திருவாளர் …. பங்காரு அடிகளார் பற்றி – சவுக்கு சங்கர்

இந்த பேட்டியில் -பல விஷயங்களைப்பற்றி
தைரியமாகப் பேசுகிறார் சவுக்கு சங்கர்….

மேல் மருவத்தூரில் ஏன் எந்த அரசியல் கட்சியும்
போட்டி போடவில்லை…?

இந்த குடும்பத்திற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்
சொத்துகள் எந்த வழியில் வந்தன….?

2010-ரெய்டில் கைப்பற்றப்பட்ட 8 கோடி ரூபாய் கேஷ் விவகாரம் என்ன ஆயிற்று…? எடுத்தவருக்கே சொந்தம் என்று விடப்பட்டு விட்டதா…?

இந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட
ரெய்டுகள், போடப்பட்ட வழக்குகள் எல்லாம்
என்ன ஆயின….?

இதைக்குறித்து எந்த தமிழ் மீடியாவும் ஏன்
விவாதிக்கவில்லை….? யார் யாரிடம் எவ்வளவு பணம் கைமாறியது…?

இன்று பெரியார் அவர்கள் இருந்திருந்தால்,
அவர் இது குறித்து என்ன கருத்து சொல்லி இருப்பார் என்று –
அவரது ஒட்டு மொத்த வாரிசு –

என்று உரிமை கொண்டாடும்
மானமிகு வீரமணியார் வெளிப்படையாகச் சொல்வாரா…?


( அல்லது பெரியாரின் சொத்துகளுக்கு மட்டும் தான்
தான் வாரிசு என்று சொல்லி ஒதுங்கி விடுவாரா…?)

.
…………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to திருவாளர் …. பங்காரு அடிகளார் பற்றி – சவுக்கு சங்கர்

  1. புதியவன் சொல்கிறார்:

    இவங்க யாராவது, கிறிஸ்துவ, இஸ்லாமிய சாமிகள், அறக்கட்டளைகள், கல்லூரிகள் பற்றி பேசியிருக்காங்களா? இவர்களின் அஜெண்டா எல்லாமே இந்துக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பது., இந்து மத எதிர்ப்பு அதனால் இத்தகைய பேட்டிகள், செய்திகள் எல்லாமே அர்த்தமற்றவை.

    ஐந்து பைசாவிற்கு வக்கில்லாமல் வந்தவருக்கு எப்படி லட்சம் கோடி சொத்து, அரண்மணைகள் என்று யாரேனும் விவாதித்திருக்கிறார்களா?

    பேங்க் வேலை பார்த்தவருக்கு எப்படி ஆயிரக்கணக்கான ஏக்கர், லட்சம் கோடி சொத்து, காருண்யா பல்கலைக்கழகம் என்றெல்லாம் யாரேனும் விவாதித்து நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

    எதற்காக இந்துக் கோவிலின் இடத்தில் கிறித்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்து கிறித்துவ மதத்தை வளர்க்க அரசு உதவியது என்பது பற்றி விவாதித்திருக்கிறார்களா?

    போலிச் சாமியார்கள் என்று பேசும் எந்த ஒருவனும், மற்ற மதத்தைப் பற்றிப் பேசியதைக் கேட்டிருக்கிறீர்களா?

    20 வருட குற்றவாளிகளை சிறையில் இருந்து விடுதலை செய்ய முயன்றவர்களில் கோவை குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கில் இருந்ததைப் பற்றி விவாதித்திருக்கிறார்களா?

    அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீட்டிற்கு அறிவாலயத்திற்குப் பதுக்கிக் கொண்டவர்களைப் பற்றி விவாதம் நடந்திருக்கிறதா?

    இந்த விஷயத்திலேயே ஸ்டாலின், அன்புமணி பெயர்களெல்லாம் கோர்ட்டில் அடிபடுகிறதா? அல்லது விவாதங்களில் அவர்களுடைய பெயர்கள் அடிபடுகின்றனவா?

    பங்காருவின் மனைவியைப் பற்றிப் பேசும் சவுக்கு, வீட்டில் வடை செய்துகொண்டிருந்த தயாளு அம்மையாருக்கும் தயிர் சாதம் செய்துகொண்டிருந்த ராஜாத்தி அம்மாளுக்கும் எப்படி கோடிக்கணக்கான சொத்து, எப்படி அவர்களுக்கு ஒரு பிஸினெஸில் இன்வெஸ்ட் செய்யும் பணம் வந்தது என்றெல்லாம் விவாதிப்பார்களா?

