

தமிழகத்தில் கொரானா தடுப்பூசி போடும் பணியில்
வியக்கத்தக்க சாதனை எட்டப்பட்டிருக்கிறது.
நேற்று பேசிய சுகாதாரத் துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் அவர்கள்,
தமிழ்நாட்டில் 5.7 கோடிக்கும் அதிகமான பெரியவர்கள் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ) உள்ளனர். அவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது.
அக்டோபர் 8ம் தேதி மாலை நிலவரப்படி ,
3.7 கோடி (65%) மக்கள் தடுப்பூசியின் ஒரு டோஸையும்,
1.2 கோடி (22%) பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும்
பெற்றுள்ளனர் – என்று கூறி இருக்கிறார்.
முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள், அதிகம் வற்புறுத்த
தேவையின்றி ஆட்டோமேடிக்’காக 2-வது டோஸுக்கு
வந்து விடுவார்கள். எனவே, முதல் டோஸ் போடாதவர்களைத்
தொடர்ந்து சென்று பிடித்தால் போதுமானது.
இது ஒரு அற்புதமான சாதனை தான்.
தடுப்பு ஊசி போடும் விஷயத்தில், துவக்கம் முதலே தமிழகம்
சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், துவக்க காலங்களில்,
தடுப்பூசி கிடைப்பதில் பெரும் சிரமம் இருந்ததால் –
அதிக அளவு பேர்களுக்கு தடுப்பூசி போடப்படாத நிலை
இருந்தது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அவர்களது அதிருஷ்டமோ,
அல்லது மாறி வரும் சூழ்நிலை காரணமோ – அதிக அளவு
தடுப்பூசி கிடைக்கத் தொடங்கியது.
தமிழக அரசும் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயல்பட்டது.
மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டு
தமிழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி பெற –
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களும்,
செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களும் மிகத்தீவிரமாக
செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மத்திய அரசு, துவக்க காலத்தில், தடுப்பூசி பொறுப்பை
தட்டிக்கழித்து, மாநில அரசுகளின் தலையில் கட்டினாலும், –
பிற்பாடு, தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு,
உற்பத்தியை அதிகரிக்க கடும் முயற்சிகளை
மேற்கொண்டு, மாநிலங்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி
இலவசமாக கிடைப்பதையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு
தடுப்பூசி சப்ளை விஷயத்தில் பெரும் முன்னேற்றத்தை
கொண்டு வந்தது..
இன்று தமிழகம் 3-வது அலை உள்ளே நுழையாமல் இருக்க
தேவையான அத்தனை எச்சரிக்கைகளையும் எடுத்துள்ளது.

அதிக அளவில் தடுப்பூசி போட – ‘மெகா கேம்ப்’களை,
அமைத்து, லட்சக்கணக்கான மக்களை, தடுப்பூசி
போட்டுக்கொள்ள விளம்பரங்கள் செய்தும், ஊக்கப்படுத்தியும்
அழைத்து வருகிறது….
தமிழக அரசின் இந்த சிறப்பான செயல்பாடுகளுக்காக,
அதை உளமாற பாராட்டுகிறோம். ( இந்த பாராட்டில் கொஞ்சம்
மத்திய அரசுக்கும் போய்ச்சேர வேண்டும்….!!! )
இதே வேகத்தில் – அரசு தனது முயற்சிகளை தொடர்ந்து
மேற்கொண்டு, விரைவில் கொரானாவின் பிடியிலிருந்து
தமிழகத்தை முற்றிலுமாக விடுவிக்க வாழ்த்துவோம்…
.
………………………………………..
தடுப்பூசிகள் இலவசமாக பரவலாக கிடைக்கப்பெறுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தகவல்.