


…………………………………………………………………………………………………………………………………………………..
பரோட்டா சாப்பிடாதீர்கள் என்று பலரிடம்
சொல்லிச்சொல்லி அலுத்துப் போய் விட்டேன்….
யாரும் கேட்பதாக இல்லை…
அதனால் இங்கே அதைப்பற்றி எழுதப்போவதில்லை….!!!
ஆனால் –
தற்செயலாக இந்த வீடியோ கிடைத்தது.
அதனால் இதை மட்டும் பதிவிட்டு விடுகிறேன்….
இதைப்பார்த்தும், தொடர்ந்தால்…..
அது …… அவரவர் விதிப்பயன் ….!!!
………….
………….
நான் சொன்னதைக் கேட்ட பிறகு, atleast –
என் குடும்பத்து இளைய தலைமுறை, சரி இனிமேல்
பரோட்டா சாப்பிட மாட்டோம் என்று உறுதிமொழி
கொடுத்து விட்டது….
அத்தோடு நின்றிருந்தால்,
I would have been happy…
ஆனால், அத்தோடு நிற்காமல் – “பீசா” (pizza)இருக்கும்போது
பரோட்டா எதற்கு என்று வேறு கேட்கிறார்கள்….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதுவரை நான் pizza சாப்பிட்டதே இல்லை…
அதைப்பற்றி யோசித்ததும் இல்லை.
ஆமாம் – pizza எதுல சார் செய்யறாங்க….????????!!!!!!!!!!!!!!!!!!
கா.மை. சார்…. பரோட்டா பிரச்சனை வேறு. பொதுவாக மைதாவில், அதனை வெண்மையாக்குவதற்காக நிறைய கெமிக்கல் சேர்க்கிறார்கள். அது டயபடீஸை induce பண்ணக்கூடியது. அதனால் நம்ம ஊர் மைதா மிகவும் கெடுதல். வெளிநாட்டின் All purpose flour கொஞ்சம் பரவாயில்லைதான்.
ஆனால், தற்போது இளையவர்களுக்குப் பிடித்தது பேக்கரிப் பொருட்கள், ப்ரெட், பாவ், பன், பிஸ்கெட்ஸ், பீட்ஸா/பர்கர்/நூடுல்ஸ்/பாஸ்தா……. அனைத்துக்கும் மைதாதான் உபயோகப்படுகிறது. பெரியவர்கள் சாப்பிடுவதிலும் போளி போன்றவை, மைதா, ஏராள எண்ணெய் உபயோகித்துச் செய்யப்படுவது.
பரோட்டாவில் மைதா தவிர, ஏராளமான எண்ணெய் உபயோகிக்கிறார்கள். (நான் சொல்வது சைவ. மற்றவர்களுக்கு முட்டையும் சேர்க்கிறார்கள்). இதனால் அது இன்னும் கெடுதல். இது ஏன் ஏழைகளின் பாப்புலர் உணவாக இருக்கிறது என்றால், குறைந்த செலவில் வயிறு நிறைந்துவிடும், அடுத்து பசிக்க நேரமெடுக்கும்.
நம் தமிழக பாரம்பர்ய உணவான இட்லி தோசை பிரச்சனை செய்யாது. பொங்கலில் வனஸ்பதி உபயோகித்து அதுனாலவும் பிரச்சனை வரும், ஆனால் அது குறைந்த அளவுதான் தருவாங்க.