    //மானமிகு வீரமணியார் // – நகைச்சுவையாக எழுத உங்களுக்கு நன்றாக வருகிறது.

    உடனே, எழுதின கட்டுரையைப் பற்றி மட்டும் சொல்லுங்கள், இவங்க நல்லவங்களா, மக்களை ஏமாற்றி அரசை ஏமாற்றி சொத்து சேர்த்தவங்க இல்லையா என்றெல்லாம் பஜனை பாடவேண்டாம். என்னைப் பொறுத்த வரையில், அந்த 100+ டாக்டர் நடிகர்கள் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் ஆயுள் முழுவதும் திகார் ஜெயிலிலும், மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய மத்திய அமைச்சரும் அதே இடத்தில் ஆயுள் முழுவதும் இருப்பதுதான் நல்லது. அதைச் செய்த பிறகு, குற்றவாளிகள் யார் என்பதைப் பற்றி ஆராயலாம்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      நீங்கள் எதையுமே மிகக்குறுகிய
      மதக்கண்ணோட்டத்திலேயே பார்க்கிறீர்கள்….

      ” அவர்கள் ” செய்யவில்லையா….?
      ” இவர்கள் ” செய்தால் என்ன…? என்கிற
      கோணத்திலேயே எழுதுகிறீர்கள்.

      தவறைத் தவறு என்று சொல்வதைக்கூட –
      போலி’களை – போலி’கள் என்று சொல்வதைக்கூட –
      பிற மதங்களின் மீதான உங்கள்
      வெறுப்பு தடுக்கிறது….

      நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்களை
      ஏன் சவுக்கு சங்கரோ, வேறு எவரோ
      சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்…?

      உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தால்,
      ஆதாரங்களுடன், கோர்வையாக –
      மதங்களை சாடாமல்,’
      (போலி) மனிதர்களை மட்டும் சாடி –
      சவுக்கு சங்கருக்கு மேலாகவும்,
      நீங்களே எழுதலாமே…?
      யார் தடுக்கிறார்கள்…?

      மதங்களை இகழ்ந்து பேசாமல், அதிலுள்ள
      தவறான மனிதர்கள்/போலி’கள் செய்வதை,
      தோலுரித்து காட்டுங்களேன்… யார் வேண்டாமென்றது…?

      பிற மதங்களைச் சாடாமல் உங்களால்
      எழுத முடியாது என்பது தான் உங்களது
      மிகப்பெரிய பலவீனம்…

      அதனால் தான் –

      இப்படி – முழுவதுமாக எழுதாமல் – “சடு-குடு”
      ஆட்டத்தில் வந்து போய் விடுவதைப்போல்
      எதையாவது அரைகுறையாகச் சொல்லி விட்டு
      காணாமல் போய் விடுகிறீர்கள்.

      “தவறு செய்பவர்கள்”, “போலி’கள்”, “ஊரை ஏமாற்றி
      கொள்ளை அடிப்பவர்கள்” -எந்த மதத்தில் இருந்தாலும் –
      என்னைப் பொருத்தவரை ஒன்றே தான்.

      ———
      ” பஜனை ” பாடவேண்டாம் –
      ———
      அதில் நீங்கள் எக்ஸ்பர்ட் என்பது புரிகிறது.
      “அது” எனக்குத் தெரியாத கலை…
      அது தெரியாததால் நான் ஒன்றும்
      குறைந்து போய் விடவில்லை ;
      அதற்காக நான் கவலைப்படவும் இல்லை;

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

        உண்மைக்கு அலங்கார வார்த்தைகள் கிடைப்பதில்லை. நாம் அலங்கார வார்த்தைகளுடன் வரும் பொய்யை உண்மை என நம்பிவிடுகிறோம்

      • புதியவன் சொல்கிறார்:

        You are not understanding கா.மை. சார்…. உங்களுக்கு உங்கள் உறவினர்கள், இரத்த சொந்தத்தில் ஒவ்வொருவரின் நிறை, அதிலும் குறைகள் நன்றாகவே தெரியும். ஆனால் அதற்காக நீங்கள் மற்றவர்களோடு விவாதிக்கவே பேசவோ மாட்டீர்கள். நானும் உங்களுடன் சேர்ந்துகொண்டு, ஆமாம் சார்..உங்க இந்த உறவினர் செய்வது தவறு, இந்தக் குணம் தவறு.. என்றெல்லாம் பஜனை பாடினால், அதனை நீங்கள் நடுநிலையாக ஏற்றுக்கொள்ளலாம், நீங்கள் எக்செப்ஷன் என்பதால். ஆனால் அது பொதுக் குணம் அல்ல.

