
ஜெயிப்பது யார்….? முன்னாளா…. இந்நாளா…?
தமிழ் நாட்டின், 1.25 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு
தீபாவளி ஸ்வீட் கொடுப்பதாகச் சொல்லி –
அதன் மூலம், தமிழக மக்கள் எல்லாருக்குமே
அல்வா கொடுப்பது பற்றிய ஒரு செய்தி…..
கீழே இருப்பதில் ஒரு வரி கூட என்னுடையதில்லை;
திமுக ஆதரவு தளமான ‘மின்னம்பலத்’திலேயே வந்திருப்பதைத்தான்
தந்திருக்கிறேன்….
…………………………….
ஸ்வீட் வாங்குவதில் கமிஷன்:
அமைச்சர் மகனின் அதிரடி தீபாவளி!
தமிழக அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்குத்
தீபாவளிக்குக் கொடுக்கும் ஸ்வீட் கொள்முதலில் அதிகமான
கமிஷன் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிசெய்யும்
தொழிலாளர்களுக்கு காலம் காலமாக ஒவ்வொரு தீபாவளிக்கும்
ஒரு கிலோ ஸ்வீட் மற்றும் காரம் கொடுப்பார்கள்.
அதுவும் மிக சுமாராகவே இருக்கும்.
கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தீபாவளிக்குத்
தொழிலாளர்களுக்கு ஸ்வீட் வழங்க நெய் கலந்த ஸ்வீட்டு
ஒரு கிலோ ரூ 500 என்று சுமார் நூறு டன் வாங்கினார்
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
புதிய ஆட்சி அமைத்துள்ள திமுக அமைச்சரவையில்
போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் ராஜகண்ணப்பன்.
இந்த ஆண்டு தீபாவளி 2021 நவம்பர் மாதம் 4ஆம் தேதி
வருவதை முன்னிட்டு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு
ஸ்வீட் கொடுக்க யாரிடம் ஆர்டர் கொடுப்பது என
ஆலோசித்தனர். இந்த ஆர்டரை பெறுவதற்காக பல
நிறுவனத்தினரும் போட்டி போட்டுக்கொண்டு
அமைச்சரை சந்தித்து வந்தார்கள்.
இந்த நிலையில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன்
திலீப் திடீரென்று மூக்கை நுழைத்துள்ளார். அவரே இதுகுறித்து
துறை அதிகாரிகளிடம் சில ஆலோசனைகளை செய்துள்ளார்.
’கடந்த தீபாவளிக்கு நெய் ஸ்வீட் கிலோ ரூ 500 என்று
பர்ச்சேஸ் செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு அதைவிடக்
குறைவான விலையில் ஆவினில் வாங்கலாம்’ என்று சிலர்
ஆலோசனைகள் கூறியுள்ளனர்.
ஆனால் அமைச்சரின் மகன் இதை ஏற்கவில்லை.
ஆவினைத் தவிர்த்து ஒரு பெரிய நிறுவனத்தின் பிரதிநிதியை
அழைத்து ஒரு கிலோ ரூ 600க்கு சப்ளை செய்யுங்கள்,
நெய் கலந்த ஸ்வீட் வழங்கவேண்டும் என்று அவசியம் இல்லை,
ஆயில் ஸ்வீட்டாக இருந்தாலே போதும் என்று
உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் 30% கமிஷனும்
பேசப்பட்டிருக்கிறது. அதற்கு அந்த ஹோட்டல் நிறுவனமும்
சம்மதித்துவிட்டார்கள்.
சுமார் 100 டன் ஸ்வீட்டுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது,
ஒரு கிலோ ரூ 600 என்றால் மொத்தம் ஆறு கோடி ரூபாய்
அரசு பணத்தைக் கொடுக்கிறார்கள்.
அதில் 30% என்றால் –
ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்” என்று பெருமூச்சோடு
நம்மிடம் பேசினார்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிலரே.
அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பலமான சங்கமான
சிஐடியூ மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் நயினாரிடம்
இந்த விவகாரம் பற்றிப் பேசினோம்.
