மந்திரியே சொல்லிட்டார் -ஒப்புக்கிட வேண்டியது தான்…. ஆனால் ….???

.

.

சாவர்க்கர் பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் நிகழ்ந்து வருகின்றன.
கடந்த வாரம் மீண்டும் இந்த சர்ச்சைகள் உருவாகின….

பாஜக அவரை “வீர்” (வீரர்,,,) சாவர்க்கர் என்று பாராட்டி, சிறந்த
தேசபக்தர் என்று கொண்டாடுகிறது…..

ஆனால், சரித்திரம் என்ன சொல்கிறது….?

1911-ல் அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட
சாவர்க்கர் அங்கே இருந்த ஒன்பது ஆண்டுகளில் ஐந்து மன்னிப்பு
கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதினார்.

1911, 1913, 1914, 1918 மற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் அவை
எழுதப்பட்டன. ஆறாவதாக ஒரு மன்னிப்பு கடிதம் அவரது
மனைவியால் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதப்பட்டது.

இதுவரை யாரும் சொல்லாத ஒரு புதிய விஷயத்தை –
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காரணம் ஒன்றை
அண்மையில் மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார்….

” காந்திஜி சொல்லித்தான் ” சாவர்க்கர் மன்னிப்பு கோரினாராம் ….

கீழே –

சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டது,
1911-ல். முதல் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தது
அதே ஆண்டில்….

ஆனால் காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து
இந்திய அரசியலில் பங்குகொள்ள திரும்பி வந்ததே
1915-ல் தான் என்று சரித்திரம் சொல்கிறது…. கீழே –

காந்திஜி இந்தியா திரும்பும் முன்னரே சாவர்க்கர் மூன்று
மன்னிப்பு கடிதங்களை கொடுத்திருந்தார்….

இந்திய அரசியலில் ஈடுபடாத நிலையில் –
தென்னாப்பிரிக்காவிலிருந்த காந்திஜி,

அந்தமான் சிறையில் கடுமையான காவல்களுக்கிடையே
இருந்த சாவர்க்கருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து
விடுங்கள் என்று எந்த விதத்தில் ஆலோசனை
சொல்லி இருக்க முடியும்….?

வெறுமனே மந்திரி சொல்லி விட்டால் ஏற்றுக் கொள்ள
வேண்டியது தானா…?
இதை யார் விளக்குவார்கள்….?

இன்னொரு பக்கமோ, இதற்கு நேர்மாறாக
சாவர்க்கர் மன்னிப்பு கேட்கவே இல்லை என்று
சொல்வது போல் –

சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான
சான்றுகள் எதுவும் அரசிடம் இல்லை என்று மத்திய அரசினால்
2020-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறப்பட்டிருக்கிறது….

இவற்றில் எது நிஜம்…. எவ்வளவு கதை….
எவ்வளவு தூரம் வரலாறு திரிக்கப்பட்டு,
அவரவர்க்கு வசதிபோல் செய்திகள் உருவாக்கப்படுகின்றன…?

நிஜத்தைப் பொருத்த வரையில் –
திரைப்படங்களில் இண்டர்வெல்லுக்கு முன்னரும்,
இண்டர்வெல்லுக்குப் பின்னரும் – கதை வெவ்வேறு திசைகளில்
பயணிப்பது போல –

சாவர்க்கரும் – அந்தமான் சிறையில் அடைக்கப்படும் முன்னர்
வீரராகவும், புரட்சியாளராகவும் இருந்திருக்கிறார்….

ஆனால் சிறைக்கொடுமையை தாங்க முடியாமல்,
பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கோரி, பிரிட்டிஷாரின் நிபந்தனைகளை
ஒப்புக்கொண்டு வெளியே வந்து,

அதன் பிறகு பிரிட்டிஷ் அரசுக்கு சாதகமாக செயலாற்றி,
பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதம் 60 ரூபாய் பென்ஷன் வேறு
பெற்றிருக்கிறார்…. இது தான் உண்மை.

உண்மையை உண்மை என்று சொல்வதில் என்ன தயக்கம்…?

ஒரே மனிதரின் வாழ்க்கை சிறைக்குப் போகும் முன்னர்
ஒரு மாதிரியாகவும், வெளியே வந்த பின் வேறு மாதிரியாகவும்
இருந்ததை ஒப்புக்கொள்ள சிலர் மறுப்பதேன்….?

