ஆளும் கட்சி M.P. என்றால்….அடித்துக் கொலை செய்ய லைசென்ஸ் உண்டோ ….?

மீடியாக்களில் இவர் முகம் இருட்டடிப்பு செய்யப்படுவதேன்…? யார் உத்திரவு…?

M.P.மீது கொலைப் புகார் –
திமுக இன்னும் ஓர் இரவு, வேலைக்காரி – காலத்திலேயே
இருக்கிறதா…? ஜமீந்தார், மிட்டா, மிராசு,
ஆண்டான், அடிமை உணர்வெல்லாம் இன்னமுமா
தொடர்கிறது …. ?

ஆளும் கட்சி எம்.பி.ஆண்டான் –
அவரிடம் வேலை செய்பவர் எல்லாம் அடிமைகளா…?

கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த எம்.பி.
திமுக-வின் அடுத்த தலைவரின் பிஸினஸ் பார்ட்னர் என்று
வேறு இந்த செய்தி சொல்கிறது….

கீழே இருப்பது – திமுக ஆதரவு செய்தித்தளமாகிய
மின்னம்பலத்தில் வெளிவந்துள்ள செய்தியிலிருந்தே –

( நம்முடைய வார்த்தை எதுவும் கிடையாது … )

…………………………………………………………………………………………………………………………………………………..


கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி கோவிந்தராஜ் தாக்கப்பட்ட
நாளில் இருந்து, இப்போதுவரை இந்த விவகாரத்தில்
நடைபெற்றதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கோவிந்தராஜ் யார்? அவருக்கு என்ன நடந்தது?

பண்ருட்டி தாலுக்கா பணிக்கன்குப்பம் ஊராட்சியில்
அமைந்துள்ளது திமுக எம்பி TRVS ரமேஷ்
குடும்பத்திற்குச் சொந்தமான முந்திரி கம்பெனி.
இதில் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்
என்பவர் போர்மா செய்யும் வேலையைச் செய்துவந்தார்.
அதாவது முந்திரியை ஹீட் செய்து உடைக்க
பதப்படுத்திக் கொடுப்பது.

இந்த கம்பெனிக்கு அதன் ஓனரான எம்.பி.ரமேஷ்
அவ்வப்போது வருவார். முக்கிய நிர்வாகிகளிடம் பிசினஸ்
பற்றி விவாதிப்பார். முந்திரி கம்பெனியில் ஓனர் ரமேஷுக்கு
என்று தனியாக அறை இருக்கிறது. 19 ஆம் தேதி
மாலையில் கம்பெனிக்கு வந்த ரமேஷ், தனது அறைக்குச்
சென்றுள்ளார். ரிலாக்ஸாக கொஞ்ச நேரம்
மது அருந்தியுள்ளார் ரமேஷ்.

அதற்கு முன்பே தொழிலாளி கோவிந்தராஜ் பற்றி சில
தகவல்களை தனது நிர்வாகிகள் மூலமாக
கேள்விப்பட்டிருக்கிறார் ரமேஷ். பல லட்சம் மதிப்புள்ள
முந்திரியை கம்பெனியில் இருந்து அவ்வப்போது
திருடி வெளியில் விற்பனை செய்துவிட்டார் என்பதுதான்
கோவிந்தராஜ் மீது ரமேஷுக்கு சென்ற புகார்.

அன்று மாலை மது அருந்திக் கொண்டிருந்தபோதே,
‘கூப்பிடுய்யா அந்த கோவிந்தராஜை’ என்று டென்ஷனாக

உத்தரவிட்டுள்ளார் ரமேஷ் எம்.பி. ஏற்கனவே
இருக்கும் அதிகார போதையோடு ஆல்கஹால் போதையும்
சேர்ந்து கொண்டதால் விசாரணை கடுமையாகவே
இருந்துள்ளது.

வாய் வார்த்தையாகவே போய்க் கொண்டிருந்த விசாரணை
மதுவின் உபயத்தால் திசைமாறியது. கோவிந்தராஜை
கோபமாக ரமேஷ் தாக்க….
அவ்வளவுதான் கம்பெனி மேனேஜர் உள்ளிட்ட ஊழியர்களும்
சேர்ந்து கோவிந்தராஜுவை தாக்கத் தொடங்கினார்கள். ரத்தக்

காயமானதால், ‘அண்ணே… நாங்க பாத்துக்குறோம்’என்று
சொல்லிவிட்டு, நள்ளிரவு கோவிந்தராஜை ரத்தக்காயத்துடன்
காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து
போயிருக்கிறார்கள் எம்.பி.யின் ஆட்கள்.

