
கழுகு ஒன்று கான்ஃபிடென்ஷியல் தகவலை,
பத்திரிகையில் வெளிச்சம்போட்டு –
ரகசியம் காத்திருக்கிறது….!!!
……………………………………………………………………….
‘பவர்’ஃபுல் அமைச்சர் தரப்பிலிருந்து
தினமும் நான்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள்
சேரவேண்டிய இடத்துக்கு டெலிவரி
ஆகிவிடுகின்றனவாம்.
……………………………………………………………………
‘பவர்’ஃபுல் அமைச்சர் – இது யாரென்று புரிகிறது.
‘ சேரவேண்டிய இடத்துக்கு ‘ -இதுவும் புரிகிறது…
ஆனால் – அந்த ” நான்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள் “-
அர்த்தம் தான் சரியாகப் புரியவில்லை….
4 பத்தாயிரமா, 4 லட்சமா, 4 பத்து லட்சமா….?
தினமும்… என்னும்போது, அதற்கு மேல் வாய்ப்பில்லை
என்றே நினைக்கிறேன்.
இதை எழுதியவருக்கோ, வெளியிட்டவருக்ககோ எந்தவித பொறுப்போ, பயமோ இல்லை; ஆதாரம் இல்லாமல் இதை எழுதுகிறோமே – சம்பந்தப்பட்டவர் வழக்கு போட்டால் என்ன செய்வது என்கிற கவலையும் இல்லை;
பரபரப்பாக எதையாவது எழுத வேண்டும். நிஜமோ இல்லையோ – நிஜமென்று தோன்றுகிற மாதிரி எழுத வேண்டும்… ஆனால் எழுதி, மாட்டிக்கொள்ளவும் கூடாது….
இதற்கு ஏற்கெனவே உதாரண புருஷராக டாக்டர் சு.சுவாமி இருக்கிறார்.
டாக்டர் சு.சுவாமி – இதில் எக்ஸ்பர்ட்…..தனி டைப் ….
யாரை வேண்டுமானாலும் தாக்குவார்….
ஆனால் சட்டரீதியாக – மாட்டிக்கொள்ள மாட்டார்….
ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறும்போதெல்லாம் –
சம்பந்தப்பட்டவர்களின் நிஜப்பெயரை சொல்ல மாட்டார்.
தான் அவர்களுக்கு வைத்திருக்கும் புனைப்பெயரைத்தான்
சொல்லுவார்… யாரும் கோர்ட்டுக்கு போய் மானநஷ்ட
வழக்கு போட முடியாதே….
அவரது வழக்கமான வாசகர்களுக்கு அவர் எழுத்து புரியும்…ஆனால், அவரது புதிய வாசகர்களுக்கும் புரிய வேண்டுமே என்பதற்காக – இதற்காக, தனியே ஒரு டிக்-ஷனரியே வெளியிடப்பட்டிருக்கிறது….
சாம்பிளுக்கு –
TDK = TaDaKka – என்றால் ….திருமதி சோனியா காந்தி
Buddhu … என்றால்….திருவாளர் ராகுல் காந்தி,
DD / DDs = Dravidian Draculas
R3 = Raghu Ram Rajan
porkis – பொறுக்கிகள்,
Elis- Rats – ஈழ ஆதரவாள தமிழக அரசியல்வாதிகள்….
நம்ம விஷயத்துக்கு வருவோம்….
வழக்கமான அரசியல் பாஷை புரிந்தவர்களுக்கு, அதிலேயே புழங்குபவர்களுக்கு – இந்த மாதிரி “ஸ்வீட் பாக்ஸ்”, “பெரிய” ஸ்வீட் பாக்ஸ் போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வது பெரிய விஷயமில்லை….
ஆனால், நம் போன்ற அப்பாவிகள் நிலையையும் கருத்தில் கொண்டு, இந்தமாதிரி அரசியல் “ரகசியங்களை” வெளியிடுபவர்கள் –
தனியே –
டாக்டர் சு.சுவாமி மாதிரி அகராதி ஒன்றை வெளியிட்டு
விட்டால், நாம் இத்தனையா, அத்தனையா என்றெல்லாம் குழம்ப வேண்டியதில்லை….
சம்பந்தப்பட்டவர்கள் நம் பிரச்சினையை எதிர்காலத்தில் கவனத்தில் கொள்வார்களா…?
என்ன சார், சீரியசான விஷயத்தை காமெடி பண்ணுகிறீர்கள்
என்று கேட்கிறீர்களா….?
நம்மால் – வேறு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள் ….?
“இடுக்கண் வருங்கால் நகுக” ……!!!
தினமும் என்பதெல்லாம் ரீல். மாத்த்திற்கு நிச்சயம் 4சி (சிறப்பு இனிப்புகள்) தலைமைக்குப் போகும்.
” 4 சி ” என்றால் எவ்வளவு சார்…?
நீங்களும் கழுகார் பாஷையிலேயே பேசினால்,
என்னைப்போன்ற அப்பாவிகள்
புரிந்து கொள்வது எப்படி…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இதைத் தெரியாதவர்களே தமிழகத்தில் கிடையாதே…. ஷேரில் நீங்கள், 1 லட்சம் இன்வெஸ்ட் செய்தால், குறைந்தபட்சம், 15 சதம் இண்டெரெஸ்டோடு வரணும் என்றுதான் எதிர்பார்ப்பீர்கள். அதுவே 300 கோடி, தேர்தலில் வெற்றி பெற ஒரு பீகார் பிராமணருக்குக் கொடுத்து, அது தவிர இன்னொரு 200 கோடி தேர்தல் செலவு செய்தால், ‘காந்தி மஹாத்மா… கைராட்டையே ஆயுதம், மக்கள் சந்தோஷமே ஜீவிதம்’ என்றா பாட முடியும்?