இறுதி மூச்சுவரை பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போரிட்டு,
அளவிலாத துன்பங்களையும் சிறை வாசங்களையும் அனுபவித்து,
நாட்டிற்காக பல தியாகங்களைப் புரிந்த – கப்பலோட்டிய தமிழன்
வ.உ.சி., சுப்ரமணிய சிவம், பாரதி போன்ற உண்மையான
போராட்ட வீரர்களைப் பார்த்த நம்மால்,
ஒரு கோழையை வீரனென்று எப்படி ஏற்க முடியும்….?

சிறைக்கொடுமையை தாங்க முடியாமல் – விடுதலைப்போரிலிருந்து
பின் வாங்கிய,

பிரிட்டிஷ் அரசு சொல்வதைச் செய்வாதாக
எழுதிக்கொடுத்து விட்டு வெளியே வந்த,

வெளியே வந்த பின் –
தான் முன்பு எதிர்த்த பிரிட்டிஷ் அரசுக்கே ஆதரவாக
வேலை செய்த சாவர்க்கரை – பொருத்தமே இல்லாமல்
“வீர்” சாவர்க்கர் என்று மீண்டும் மீண்டும் “பஜனை” பாடுவது ஏன்…?

பாஜக வலுக்கட்டாயமாக சாவர்க்கரை வீரராக திணிப்பது ஏன்
என்பதை – வரலாற்றை விரிவாகப் படித்தால் புரியும்…..

கீழே –

………………………..

வீர் சாவர்க்கர் என்று அழைக்கப்படும் …
விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிறந்தது –
இன்றைய மஹாராஷ்டிரா,
நாசிக் மாவட்டத்தில், பாகூர்-ல்
பிறப்பு – 1883 மே 28
இறப்பு – 1966 பிப்ரவரி 26 ( 82 வயதில்…)

மராத்தியை தாய்மொழியாகக் கொண்டவர்.
பிறப்பால் – பிராம்மணர்…

ஹிந்துத்வா கொள்கையை உருவாக்கியதில்
பெரும்பங்காற்றிய சாவர்க்கர் பற்றிய –

– ஆச்சரியமான, பெரும்பாலானோர் அறியாத
ஒரு உண்மை –

சாவர்க்கர் ஒரு நாத்திகர் என்பது.

ஆமாம் – ஹிந்து மதத்தின் அடிப்படை தத்துவங்களான,
கர்மா, மறுபிறப்பு, பக்தி – ஆகியவற்றில் அவருக்கு
நம்பிக்கை இருந்ததில்லை.

மாமிசம் சாப்பிடக்கூடாது, மது அருந்தக்கூடாது,
போன்ற கொள்கைகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை.

அதே போல், சடங்குகளிலும் கூட…அவருக்கு நம்பிக்கை
இருந்தது இல்லை…

பசுக்கள் பாதுகாப்பு குறித்து அவரது கருத்து –

“…A substance is edible to the extent
that it is beneficial to man.
Attributing religious qualities to it
gives it a godly status.

Such a superstitious mindset destroys
the nation’s intellect.
(1935, Savarkaranchya goshti or tales
of Savarkar, Samagra Savarkar vangmaya,
Vol. 2, p.559)

(பாஜக இதை ஏற்றுக் கொள்கிறதா…? )

பிராம்மணராக இருந்தாலும் கூட –
சாவர்க்கர் – வெஜிடேரியன் அல்ல..
மீன், முட்டை – சேர்த்த உணவை அவரே
சமைத்துக் கொள்ளும் பழக்கம் அவருக்கு உண்டு.
சில சமயங்களில் விஸ்கி அருந்தும் வழக்கமும் உண்டு.

பூனாவில் B.A. கல்லூரிப்படிப்பை முடித்துக்கொண்டு,
மேற்கொண்டு சட்டம் படிக்க, இங்கிலாந்து சென்றார்.
அங்கே இந்திய சுதந்திரத்திற்கான பல அமைப்புகளுடன்
சேர்ந்து இயங்கினார்.

1910-ல் லண்டனில், புரட்சியாளராக அடையாளம் காணப்பட சாவர்க்கர் ….


ஆயுதப்புரட்சியின் மூலமே இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து
விடுதலை பெற முடியும் என்று நம்பினார்.

லண்டனில் இருக்கும்போது, முதல் இந்திய சுதந்திரப்போர்
(1857 ) குறித்து அவர் எழுதிய ஒரு புத்தகம் –
“The History of the War of Indian
Independence” பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டது.

இதற்கு முன்பாக – சாவர்கரின் சகோதரர், மஹாராஷ்டிராவில்,
நாசிக் மாவட்ட கலெக்டர் ஜாக்சனின் கொலை தொடர்பாக
1910-ல் கைது செய்யப்பட்டார்.