அவர் மீது திருட்டு புகார் கொடுத்து வழக்கு பதிவுசெய்து
சிறையில் அடைக்கச் சொல்லியுள்ளார்கள்
எம்பி ஆதரவாளர்கள்,

அப்போது பணியிலிருந்த போலீஸார் – கோவிந்தராஜ்
கடுமையான ரத்தக் காயத்தோடு இருப்பதைப் பார்த்து,
’இந்த நிலைமையில இங்க வச்சிருக்க முடியாது. .
ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போங்க’ என்று சொல்லி
அனுப்பிவிட்டார்கள்.

ஆனால், மீண்டும் அவர்கள் வரவில்லை. மறுநாள்
செப்டம்பர் 20 ஆம் தேதி, கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல்

சென்னையிலிருந்து ஊருக்கு வந்து காடம்புலியூர்
காவல் நிலையத்துக்குச் சென்றார்.

“எம்.பி உட்பட ஐந்து பேர், பெயர் தெரிந்தவர்களும்
மற்றும் பலர் சேர்ந்து எனது தந்தையைக் கொலை
செய்துவிட்டார்கள்” என்று செந்தில்வேல் புகார் கொடுக்க,
போலீஸாரே அதிர்ந்துவிட்டார்கள்.

ஆளும் கட்சி எம்.பி. மீது கொலைப் புகார் வந்த நிலையில்
மெல்ல மெல்ல லோக்கல் அரசியல் அழுத்தங்களும்
போலீஸாருக்கு வரத் தொடங்கின. ஆனால் பாமக நிறுவனர்
ராமதாஸுக்கு இந்தத் தகவலை லோக்கல் பாமகவினரே
கொடுக்க, விவகாரம் அரசியல் ரீதியாகவும் சூடானது.

இந்தப் பின்னணியில் எம்.பி.யை கொலை வழக்கில்
கைது செய்ய வேண்டும், நீதி வேண்டும் என்று
பாமகவினரும், ஊர் மக்களும் சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமதாஸும் ட்விட்டரில் கண்டனத்தைப் பதிவு செய்தவர்,
“இறந்தவர் உடலை ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப்
பரிசோதனை செய்ய வேண்டும். எம்.பி மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை
வைத்தார்.

அதே கோரிக்கையை பாமகவினர் 21ஆம் தேதி கடலூர்
மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்தனர். பாமக
சார்பில் வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்துக்கும்
இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றார்.

நீதிமன்ற உத்தரவின்படி போஸ்ட் மார்ட்டம்!

உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் வழிகாட்டுதலின்படி
கோவிந்தராஜ் பிரேதத்தை ஜிப்மர் மருத்துவமனை
மருத்துவர்கள் 23 ஆம் தேதி, விழுப்புரம் முண்டியாம்பாக்கம்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப்
பரிசோதனை செய்தனர். உறவினர்களின் போராட்டத்தை
சமாளித்து அவர்களிடம் பேசி கோவிந்தராஜின் உடலை,
போலீஸார் ஒப்படைத்தனர்.

மின்னம்பலம் சார்பில் ஜிப்மர் மருத்துவர்கள் வட்டாரத்தில்
விசாரித்தபோது –

“கோவிந்தராஜின் தலையின் பின் பகுதியில் அடிபட்டு
ஸ்கல் ஓப்பனாகியுள்ளது.

இடது கண் பகுதியில் அடிபட்டுள்ளது.

காது பக்கத்தில் எலும்பு உடைந்துள்ளது.

வயிற்றுப் பகுதியில் அடிபட்டுள்ளது.

இறப்பிற்கு காரணம் தலையின் பின் பகுதியில்
ஸ்கல் (பின் மண்டையில் இருக்கும் உள் எலும்பு)
ஓப்பனாகியுள்ளதுதான்” என்றார்கள்.

போலீஸாரைப் பார்த்து எரிச்சலான எம்.பி. –

போஸ்ட் மார்ட்டம் முடிந்த பிறகு, எம்பி மற்றும்
அவரது ஆட்கள் தாக்கியதால்தான் கோவிந்தராஜ் மரணம்

அடைந்திருக்கிறார் என்பதை கிட்டத்தட்ட உறுதி
செய்துகொண்ட கடலூர் மாவட்ட போலீஸார்,
எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி கம்பெனி,
கடை, வீடுகளில் போலீஸ் பாதுகாப்பை
அதிகப்படுத்தினார்கள்.

பாதுகாப்பு பணிகள் சரியாக இருக்கிறதா என்று
கண்காணிக்க, அன்றே பண்ருட்டி 6வது போலீஸ் லைனில்
உள்ள எம்பி வீட்டுக்கு காடம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர்
ஜெயக்குமார் சென்றிருக்கிறார்.
அப்போதும் வீட்டு வாசலில் போதையில் நின்ற எம்.பி.
ரமேஷ், கோபத்தோடு எஸ்.ஐ.யைப் பார்த்து
திட்டியிருக்கிறார். ரமேஷ் பதற்றத்தில் இருக்கிறார்
என்பதை இதன் மூலமே உணர்ந்துகொண்டனர் போலீஸார்.

