
அடானி’யை அடுத்து, நானும் குஜராத்தி பிசினஸ்மேன் தான்
என்று இன்னொரு வியாபாரி தேசிய அளவில் கிளம்புகிறார்.
ஷேர் வர்த்தகப்புலி, ராகேஷ் ஜூன் ஜூன் வாலா – இரண்டு
வாரங்களுக்கு முன்னர் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்….

அதன் பின், ஏர் இந்தியாவை டாட்டாவிற்கு விற்பனை செய்வது
குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது….
இப்போது மிஸ்டர் ராகேஷ் ஜூன் ஜூன் வாலா – தான் ஒரு
புதிய விமான கம்பெனியை துவக்குவதாகவும், அடுத்த ஏப்ரலில்
அது தனது சேவையை துவங்கும் என்றும் அறிவித்திருக்கிறார்.

” ஆகாஷ் ஏர்லைன்ஸ் ” என்கிற பெயருடன் துவங்கும் இந்த
விமான கம்பெனியின் “தலையாய” நோக்கம், மக்களுக்கு
குறைந்த செலவில் விமான பயணத்தைத் தருவது தானாம்…!!!
ஆகாஷ் ஏர்லையன்ஸ் துவங்குவதற்கு மத்திய அரசு NOC-ஐ
அளித்து விட்டது…. இந்தச் செய்தி, முதலீட்டுச் சந்தையிலும்,
ஏவியேஷன் துறையில் காட்டுத்தீ போலப் பரவுகிறது….!!!
அடானி போல், அம்பானி போல்,
குறுகிய காலத்திலேயே முன்னுக்கு வந்து
செழித்து வளர்க என்று வாழ்த்துக்கூறி
ஸ்ரீமான் ஜூன் ஜூன் வாலாவை வரவேற்போமாக ….!!!
.
……………………………………………………………………………………………………………………..…..
//ஏர் இந்தியாவை டாட்டாவிற்கு விற்பனை செய்வது குறித்த அறிவிப்பு// – இந்த டெண்டரில் கேடி பிரதர்ஸும் கலந்துகொண்டனர். அவர்கள் கொடுத்த விலை டாட்டாவின் விலையைவிடக் குறைவு என்று படித்தேன் (தமிழக தொலைக்காட்சிகள், செய்திப் பத்திரிகைகளில் இது வரவில்லை). ஏற்கனவே வீடியோ பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த கேடி பிரதர்ஸ், தொலைக்காட்சி, பத்திரிகை, விமான கம்பெனி, ஐபிஎல் என்று எப்படி எப்படியோ வளர்ந்திருக்கிறார்கள் (ஓசி டிக்கெட்டில் சென்னைக்கு வந்த கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்). அதுபோல ராகேஷ் ஜூன் ஜூன் வாலா பின்னணி குறித்தும் போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.
எப்படியோ ஓசி விமானப் பிரயாணம் மக்கள் பண்ணணும் என்பதில் கேடி மே மே வாலாவும் புதிய ஜூன் ஜூன் வாலாவும் ரொம்பவே உழைக்கிறார்கள்.
ஜூன் ஜூன் வாலா வீல் சேரில் தான் வந்தார் என்று
செய்தி வெளி வந்திருக்கிறது. இந்த நிலையில்,
இந்த வயதில் அவர் எதற்காக புதிதாக ஒரு விமான கம்பெனியை
ஆரம்பிக்கிறார் ? பின்னால் ஏதோ விஷயம் இருக்கிறது
போலிருக்கிறதே !
சுப்ரமணியன்,
ஜூ.ஜூ.வாலா தனக்காகத்தான் புதிய விமான கம்பெனியை
துவக்குகிறார் என்பது ஒரு தோற்றம் தான்….
அவர் வேறு யாருக்காகவாவது பினாமியாக இருக்கக்கூடும்.
இந்த வயதில், இந்த உடல்நிலையில், அவர் புதிதாக ஒரு
விமான கம்பெனியைத் துவக்குவது என்பது
next to impossible.
இதன் பின்னால் இருப்பவர்கள் யார் யார் என்பது
அந்த யார் யார்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்….!!!
இன்னொரு விஷயம் – அந்த கம்பெனி சில மாதங்களுக்கு
முன்னதாகவே ரிஜிஸ்டர் செய்யப்பட்டு, துவக்கப்பட்டு விட்டது.
ஏர்-இந்தியா விற்றாகி விட்டது என்கிற செய்தி வெளியாவதற்காக
காத்திருந்து இப்போது புதியவிமான கம்பெனி செய்தியை
பரப்புகிறார்கள்.
ஏன்….? அதன் ஷேர் விலை துவக்கத்திலேயே எகிற வேண்டுமே…!!!
ஏர் இந்தியா விற்றாகி விட்டது. அரசுக்கும் அதற்கும்
இனி சம்பந்தமில்லை. புதிதாக யாராவது கம்பெனியை
துவக்கினால் அரசின் முழு ஆதரவும் அதற்கு கிடைக்கும்.
இதில் ஜூ.ஜூ.வாலா ஈடுபடுகிறார் என்பதும்,
ஏர் இந்தியா விற்றாகி விட்டது என்பதும் சேர்ந்து இனி
அந்த புதிய கம்பெனிகளின் பங்குகளையும் பறக்கச் செய்யுமே…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஜுன் ஜுன் வாலா 1986 முதல் பங்கு சந்தை வர்த்தகத்தில் பணத்தை காத்துக்கொண்டிருக்கிறார். அவரின் மிகப் பெரிய முதலீடு டைடன் கம்பெனி என்பதும் டைடன் டாடா முதலீட்டு கம்பெனி என்பதும் அவருக்கும் டாடாவுக்கும் வர்த்தக ரீதியான தொடர்பு இருக்கிறது என்று காட்டுகிறது. அவர் என்பது அவர் நிர்வகிக்கும் போர்ட் என்பதால் அவர் வீல் சேரில் வந்தார் என்பதெல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை. அவரா விமானத்தை ஓட்டப் போகிறார்?
பங்கு சந்தை புரிந்தவர். அதனால் பங்கு சந்தையில் ஒரு ஹைப் உண்டு பண்ணுகிறார்! ஆனாலும், விமான கம்பெனி என்பது பார்க்க ஆடம்பரமாகவும் பெரிதாக பணம் பண்ண முடியாததாகவும் உள்ள ஒரு பிசினெஸ்!
நண்பரே, லாப நோக்கத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட ஜுன் ஜுன் வாலா போன்றவர்கள் ஆரம்பிக்கின்ற இந்த தொழில் எப்படி கஷ்டப்படக் கூடிய தொழிலாக இருக்கும்.
இனிவரும் காலங்களில் இந்தியாவைப் பொறுத்தவரை அது லாபம் கொடுக்கக்கூடிய தொழில் எனவே இருக்கின்ற Airlines கம்பெனிகள் அனைத்தையும் மூடச் செய்து ( காரணம் அவை மிகுந்த கடன் சுமையில் உள்ளனர்) புதிதாக வருகின்ற கம்பெனிகள் லாபம் பார்க்கும் வகையில் செயல்படும் என்று எண்ணுகிறேன்
என்னுடைய கேள்வி –
அவர் யாருக்காக -யாருடைய பினாமியாக – செயல்படுகிறார்…?
என்பது தான்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்