”போக்குவரத்துத்துறையில் 1.25 லட்சம் தொழிலாளர்கள்
இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஒவ்வொரு தீபாவளிக்கும்
ஊழியர்களே தரமான ஸ்வீட்கள் தயாரித்து
ஒரு தொழிலாளிக்கு இரண்டு விதமான சுவீட்களை
தலா ஒரு கிலோ கொடுத்து வந்தோம். செலவும்
குறைவாகத்தான் இருந்தது,
கடந்த அதிமுக அட்சியில்தான் பெரம்பலூர் மாவட்டத்தில்
ஒரு ஸ்வீட் கடைக்காரரிடம் ஆர்டரைக் கொடுத்து,
ஒரு கிலோவை அரை கிலோவாகக் குறைத்து வழங்கி
கமிஷனும் பார்த்து வந்தார் அதிமுக அமைச்சர்.
தற்போது நடைபெற்றுவரும் திமுக ஆட்சியில்
முதல்வர் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.
ஊழல் இல்லாத ஆட்சி இருக்கவேண்டும் என்று
முயற்சி செய்கிறார், ஆனால் அவரது அமைச்சரவையில்
உள்ளவர்கள் கை நீட்டி விடுகிறார்கள்.
அரசு போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு
ஆவின் மூலமாக ஸ்வீட் வழங்கினால் குறைவான விலையில்
தரமானதாக இருக்கும். ஊழல் இல்லாமல் இருக்கும்.
ஆவினில் கிலோ 420 ரூபாய்தான்.
தனியாரில் ஒரு கிலோ ரூ 600க்கு பர்ச்சேஸ் செய்கிறார்கள்.
அதாவது கிலோவுக்கு 180 ரூபாய் அதிகமாகக் கொடுத்து
தரமில்லாத ஸ்வீட் வாங்குவதைத் தவிர்த்து, கார்பரேஷன்
நஷ்டத்தில் இருக்கும்போது அரசுக்கும் 1.80 கோடியை
மீதப்படுத்தலாம். மேலும் ஓர் அரசு நிறுவனத்தின் மூலம்
இன்னொரு அரசு நிறுவனமான ஆவின் லாபம் அடையும்.
அரசு நிறுவனமான ஆவின் இருக்கையில் கமிஷனுக்கு
ஆசைப்பட்டு தனியார்களிடம் போவதை முதல்வர் ஸ்டாலின்
தலையிட்டுத் தடுக்க வேண்டும்” என்று கோரிக்கை
வைக்கிறார்…
( இவை மட்டும் என் வரிகள் –
அடடா…. கம்யூனிஸ்ட் யூனியன் தலைவரான தோழர்
எவ்வளவு பணிவாகப் பேசுகிறார்….!!!
கூட்டணிக் கட்சி ஆயிற்றே…!!!
கடுமையாகப் பேசப்போய் – கூட்டணியை விட்டு
துரத்தி விட்டால் என்ன செய்வது…. தர்ம சங்கடமான நிலை;
அவர் கஷ்டம் அவருக்கு…
கம்யூனிஸ்ட் தோழராவது பரவாயில்லை;
மற்ற கூட்டணி கட்சிகளோ
வாயே திறக்கவில்லை….என்ன செய்வது… எல்லாரும்
ஆளும் கட்சியிடம் கைநீட்டி பணம் வாங்கி இருக்கிறார்களே…
வாழ்க கூட்டணீ தர்மம்…..!!! )
(நன்றி – மின்னம்பலம் செய்தித்தளம் )
…………………………………………
இதெல்லாம் முதல்வருக்கு தெரியாமல் நடக்கிறது. அவர் என்னமோ உத்தமர் தான். மந்திரிகள் தான் ஊழல் செய்கிறார்கள் என்று எவ்வளவு பணிவாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்!
