நடைபயிற்சியின் போது ஸ்டாலினுக்கு மக்கள் பாராட்டு –

இது தமிழ் ஒன் செய்தித்தளம்
இது தினமலர் செய்தித்தளம்
இது நக்கீரன் செய்தித்தளம்

இந்தத் தலைப்பில் 8-ஆம் தேதி – பல தொலைக்காட்சி
சேனல்களிலும், செய்தித் தளங்களிலும்
கீழ்க்கண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது…

முதல்வரை பாராட்டுவதில் அனைவரும்
முந்திக் கொள்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது …

ஆனால், ஒரு கேள்வி –

ஒரு செய்தி நிறுவனம் தானாகச் செய்தியை சேகரித்து பிரசுரிப்பதற்கும், மற்றவர்கள் “யாராவது ” – எதையாவது “கொடுத்து” போடச்சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு….

செய்தி நிறுவனம் தானாகச் சேகரித்து போட்ட செய்தி – அனைத்து மீடியாக்களிலும் ஒரே மாதிரியாக, ஒரே தலைப்புடன், ஒரே வாசகங்களுடன் வர வாய்ப்பில்லை; யாராலாவது “கொடுத்து” போடச்சொல்லப்பட்டிருந்தால் மட்டுமே தான் ஒன்று போலவே இருக்கும்….

இந்த வீடியோவை எடுத்தது யார்…?
மீடியாக்களுக்கு அனுப்பி வெளியிடச் சொன்னது யார்….?

தமிழக அரசின் செய்தி, விளம்பரத் துறையா…?
அல்லது வேறு எந்த இலாகாவாவதா…?
அல்லது தி.மு.கட்சியா…?
அல்லது தனிப்பட்ட எவராவதா…?

மீடியாக்களுக்கு அழுத்தம் வந்ததா…? எங்கிருந்து …?

யாராவது இதற்கு பதில் சொல்வார்களா….?

…………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to நடைபயிற்சியின் போது ஸ்டாலினுக்கு மக்கள் பாராட்டு –

  1. Subramanian சொல்கிறார்:

    இவர்களே வீடியோவையும், செய்தியையும்
    தயாரித்துக்கொடுத்து, மீடியாவில் போட
    வலியுறுத்துகிறார்கள். இல்லையென்றால்
    எல்லா மீடியாக்களிலும் ஒரே மாதிரி எப்படி வரும் ?

    “இமேஜ்” பில்டப் செய்ய இப்படி ஒரு முயற்சி.
    அடிக்கடி, 15-20 நாட்களுக்கொரு முறை இந்த மாதிரி
    வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.
    முந்தாநாள் ஒன்று வந்தது. கொளத்தூரில் இவர்
    அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஒருவரின்
    மாமியாருக்கு உடல்நலம் சரியில்லை என்று
    விசாரிக்கப்போன வீடியோ.

    இன்னொரு சங்கதி. அவருடன் முன்னாலும்,
    பின்னாலும், கூடவேயும் எத்தனை பேர்
    துணையாகப் போனார்கள். பார்க்கில் வேறு
    மனிதர்களே இல்லையா ? அவர்கள் யாரையும்
    ஏன் படத்தில் காணவில்லை ?

    • புதியவன் சொல்கிறார்:

      எனக்கு கவுண்டமணி செந்திலிடம் சொல்லும், ‘எல்லாம் ஒரு விளம்பரந்தான்’ என்ற வாசகத்திற்குப் பின்னால் வரும் வசனங்கள் நினைவுக்கு வந்தன.

      //மீடியாக்களுக்கு அழுத்தம் வந்ததா…?// – அல்லது 200 ரூ உபிஸ் மாதிரி (அப்புறம் வைரமுத்து காசு கொடுத்து மீடியாக்களில் அறிக்கை வெளியிடுவது மாதிரி), இவங்களுக்கு ஏதேனும் அமவுண்ட் ஃபிக்ஸ் ஆகியிருக்கா என்றெல்லாம் யாரும் சந்தேகப்படக்கூடாது. அப்படீல்லாம் ஒன்றும் கிடையாது. இது இயல்பாக நடந்தது. உண்மையை மக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கணும் என்பதால் மீடியாக்கள் அதனை வெளியிட்டன.

      அப்புறம் ஏன், திமுக எம்பி மீதான கொலைக்குற்றச்சாட்டைப் பற்றி வெளியிடாமல் எல்லோரும் உத்திரப்பிரதேசத்தைப் பற்றியே ரொம்பக் கவலைப்படுகிறார்கள் என்று கேட்கக்கூடாது. சென்ற அதிமுக ஆண்டபோது வாயை அதிகமாகத் திறந்த கோவாலசாமி, திருமா மற்றும் பலருக்கு பெரிய வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. வாயைத் திறந்தால் கூட்டணியிலிருந்து கல்தா என்ற எச்சரிக்கையும் கூடவே சென்றுள்ளது.

  2. கார்த்திகேயன் சொல்கிறார்:

    வரலாறு முக்கியம் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு முதல்வர் வாழ்ந்தார் என் வருங்கால சமுதாயம் ஆச்சரியப்படும். எப்படி இன்றைய சமுதாயம் ராமசாமி மண் என கூவுகிறதோ அதே போல் ஸ்டாலின் மண் என பின்னால் கூவ தொலைநோக்கு திட்டம். இதில் மோடியும் ஸ்டாலினும் ஒன்றே

  3. bandhu சொல்கிறார்:

    நீங்கள் போன வீடியோவில் போட்ட நெதர்லாந்து பிரதமருக்கும் நம் ஊர் அரசியல்வாதிகளுக்கும் வித்யாசம் நிறைய. அதைவிட அவர்களை மக்கள் அணுகும் முறையில் வித்யாசம் மிக அதிகம். நம் ஊரில் அரசியல்வாதிகளை கடவுளை அணுகும் பக்தன் போலத்தான் மக்கள் அணுகுகிறார்கள். அப்படி இருக்கும்போது இது போன்ற வீடியோ வெறும் விளம்பரத்துக்காக என்று எல்லோருக்குமே தெரியும்!

  4. atpu555 சொல்கிறார்:

    இதில் முதல்வர் அதிகம் பேசவில்லை. வழிப்போக்கர் சொன்னதை மரியாதைக்காகக் கேட்டுவிட்டு விரைவாகத் தனது பாதையில் செல்ல முனைகிறார். எனவே இது விளம்பரத்துக்காகச் செய்யப்பட்டதல்ல. தற்செயல் நிகழ்வுதான். அதை அவருடன் சென்ற யாரோ தனது கமராவில் எடுத்து தனது தனிப்பட்ட அபிமானத்தால் செய்தியாளருக்கு அனுப்பியிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்!

  5. tamilmani சொல்கிறார்:

    Most of the tamil tv channels are under sumangali cable vision as MSO a maran company.So what we have to see in the channels are controlled by them. Anything against DMK will not be telecast.
    Example an employee in a cashew factory in Cuddalore is murdered by DMK goons. When their own dmk mp is involved in the murder case, they cleverly suppress the news and always highlight
    UP incidents. In Kashmir hindu pandits are murdered every day and they suppress that news also.
    During AIADMK rule even small incidents are blown out of proportion by the biased TV channels.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.