அந்தப் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு
துப்பாக்கியை லண்டனில் இருந்து தனது சகோதரருக்கு
அனுப்பியதாக சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டு,
லண்டனில் சாவர்க்கர் கைது
செய்யப்பட்டு, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

கைதியாக இந்தியாவிற்கு கப்பலில் கொண்டு
வரப்பட்டபோது, கப்பல் Marseilles துறைமுகத்தில்
இருந்தபோது, பாத்ரூம் கண்ணாடியை உடைத்துக்கொண்டு,
கடலில் குதித்து தப்பினார்.

ஆனால், பின்னர் பிரெஞ்ச் அரசால் கைது செய்யப்பட்டு,
பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியா திரும்பிய அவருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை
(25 + 25 = 50 ஆண்டுகள் சிறைவாசம் ) விதிக்கப்பட்டு,
1911, ஜூலை 11-ந்தேதியன்று அந்தமானில் உள்ள
செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைவிலங்கு அணிவிக்கப்பட்டு,
சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு,
முதல் 6 மாதங்களுக்கு – மிகக் கொடுமையான –
தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலில் சில மாதங்களுக்கு -செக்கிழுத்து, எண்ணை
பிழியும் வேலை சிறையில் அவருக்கு தரப்பட்டது.

அந்தமான் சிறைவாசத்தின் கொடுமைகளைத்
தாங்க முடியாத சாவர்க்கர், பிரிட்டிஷ் அரசுக்கு
தன்னுடைய விடுதலையைக் கோரி பல தடவை
மனுக்கள் எழுதிக்கொடுத்தார்.

1913-ல் அவர் எழுதிக்கொடுத்த ஒரு கடிதத்திலிருந்து
சில பகுதிகள் –

– The latest development of the
Indian politics and the
conciliating policy of the government
have thrown open the constitutional
line once more.

Now no man having the good of India
and Humanity at heart will blindly
step on the thorny paths which in the excited and

hopeless situation
of India in 1906-1907 beguiled us
from the path of peace
and progress.

Therefore if the government in their
manifold beneficence and mercy
release me, I for one cannot but be
the staunchest advocate of
constitutional progress and –

loyalty to the English government
which is the foremost
condition of that progress.

As long as we are in jails there
cannot be real happiness and joy
in hundreds and thousands of homes of
His Majesty’s loyal subjects in India,
for blood is thicker than water;

but if we be released the people will
instinctively raise
a shout of joy and gratitude to the
government,who knows how to forgive
and correct, more than how to
chastise and avenge.

Moreover my conversion to the
constitutional line would bring back
all those misled young men in India
and abroad who were once looking up
to me as their guide.

I am ready to serve the Government
in any capacity they like, for as my
conversion is conscientious
so I hope my future conduct would be.
By keeping me in jail nothing can be
got in comparison to what
would be otherwise.

The Mighty alone can afford to be
merciful and therefore where else can
the prodigal son return but to the
parental doors of the Government?

Hoping your Honour will kindly take
into notion these points.

V.D. SAVARKAR

ஒரு தடவைக்கு இரு தடவையாக
இந்த மன்னிப்புக் கடிதத்தை படித்தால்,
எந்த அளவிற்கு சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசை கெஞ்சுகிறார்
என்பது நன்கு விளங்கும்…..!!!

நான் வெளியே வந்த பிறகு, பிரிட்டிஷ் அரசு விரும்பும் விதத்தில்
செயல்படுவேன் என்றும் உத்தரவாதம் கொடுக்கிறார்….

( இடுகை அடுத்த பகுதியிலும் தொடர்கிறது….)

.

…………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to மந்திரியே சொல்லிட்டார் -ஒப்புக்கிட வேண்டியது தான்…. ஆனால் ….???

 1. Gokul சொல்கிறார்:

  //ஆனால் காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து
  இந்திய அரசியலில் பங்குகொள்ள திரும்பி வந்ததே
  2015-ல் தான் என்று சரித்திரம் சொல்கிறது…. கீழே –//

  2015 or 1915????

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கோகுல்,

  தவறி விட்டேன்….
  குறிப்பிட்டமைக்கு நன்றி.
  இதோ – சரி செய்து விடுகிறேன்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 3. கார்த்திகேயன் சொல்கிறார்:

  இதற்கு புதியவன் பதிலளிக்க வருவார்… அப்புறம் அந்த தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடிஸ் வைக்கம் வீரர் இதனையும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.