தினமும் ஒவ்வொருவருவரும் எவ்வளவு ஸ்வீட் பாக்ஸ் மேலிடத்துக்கு அனுப்பவேண்டும் என்று சமீபத்தில்தான் நீங்க பதிவு போட்டீங்க. அந்த ஸ்வீட் பாக்ஸின் அளவு இப்போது தெரிந்ததா? மின்சாரத்துறையின் மிகப் பெரும் ஊழல் பற்றி எச்சரிக்கை தந்து பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை ப்ரெஸ் மீட்டில் சொன்னதும் தற்போது அந்த காண்டிராக்டை கேன்சல் செய்துள்ளார்கள் என்று படித்தேன் (அல்லது எப்படி விஷயம் வெளியில் போச்சு என்று ஆராய்ந்தார்களா என்பது தெரியலை). பிகே விற்கு 360 கோடி முதல் கொடுத்துள்ளார்கள். இனிமேல்தான் அதன் வசூல் ஆரம்பம் என்று யாரும் தவறாகப் பேசிவிடக் கூடாது.
அண்ணாவின் வழியில் ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு நடைபோடுகிறது என்று நேற்று ஆர்.எம்.வீரப்பன் சொல்லியிருக்கிறாரே… இதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா என்பதை சமஸ் எழுத முடியாது. (சின்ன வயது என்பதால் அண்ணா எப்படி ஆட்சி செய்தார் என்பது அவருக்குத் தெரிந்திருக்காது). உங்களுக்குத் தெரிந்திருக்கலாமே. அதைப் பற்றிக் குறிப்பிடுங்கள் கா.மை. சார்.
கீழ்க்கண்ட மின்னஞ்சல் தலைமைச் செயலர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, இளவரசர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் பல அரசியல் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்திகளை தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றி.
அன்பிற்கினிய அனைவருக்கும் வணக்கம்,
சத்துணவுக்கு முட்டை வாங்குவதில் 150 கோடி வரை இழப்பை ஏற்படுத்தியதை கண்டுகொள்ளாமல் இருந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” அவர்களுடைய ஆட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை, மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தமிழகம் முழுவதும் இருந்து வந்து கொண்டிருக்கின்ற செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இந்த சத்துணவுக்கு முட்டை ஊழலை கொண்டு கொண்டுசென்று சேர்ப்பதை காந்திய மக்கள் இயக்கம் உறுதியோடு மேற்கொள்ளும்.இது மேல் மட்டத்தில் நடத்தப்பட்டுள்ள ஊழல் ஆகையால் நூறு கோடிகள் என்பது அவர்களுடைய நிலை.
அதே நேரத்தில், கீழ்மட்ட அளவில் நடக்கின்ற ஊழல்கள் உங்களுக்கு தெரிய வேண்டும் என்கின்ற காரணத்தினால் ஒரு ஊழலை உங்களுக்கு இங்கே தருகின்றோம்.
நாளை பொது மேடைகளில் நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் அரிச்சந்திரனின் வாரிசுகள் என்று சொல்கின்ற போது கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி வரவேண்டும் அல்லவா அதற்காக இங்கே தருகிறோம் மற்றபடி நீங்களெல்லாம் திருந்துவார்கள் என்று கடவுளோ அல்லது பெரியார் இருந்தால் அவரும் நம்பமாட்டார்.
ஸ்வீட் வாங்குவதில் கமிஷன்: அமைச்சர் மகனின் அதிரடி தீபாவளி!
https://minnambalam.com/politics/2021/10/18/27/sweet-purchase-commission-minister-rajakannappan-son-aligations-transport-aavin
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு -கொள்ளையடிப்பதில் யார் சிறந்தவர்கள் என்று ஒரு போட்டி ….!!!
https://vimarisanam.com/2021/10/19/%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf/
அன்புடன்,
ஊழல் ஒழிப்பு பிரிவு
காந்திய மக்கள் இயக்கம்
காந்திய மக்கள் இயக்கம் இந்த செய்தியை
மேலிடங்களுக்கு கொண்டு சென்றுள்ளது
எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த ஊழலை
வெளிக்கொண்டு வரும் பணியில் விமரிசனம் தளமும்
நிச்சயம் உதவிகரமாக செயல்படும்.
தவறுகள் நிச்சயம் களையப்பட வேண்டும்.
