

சில செய்திகளைப் பார்க்கும்போது – இவர்களுக்கெல்லாம்
எங்கு தான் மச்சம் இருக்குமோ என்று நினைக்கத் தோன்றும் …..!!!
இந்தியாவில் விமானநிலையங்களில் பணிபுரியும்,
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்களின் அமைப்பு – அதானி குழுமம்
பற்றி சீரியசாக குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில் –
மத்திய அரசின் விமானச் சேவை நிறுவனம், விமான நிலையங்களை
லாபகரமாக நடத்த முடியாத காரணத்தால் அந்த பொறுப்பை
நீண்ட கால அளவில் தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு
செய்ததை பயன்படுத்திக்கொண்டு –
அதிகமான விமான நிலையங்களை – கௌதம் அதானி
தலைமை வகிக்கும் அதானி குழுமம் நீண்ட காலக் குத்தகை
அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
அப்படிக் கைப்பற்றியுள்ள விமான நிலையங்களில் சில
மிகவும் குறைவான விலைக்குக்
கைப்பற்றப் பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறது
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் அமைப்பு…
அதானி குழுமம் கைப்பற்றியுள்ள 6 விமான நிலையங்களில்,
3 விமான நிலையங்கள் அதாவது –
மங்களூரு, லக்னோ மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களை
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பு ஏல விண்ணப்பத்தில்
குறிப்பிட்ட விலையை விடவும் மிகவும் குறைவான தொகைக்கு –
அதானி குழுமம் கைப்பற்றியுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், திட்டத்திற்கு
ஒப்புதல் அளிப்பதற்காக PPPAC (Public Private
Partnership Appraisal Committee) இந்த 3 விமான
நிலையங்களையும் மதிப்பீடு செய்ய உத்தரவிட்ட போது இதன்
மதிப்பு 1,330 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் அமைப்பு தற்போது
பிரதமருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் மங்களூரு, லக்னோ
மற்றும் அகமதாபாத் ஆகிய 3 விமான நிலையத்தின் சொத்துக்களைக்
கைப்பற்ற அதானி குழுமம்
இதன்படி 1,330 கோடி ரூபாய் கொடுத்திருக்க வேண்டும்…
ஆனால் அதானி குழுமம் வெறும் 499.84 கோடி ரூபாய்க்கு இந்த 3 விமான நிலையங்களையும் கைப்பற்றியுள்ளது.
மங்களூரு, லக்னோ மற்றும் அகமதாபாத் விமான நிலையங்கள்,
தற்போது அதானி எண்டர்பிரைசர்ஸ் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி
ஆப் இந்தியாவுக்கு இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி,வெறும்
499.84 கோடி ரூபாய்க்கு நீண்டகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
PPPAC அமைப்பின் கணக்கீடு படி மங்களூரு விமான நிலையத்தின்
மதிப்பு 363 கோடி ரூபாய்…. ஆனால் அதானி குழுமம் கொடுப்பது
வெறும் 74.5 கோடி ரூபாய்….
583 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்ட லக்னோ விமான
நிலையம் –
அதானி குழுமத்தால், வெறும் 147.93 கோடி ரூபாய்க்கும்,
384 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்பிடப்பட்ட அகமதாபாத் விமான
நிலைம், அதானி குழுமத்தால், வெறும் 277.41 கோடி ரூபாய்க்கும்,
கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் அமைப்பு
குற்றம் சாட்டி இருக்கிறது.
மத்திய அரசுக்கு, இந்த 3 விமான நிலையங்களின்
பேரத்தில் மட்டுமே –
( 1,330 – 499.84 ) சுமார் 830.16 கோடி ரூபாய் அளவிற்கு
மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமத்திற்கு அதிகப்படியான சலுகைகள் அளிக்கப்பட்டு
அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட, இந்த ஒப்பந்தம் காரணமாக
உள்ளது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்களிடம் நெருங்குவது எப்படி…
அந்த நெருக்கத்தின் மூலம் – தங்களுக்கு வேண்டியதை
பெறுவது எப்படி என்கிற “தொழில் நுட்பத்’தை அதானி அவர்கள் நன்கறிந்திருக்கிறார்.
கூந்தல் உள்ளவர்கள் அள்ளி முடிக்கிறார்கள்….
பெருமூச்சு விடுவதைத்தவிர, மற்றவர்கள் வேறென்ன
செய்ய முடியும்…..?
.
……………………………………………….
இந்தச் செய்தியையும் வெளியிட்டு, வெளிநாடுகளில் (சில) பிரதமர்கள் எப்படி அணுக எளியவர்களாகவும், அவர்களின் அரசு மக்களுக்கு உதவுகின்ற அரசாகவும் இருக்கிறது என்றும் வெளியிட்டு, எங்கள் வயிற்றெரிச்சலை அதிகமாக்குவது நியாயமா?
அரசு என்பது, சம்பாதிக்கும் வழி, அரசியல் என்பது கோடீஸ்வரனாகும் வழி என்பது இந்த ஜென்மத்தில் நம் நாட்டில் மாறாது போலிருக்கிறது.
மிகச் சமீபத்தில் முகேஷ் அம்பானி அவர்கள் சம்பந்திக்கு ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை (DHFL) ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி தள்ளுபடி விற்பனையில் இந்திய அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் தந்திருக்கின்றன. இவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது அந்த நிறுவனத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் பணம் வைத்திருந்தவர்கள். இதைப்பற்றி எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்கவில்லை