
பகத் சிங் நிலை என்ன …?
வழக்கின் பின்னணி –
பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூன்று பேர் மீதும் –
பிரிட்டிஷ் அதிகாரி சாண்டர்ஸ் மற்றும் போலீஸ் அதிகாரி
சனன் சிங்கை கொன்றதாகவும், பிரிட்டிஷ்
அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக போர் தொடுத்ததற்காக
ராஜத்துரோக குற்றமும் – பிரிட்டிஷ் அரசால் வழக்கு
தொடரப்பட்டது.
இன்றைக்கு ஏறக்குறைய 92 ஆண்டுகளுக்கு முன் –
பிரிட்டிஷ் ஆட்சியில் –
ஜூலை 10, 1929 அன்று வழக்கு விசாரணை துவங்கியது.
பகத் சிங் இந்த வழக்கு விசாரணையை இந்தியர்களின்
சுதந்திர கோரிக்கை நாடு முழுவதும் வலுப்படவும்,
அதற்குரிய பின்னணியை உருவாக்கிக் கொள்ள
இந்த வழக்கு உதவ வேண்டுமென்றும் தீர்மானித்து,
அதற்கேற்ப இந்த வழக்கில் வக்கீல்கள் யாருமின்றி –
தானே வழக்காடினான்.
வழக்கின் இறுதியில், எதிர்பார்த்தபடியே –
பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய
மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
————————-
தண்டனை நிறைவேற்றப்படும் முன், பகத் சிங், பிரிட்டிஷ்
அரசுக்கு மனு வடிவில் ஒரு கோரிக்கை விடுத்தான்…
எப்படி….?
” என்னை மன்னித்து விடுங்கள்… இனி நீங்கள்
சொல்கிறபடியெல்லாம் நடக்கிறேன் ” என்றா…?
………..
” நாங்கள் குற்றவாளிகள் என்று தீர்மானித்து
மரண தண்டனை என்று தீர்ப்பும் கொடுத்து விட்டீர்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டம் எங்களால்
துவங்கப்பட்டது இல்லை….
அது எங்களோடு முடியப்போவதும் இல்லை…
எங்கள் மரணத்திற்குப் பிறகும் –
அதன் இலக்கை அடையும் வரையில் இந்தப் போராட்டம்
எங்களுக்குப் பின் வருபவர்களால், தொடரப்பட்டுக்கொண்டே
தான் இருக்கும். மரணத்திற்கு நாங்கள் அஞ்சவில்லை.
ஆனால், எங்கள் உயிரைப் பறிப்பதைப்பற்றி ஒரு
வேண்டுகோள். பிரிட்டிஷ் அரசோடு நாங்கள் போர்
தொடுத்ததாக எங்கள் மீது ராஜத்துரோக குற்றச்சாட்டு
வைக்கப்பட்டது….
அப்படியானால், இதை ஒரு போர் என்று பிரிட்டிஷ் அரசு
ஒப்புக்கொள்கிறது. எனவே, போரில் பிடிபட்ட
போர்க்குற்றவாளிகள் நாங்கள்…
போர்க் குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு தான்
மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள். நாங்களும்
ஒரு போர்க்குற்றவாளியைப் போல், கௌரவமாகவே
உயிரிழக்க விரும்புகிறோம்.
எனவே எங்களை தூக்கில் போடாமல், துப்பாக்கியால்
சுட்டுக் கொல்வதன் மூலம் எங்கள் மரண தண்டனையை
நிறைவேற்ற வேண்டும் ….”
—————
தங்கள் மரணத்தை வீர மரணமாக பகத்சிங் நினைத்தான்.
உயிர் பிழைக்க கெஞ்சவில்லை;
மன்னிப்பு கோரவில்லை.
தூக்கில் போடுவதற்கு பதிலாக,
யுத்தக் கைதியாக பாவித்து, எங்களை சுட்டுக் கொல்லுங்கள்
என்று பிரிட்டிஷ் அரசிடம் சொல்லி இருக்கிறான்…..
எடுத்துக்கொண்ட கொள்கைக்காக – தைரியமாக அதன்
விளைவுகளை எதிர்நோக்கத் தயாராக இருந்த,
சாகத்துணிந்த ஒரு வீரன்.
தன் சாவும், சுதந்திரப்போராட்டம் வலுப்பெற உதவ
வேண்டுமென்று நினைத்த ஒரு வீரன் …!!!