        தற்போதைய அரசில், எதுவுமே மதக் கண்ணோட்டத்துடந்தான் நடக்கிறது. கோவிலைத் திறக்கக்கூடாது, வார இறுதிகளில் யாரும் வரக்கூடாது, இந்துக் கோவில்களின் சொத்தை உபயோகித்து மற்ற மதங்களுக்கு உதவுவது என்றெல்லாம் நடக்கிறது., ஆனால் அதே விதி, மற்ற மதங்களுக்குக் கிடையாது என்று எந்த ஒரு விஷயமும் மதக் கண்ணோட்டத்துடன், அரசியல் கண்ணோட்டத்துடன் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், இந்துக்களைப் பற்றி விமர்சிப்பதை, திமுக சார்பு இல்லாதவர்கள் தவிர்க்கவேண்டும் என்பதை நான் பின்பற்ற முயல்கிறேன்.

        எப்போது பொதுவெளியில் பேசுபவர்கள், தைரியமாக மதம் கடந்து, கட்சி கடந்து வெளிப்படையாக பேசி, விவாதிக்கிறார்களோ, அப்போதுதான் அவர்கள் பேசுவதில் அர்த்தம் இருக்கும். சவுக்கின் பேச்சுக்கள் உள்நோக்கமுள்ளவை, சிலரைப் பற்றி மட்டும் பேச முயல்பவை. அதனால் அதனைப் பற்றி எனக்கு ஒரு கருத்தும் கிடையாது.

      • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        புதியவன்,

        நான் சொன்னது –
        ———————————————————-
        தவறைத் தவறு என்று சொல்வதைக்கூட –
        போலி’களை – போலி’கள் என்று சொல்வதைக்கூட –
        பிற மதங்களின் மீதான உங்கள்
        வெறுப்பு தடுக்கிறது….

        நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்களை
        ஏன் சவுக்கு சங்கரோ, வேறு எவரோ
        சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்…?

        உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தால்,
        ஆதாரங்களுடன், கோர்வையாக –
        மதங்களை சாடாமல்,’
        (போலி) மனிதர்களை மட்டும் சாடி –
        சவுக்கு சங்கருக்கு மேலாகவும்,
        நீங்களே எழுதலாமே…?
        யார் தடுக்கிறார்கள்…?

        மதங்களை இகழ்ந்து பேசாமல், அதிலுள்ள
        தவறான மனிதர்கள்/போலி’கள் செய்வதை,
        தோலுரித்து காட்டுங்களேன்… யார் வேண்டாமென்றது…?

        பிற மதங்களைச் சாடாமல் உங்களால்
        எழுத முடியாது என்பது தான் உங்களது
        மிகப்பெரிய பலவீனம்…
        ——————————————————————-

        மேலே நீங்கள் கூறியுள்ள பதிலுக்கும்,
        இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா….?

        திசை திருப்புவது,
        வழுக்கிக்கொண்டு போய் விடுவது –
        இது உங்கள் வாடிக்கையாகி விட்டது.

        விளக்கமாக, ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை
        எடுத்து வைப்பதை – மதங்களை குறை கூறாமல்,
        மனிதர்களை சாடுவதை – உங்களால்
        ஏன் செய்ய முடியவில்லை….?

        .
        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

  2. Tamil சொல்கிறார்:

    அவர்கள் கடவுள் என்று கூறிக்கொள்கிறார்கள் எனவே அவர்களிடம் எதுக்கு பொல்லாப்பு என்று பகுத்தறிவோடு திராவிடக் கட்சிகளும் அவர்கள் நமது இனம் என்று ஆன்மிக கட்சிகளும் நினைத்து விட்டார்களோ என்னவோ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.