முந்திரி கம்பெனியில் வேலை செய்யும் முக்கிய
ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். “எங்கள் எம் டி (எம்பி)
நல்லா குடிப்பார்.

“மத்த” விஷயங்களும் உண்டு.

எம்பி,யாக டெல்லிக்குப் போனபிறகும் அங்கேயும்
அப்படிதான் இருப்பார், அந்த வகையில்தான் பெரிய பெரிய
இடத்து நட்புகள் கிடைத்தது.

தேர்தலில் என்னை உதயநிதியே நிற்கச் சொன்னார்.
நானும் உதயநிதியும் தொழில் பாட்னர்கள், அவர்தான்
சீட் கொடுத்தார் அப்படினு கூட்டத்துலயே பேசியிருக்காரு.

கீழே இருப்பது தினமணி செய்தித் தளத்திலிருந்து –

………………………………………………………………………………………………………………….

கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல், பாமக மாநில
துணைப் பொதுச் செலா் சண்.முத்துக்கிருஷ்ணன்
ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை
அளித்த புகார் மனு:

……………….….

கோவிந்தராஜ் உயிரிழப்பு குறித்து போலீஸார்
சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
அவரது சடலம் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்
பேரில் ஜிப்மரில் உடல்கூறாய்வுக்குப் பிறகு அடக்கம்
செய்யப்பட்டது.

கடந்த 19- ஆம் தேதி இரவு 10 மணியளவில் மக்களவை
உறுப்பினரின் உதவியாளா் நடராஜன் மற்றும் சிலா்
2 கார்களில் –

காடாம்புலியூா் காவல் நிலையத்துக்கு கோவிந்தராஜை
அழைத்து வந்தனா். அப்போது, அவரது உடல் முழுவதும்
ரத்தக் காயங்கள் இருந்தன.

இந்த நிலையில், போலீஸார் அவரை உடனடியாக
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல்,
அவா்களுடனேயே அனுப்பி வைத்துள்ளனா். இதன் பிறகு,
அவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக
எம்.பி. தரப்பினா் எங்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸார் மெத்தனமாகச் செயல்பட்டதே
கோவிந்தராஜின் உயிரிழப்புக்குக் காரணம்.எனவே, அவரை
காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தவா்களை கைது
செய்வதுடன், அப்போது பணியிலிருந்த காவல்
துறையினரிடமும் உரிய விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்தனா்.

……………………

இது ஒரு பொதுவான கேள்வி –

இந்த மனிதருக்கு எம்.பி. சீட் கொடுக்கும் முன்னர்
திமுக தலைமை இவரைப்பற்றிய பின்னணிகளை,
தகுதிகளை ஆராய்ந்ததா…?

இவரிடம் என்ன தகுதியைக் கண்டு சீட் கொடுக்கப்பட்டது…?

” நிறை குடிப்பார்…”
“மற்ற” பழக்கங்களும் உண்டு.
கொழுத்த பணக்காரர் என்கிற தகுதிகளோடு,

“அடுத்த” – தலைவருக்கு வேண்டப்பட்டவர் –
கேட்ட பணத்தை, கேட்கும்போதெல்லாம் கொடுப்பார்…
ஒழுங்காக “கப்பம்” கட்டுவார் – என்பவற்றையுமா ….?

.
………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஆளும் கட்சி M.P. என்றால்….அடித்துக் கொலை செய்ய லைசென்ஸ் உண்டோ ….?

  1. புதியவன் சொல்கிறார்:

    //திமுக ஆதரவு செய்தித்தளமாகிய மின்னம்பலத்தில்// – ஆதரவா இல்லை திமுக செய்தித் தளமா? (இல்லாட்டால் நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகளைப் பிட்டுப் பிட்டு காணொளில வந்த ஜெயரஞ்சன் திமுகவினால் பதவி பெற்றபிறகு நாடே சூப்பராக ஆகிவிட்டது என்று எண்ணிக் காணாமல் போவாரா?)

    //எம்.பி. சீட் கொடுக்கும் முன்னர் திமுக தலைமை இவரைப்பற்றிய பின்னணிகளை,// – நிச்சயம் ஆராய்ந்திருப்பாங்க. பின்னணி சூப்பராக, திமுகவிற்கு ஏற்றபடி இருந்ததால்தான் சீட் கொடுத்திருக்காங்க.

    //கேட்ட பணத்தை, கேட்கும்போதெல்லாம் கொடுப்பார்… ஒழுங்காக “கப்பம்” கட்டுவார்//

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.