————
———–
பகத் சிங், பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய அந்த அற்புதமான கடிதம் கீழே…
——————————-
Bhagat Singh’s Last Petition-
Lahore Jail, 1931
bhagat singh jail
To: The Punjab Governor
Sir, With due respect we beg to bring
to your kind notice the following:
That we were sentenced to death on
7th October 1930 by a British Court,
L.C.C Tribunal,
constituted under the Sp. Lahore
Conspiracy CaseOrdinance, promulgated
by the H.E. The Viceroy,the Head of
the British Government of India,
and that the main charge against us
was that of having waged war
against H.M. King George,
the King of England.
The above-mentioned finding of the
Court pre-supposed two things:
Firstly, that there exists a state
of war between the British Nation
and the Indian Nation and, secondly,
that we had actually participated
in that war and were therefore
war prisoners.
The second pre-supposition seems
to be a little bit flattering,
but nevertheless it is too tempting
to resist the desire of acquiescing
in it.
As regards the first, we are constrained
to go into some detail.
Apparently there seems to be no such
war as the phrase indicates.
Nevertheless, please allow us to accept
the validity of the pre-supposition
taking it at its face value. But in order to be
correctly understood
we must explain it further.
Let us declare that the state of war
does exist and shall exist so long as
the Indian toiling masses and the
natural resources are being exploited
by a handful of parasites.
They may be purely British capitalist
or mixed British and Indian or even
purely Indian. They may be carrying
on their insidious exploitation through
mixed or even on purely Indian
bureaucratic apparatus. All these
things make no difference.
No matter, if your government tries and
succeeds in winning over the leaders of
the upper strata of the Indian society through petty
concessions and compromises
and thereby cause a temporary
demoralisation in the main body of the forces.
No matter, if once again the vanguard
of the Indian movement, the Revolutionary
Party, finds itself deserted in the thick
of the war.
No matter if the leaders to whom
personally we are much indebted for the
sympathy and feelings they expressed for us, but
nevertheless we cannot
overlook the fact that they did become
so callous as to ignore and not to make a mention in
the peace negotiation of
even the homeless, friendless
and penniless of female workers who are
alleged to be belonging to the vanguard
and whom the leaders consider
to be enemies of their utopian non-violent
cult which has already become a
thing of the past;
the heroines who had ungrudgingly
sacrificed or offered for sacrifice
their husbands, brothers, and all that were nearest and
dearest to them,
including themselves, whom your
government has declared to be outlaws.
No matter, it your agents stoop so low
as to fabricate baseless calumnies
against their spotless characters to
damage their and their party’s reputation.
The war shall continue.
It may assume different shapes at
different times. It may become now open,
now hidden, now purely agitational,
now fierce life and death struggle.
The choice of the course, whether
bloody or comparatively peaceful,
which it should adopt rests with you.
Choose whichever you like. But that
war shall be incessantly waged
without taking into consideration
the petty (illegible) and
the meaningless ethical ideologies.
It shall be waged ever with new vigour,
greater audacity and unflinching
determination till the Socialist Republic
is established and the present social
order is completely replaced by a new
social order, based on social prosperity
and thus every sort of exploitation
is put an end to and the humanity is
ushered into the era of genuine and
permanent peace.
In the very near future the final battle
shall be fought and final settlement
arrived at.
The days of capitalist and imperialist
exploitation are numbered. The war
neither began with us nor is it going to end with our
lives. It is the
inevitable consequence of the historic
events and the existing environments.
Our humble sacrifices shall be only a
link in the chain that has very accurately
been beautified by the unparalleled
sacrifice of [Jatin] Das and most tragic
but noblest sacrifice of Comrade
Bhagawati Charan and the glorious death of
our dear warrior [Chandrashekhar] Azad.
As to the question of our fates,
please allow us to say that
when you have decided to put us to death,
you will certainly do it.
You have got the power in your hands
and the power is the greatest
justification in this world.
We know that the maxim “Might is right”
serves as your guiding motto.
The whole of our trial was just a proof of that.
We wanted to point out that according
to the verdict of your court we had
waged war and were therefore war prisoners.
And we claim to be treated as such,
i.e., we claim to be shot dead instead
of to be hanged.
It rests with you to prove that you
really meant what your court has said.
We request and hope that you will
very kindly order the military department
to send its detachment to perform our execution.
Yours,
BHAGAT SINGH
Translated by the Shaheed Bhagat Singh Research Committee
.
…………………………………………….
எந்தவித விளம்பரமும் இன்றி பகத்சிங் போன்றோரின் தியாகம் போற்றப்படுகிறது. அவர்கள் புகழ் நிலைத்து நிற்பதற்கு காரணம் அவர்களுடைய வீரம் சார்ந்த தியாகம்.
பாஜக எப்போதாவது பகத் சிங்
பற்றி பேசி இருக்கிறதா ?