ஐந்தாண்டு ஆட்சியின் துவக்கத்திலேயே இத்தகைய
ஊழல்கள் நடப்பது ஆட்சிக்கு நல்லதல்ல. அதுவும்
அமைச்சர்கள் செய்வது முதலமைச்சருக்கே
தெரியாது என்று சொல்வதே அபத்தமானது.
இத்தனை புலனாய்வு அமைப்புகளை
வைத்துக்கொண்டுள்ள முதல்வரின் தனிப்பிரிவிற்கு
செய்தித்தளங்களில் வரும் விஷயம் கூட தெரியாது
என்பதை பொதுமக்கள் யார் நம்புவார்கள் …?
அது எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி –
ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
நிகழும் முன்னரே தடுக்கப்பட வேண்டும்.
அதற்கான நடைமுறைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
அரசாங்க கொள்முதல் அனைத்தும் வெளிப்படையான
முறையில், open tender விடப்பட்டுத்தான் நடைபெற
வேண்டும். அப்போது தான் மக்களுக்கு அரசிடம்
நம்பிக்கை பிறக்கும்.
அதிகாரத் திமிர் தானே ?
திமுக ஆட்சியில் – அமைச்சரின்
பி.ஏ, டிரைவர் கூட போலீஸ்காரரை
அடிக்கலாமா ?
” நோ ” நடவடிக்கை…
இன்றைய செய்தி கீழே –
நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில்,
திருச்செந்துார் மணி அய்யர் ஓட்டல் சந்திப்பில்,
போக்குவரத்துக்கு இடைஞ்சலாக, அமைச்சர்
அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்
கிருபாகரன் பயன்படுத்தும், அரசுக்கு சொந்தமான
‘இன்னோவா’ கார் நிறுத்தப்பட்டிருந்தது.அங்கு,
தலைமை காவலர் முத்துகுமார், போக்குவரத்தை
சரி செய்யும் பணியில் இருந்தார். அவர்,
இன்னோவா காரை எடுக்க கூறி, டிரைவர் குமாரை
வலியுறுத்த, அவர் மறுத்து விட்டார்.
அருகில் இருந்த ஆட்டோக்காரர்கள் சத்தம்
போட்ட பின், காரை தள்ளி நிறுத்தினார்.
சிறிது நேரத்தில், ஓட்டல் அறையில் தங்கியிருந்த
அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன், தகவல்
தெரிந்து வெளியே வந்தார். போலீஸ்காரர்
முத்துகுமாரை கடுமையாக திட்டினார்.
இருவர் பிடித்துக் கொள்ள, போலீஸ்காரர்
முத்துகுமாரை தாக்கினார். அவரது கன்னத்தில்
ஓங்கி அறைந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு
சென்று சிகிச்சை பெற்ற முத்துகுமார், பின்,
கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் போலீசாரிடமும்,
பொதுமக்களிடமும் காட்டுத் தீயாக பரவ, எஸ்.பி.,
ஜெயகுமார் சமாதானம் செய்தார். முத்துகுமார்
கூறியதாவது:
நான் பணிவோடு தான் சொன்னேன். ஆனால்,
டிரைவர் குமார் என்னை அவதுாறாக பேசினார்.
கிருபா, என்னை பொதுமக்கள் முன்னிலையில்
தாக்கி கேவலமாக பேசினார். இரவில்,
இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இருவரும்
என்னிடம் மன்னிப்பு கேட்டனர். நான் ஒரு
சாதாரண போலீஸ்காரன். எல்லாமும்
முருகக் கடவுள் சன்னிதி பகுதியில் நடந்துள்ளது.
இறைவன் தண்டனை கொடுப்பான்.
இவ்வாறு அவர் கூறினார்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2871413
சதிகார கூட்டம் ஒன்று சபையேற கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்
கொள்ளை அடிப்பவன் வள்ளலை போலே
கோவிலை இடிப்பவன் சாமிகள் போலே
வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே
வாழ்கின்றான் .
பழைய சிவாஜி கணேசன் படமொன்றில் வரும் பாடல்
இப்போதும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது
அருமையாக சொன்னீர்கள்