


நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு சாதனை…
26 நூல்கள்(பாகங்கள்), 26,000 பக்கங்கள்,
7 வருடங்கள் தொடர்ச்சியாக தினமும் ஒரு அத்தியாயம் –
உலக அளவிலேயே மிகப்பெரிய நாவல் ….
மஹாபாரதத்தின் மறு ஆக்கம் – “வெண்முரசு” அற்புதமான
தமிழ் நடையில் ….
ஜெயமோகன் அவர்களின் “வெண்முரசு” நாவலைக்
கொண்டாடும் விதமாக, அமெரிக்காவிலிருந்து இயங்கும்
விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஒரு நிகழ்ச்சியை –
“வெண்முரசு இசைக்கொண்டாட்டம்” என்கிற தலைப்பில்
ஏற்பாடு செய்திருந்தது…
கடந்த சனிக்கிழமை மாலை காணொலி மூலம் நடைபெற்ற
இந்த நேரடி நிகழ்ச்சியில் – இந்த இசை, திரைப்பட
இயக்குநர் மணிரத்னம் அவர்களால் வெளியிடப்பட்டது.
பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர்….
கம்போஸர் ராஜன் இதனை இசையமைத்து,
ஒருங்கிணைத்திருக்கிறார்….
இந்தப் பாடலுக்கான வரிகள், வெண்முரசு நாவலிலிருந்தே –
- நீலம் பகுதியிலிருந்து – தேர்ந்தெடுக்கப்பட்டு
தொகுக்கப்பட்டிருக்கின்றன….
( காணொலிக்கு கீழே தந்திருக்கிறேன்…)
கீழே அந்த இசை – காணொலி வடிவில்….
பங்களிப்போர் யார் யார் என்பதை காணொலியிலேயே
காண்பது தான் சிறப்பு.
…….
……..
Pallavi:
கண்ணானாய், காண்பதுமானாய்!
கருநீலத் தழல்மணியே!
Anupallavi:
கருத்தானாய், கடுவெளியானாய், கடந்தோய், காலமானாய்!
கடந்தோய், காலமானாய்!
Charanam-1
கானுறைவோய், கடலுறைவோய்,
வானுறைவோய், வளியுறைவோய்,
எங்குளாய் இலாதவனாய்?
Charanam-2
சிறுதண்டை சுழன்ற மென்கால்மலரே,
விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே,
இளம்பாளை தளிரென்ற பாதப்பரப்பே,
அதிலெழுந்த ஆழி சங்குச் சுழியே,
அமுதுண்ணும் களிப்பில் நெளியும் சிறுகுமிழ் விரல்களே,
அமைக என் தலைமேல்! அமைக இப்புவிமேல்!
அமைக திருமகள் மடிமேல்!
charanam-3:
யானென்று எனதென்று எழுந்த பெருக்கே,
தனியென்று சூழென்று அலைக்கும் கணக்கே,
மெய்யென்று பொய்யென்று அழைக்கும் திசையே,
ஏதென்று எதற்கென்று எழுந்த துயரே,
வாழ்வென்று சாவென்று எழுந்த மயக்கே ,
காத்தருள்க என் மகவை!
காத்தருள்க என் மகவை!
காத்தருள்க!
Charanam-4
சொல்லுரைத்து செயல்காட்டிச் சென்ற அரசே,
சொல்லவிந்து செயலமைந்து மயங்குக இங்கே!
உன் சிறுகைவிரல்கள் தளர்க! உன் தளிர்க்கால் சரிந்தமைக!
நீள்பீலி நெடுவிழிகள் வளர்க!
உன் முடியிலெழுந்த பீலிவிழி மட்டும் இமையாதாகுக!
கண்ணே, இப்புடவிமேல் உன் நோக்கு ஒருகணமும் அணையாதாகுக!
Charanam-5
ஞாலப்பெருவிசையே. ஞானப்பெருவெளியே.
யோகப்பெருநிலையே இங்கெழுந்தருளாயே!
Final Crescendo:
கருநீலத் தழல்மணியே!
வானெழுந்த சுடரொளியே!
……………………………………………..
மிகச் சிறந்த தகவல், நன்றி ஐயா.
நீலம் நாவல் முழுவதுமே ஒரு வித சந்தத்துடன் எழுதப்பட்டிருக்கும்.
கண்ணனை நாயகனாக கொண்ட நாவல். ஜெயமோகனது இணையதளத்தில் இலவசமாக படிக்க முடியும்.
https://venmurasu.in/neelam/chapter-1/