

முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு
(டெலிபோன்) துறை அமைச்சரும்,
2ஜி வழக்கின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவருமாகிய
திருவாளர் ஆ.ராசா மீது –
மத்திய புலனாய்வுத் துறை, லஞ்ச ஊழல் வழக்கு ஒன்றை
பதிவு செய்வதற்கு (வருமானத்திற்கு மேல் 28 கோடி ரூபாய்
வைத்திருந்ததாக….) மத்திய அரசிடம் அனுமதி கோரி
இருப்பதாக – டெல்லி தொலைக்காட்சிகள்
தெரிவிக்கின்றன….
டெல்லி வெகு தொலைவில் இருப்பதால் –
நமது தமிழ் தொலைக்காட்சிகள் மற்றும்
செய்தி ஊடகங்களுக்கு இந்த தகவல் கிடைக்கவில்லை போலும்.
அதனால், அவை இந்த செய்தியை இன்னமும் வெளியிடவில்லை
ஆனாலும், எத்தகைய வழக்குகள் வந்தாலும்,
எத்தனை வழக்குகள் வந்தாலும் –
ஆ. ராசா – அவைகளிலிருந்து தப்பித்து –
“தகத்தகாய சூரியனாய்” வெளிவந்து விடுவார் …
ஆனானப்பட்ட 2-ஜி யிலேயே தப்பித்து வந்தவருக்கு
இதெல்லாம் வெறும் ஜுஜுபி ….!!!
எனவே, அவரது ஆதரவாளர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம்……..!!!
” லஞ்சத்தின் வாழ்வுதனை -அவ்வப்போது
சிபிஐ புகுந்து மிரட்டும்….
ஆனால் – இறுதியில் லஞ்சமே வெல்லும்….”
.
………………………………………..
சிபிஐ க்கு வேறவேலை இல்லை. என்னைக் கேட்டால், நம் விசாரணை முறையையே பிரிட்டிஷாருக்கு outsource பண்ணிவிடலாம். நம் போலீஸ் துறை, விசாரணை அதிகாரம் முழுமையும் biased இல்லாத வெளிநாட்டிற்கு, குறிப்பாக, பிரிட்டிஷ் நீதி மன்றங்களுக்கு outsource செய்துவிடலாம்.
அவங்கதான், தைரியமாக, எதற்கு மல்லையாவை விசாரணைக்குள் கொண்டுவந்திருக்கிறீர்கள்? முதல் குற்றவாளிகள் ப.சி மற்றும் மன்மோகன் சிங் அல்லவா என்று கேட்டது