
தனது ட்விட்டர் பக்கத்தில் பி.டி.ஆர். அவர்கள் யாரையோ –
‘இருமுறை கட்சிப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்ட அந்த முட்டாள் கிழவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் இரண்டு கிலோ இறாலுக்கு
விலைபோய்விடுவார் என்பதுதான்’ என்று பதிவிட்டிருக்கிறார்….
ஏற்கெனவே, பி.டி.ஆர்., மீடியாக்களில் அதிகம் பரபரப்பை
ஏற்படுத்துவதை ரசிக்க முடியாத மூத்த தலைவர்கள் –
இந்த ட்விட்டரைப் பார்த்து கடும் கடுப்படைந்தனராம்.
‘சீனியர்களை மதிக்கத் தெரியாத மனிதர்… அப்பன்-பாட்டன் பரம்பரை
கெளரவத் திமிரில் இப்படியா பேசுவது?’ என்றெல்லாம்
மூத்த நிர்வாகிகள் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனராம்..
50 வயது வரை வெளிநாடுகளில் படாடோபமாக,சுகவாசம் அனுபவித்து விட்டு, ஓய்வு பெற்ற பின் பொழுதுபோக்கு அரசியலுக்கு வந்தவருக்கு,
வந்தவுடன் எம்.எல்.ஏ.பதவி, கட்சி ஆட்சிக்கு வந்ததும் மந்திரி பதவி என்று வரிசையாக பதவிகொடுத்து அவர் மண்டையில் கனத்தை ஏற்றியதன் விளைவு இது என்று மூத்த கட்சியினர் கொந்தளித்தனராம்.
இதையடுத்து, பி.டி.ஆர். அந்தப் பதிவை உடனடியாக
நீக்கிவிட்டார்
முட்டாள் கிழவர் என்று திமுக-வில்
யாரைச் சொல்லி இருப்பார் பிடிஆர்…?
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து
கொள்ளாததற்கு -வளைகாப்பும், விமான பயணமும் என்று அவர் கொடுத்த ஏடாகூடமான விளக்கங்கள் கட்சிக்குள்ளும், வெளியிலும் பலத்த
சர்ச்சைக்குள்ளானது தெரிந்ததே….!!!
அதைப் பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட தி.மு.க
செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்,
‘தன்னை ஓர் அரசியல்வாதியாக அவர் பக்குவப்படுத்திக்
கொள்ள வேண்டும். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடாது.
ஜி.எஸ்.டி கூட்டத்தில் அவர் பங்கேற்றிருக்க வேண்டும்’
- என்றெல்லாம் புத்திமதி கூறியிருந்தார்.
பி.டி.ஆர். உடனடியாக ட்விட்டரை நீக்கி விட்டாலும்,
அதற்குள்ளாகவே இளங்கோவனிடம் சிலர் ஸ்கிரீன் ஷாட்
எடுத்து கொடுக்க, அவர் அதை திமுக தலைவரிடம்
காட்டி புகார் சொன்னாராம்.
தலைமை கேட்டதையெல்லாம், கேட்கும்போதெல்லாம் –
கொடுக்கக்கூடிய ஒருவர் மீது அவ்வளவு சீக்கிரம் எப்படி
நடவடிக்கை எடுக்க முடியும்…?
அதுவும் அவர்
கட்சித்தலைமைக்கு எதிராக எதையுமே சொல்லாதபோது…?
சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் –
அவஸ்தைப்படுகிறது திமுக தலைமை –
என்று கதை சொல்கிறது – திமுக ஆதரவு தளம் ஒன்று….!!!
சில சமயங்களில், அரசியல்…………சுவாரஸ்யமாகத்தான்
இருக்கிறது …!!!
.
……………………………………..
ஐயா, இந்த ஆளை(மனிதர் என்று தான் முதலில் எழுதினேன், பின் சரியான அழைப்பு ஆள் தான் என்பதால் மாற்றிவிட்டேன்) பதவியில் இல்லாத போது ஒரு நிகழ்ச்சியில் பேச கேட்டேன் அப்போதே சரக்கு இல்லாத, மமதை கொண்ட ஆள் என்பதை உணர்ந்தேன் அதனால் இப்படிபட்ட அறிக்கையால் ஆச்சரியம் வரவில்லை.
ஆனால் சொல்லியதை எதிர்கொள்ள தைரியம் இல்லாத போது இப்படிபட்ட ஆளால் இன்னும் என்ன விபரீதம் வர போகிறதோ 😦