
பெரியார் அவர்கள் தாடி வளர்ப்பது குறித்து
ஒரு சமயம் தீவிரமாக ஒரு ஆராய்ச்சி நடைபெற்றிருக்கிறது.
சீரியசான விஷயம் எதுவுமில்லை – தமாஷ் தான்…!!!
இதற்கு பெரியார் அவர்களே வெவ்வேறு சந்தர்ப்பங்களில்
வெவ்வேறு காரணங்களை சொல்லி இருக்கிறார்
என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.
அந்தக்காலத்திய சுயமரியாதை நண்பர்கள் – ஒரு நாள் இரவு
பெரியார் வீட்டு மாடியிலேயே ”அய்யா தாடி வளர்ப்பது ஏன்”
என்று தங்களுக்குள் ஒரு சிறு பட்டிமன்றம் நடத்தி
இருக்கின்றனர்.
முக அழகுக்காக தாடி வளர்ப்பதாக என்னிடம்
பெரியார் சொன்னார் என்றிருக்கிறார் மாயவரம் நடராசன்.
இல்லையில்லை ” ரஷ்ய அறிஞர்கள் எல்லோரும் தாடி
வைத்துள்ளனர். அவர்களைப் பார்த்தபின் வைத்தேன் “
என்று என்னிடம் கூறினார் என்றிருக்கிறார்
எஸ்.வி.லிங்கம் என்பவர்.
அங்கேயிருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள் –
” சவரச் செலவு தினமும் நாலணா மிச்சமாகிறது ” என்று
என்னிடம் கூறினார் என்றிருக்கிறார்.
பட்டுக்கோட்டை அழகிரி – ” கொஞ்ச நேரம் என்றாலும்
இன்னொருவரிடம் தலைகுனிந்து உட்காருவது
தன்மானக் கேடாக உள்ளது ” என்றாரே என்னிடம் என்று
சொல்லி இருக்கிறார்.
மேடையேறி பலரைத் தாக்கித் திட்டும்போது,
“போனால் போகிறான் கிழவன், வயதானவன்” என்று
விட்டுவிடுவார்கள் என்று என்னிடம் கூறினாரே
என்றிருக்கிறார் பூவாளூர் பொன்னம்பலனார்.
பெரியார் கூறிய காரணங்களைப்பற்றி இப்படியாக
ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம், ” இப்போது உறங்குகள் …
உண்மையான காரணத்தை நாளை பெரியாரிடமே
கேட்டுச் சொல்கிறேன்” என்றிருக்கிறார்.
மறுநாள் சொன்னபடி சென்று அவரது தாடி வளர்ப்பின்
ரகசியம் குறித்து கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த பெரியாரோ,
தினமும் பத்து நிமிடம்
வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே.
பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில்
செய்யலாமே என்று நினைத்து விட்டு விட்டேன்.
அது தானாக வளர்ந்து விட்டது. வேறெதுவும்
காரணம் இல்லை என்று கூறியிருக்கிறார்…!!!
பெரியார் அவர்கள் பொதுநலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில்,
கடைசி மூச்சு வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தாலும் –
சொந்த விஷயங்களில் அவர் கொஞ்சம் சோம்பேறித்தனமாகத்
தான் இருப்பார்…. தினமும் குளிப்பதையே அவர் பெரிய
அசௌகரியமாக நினைத்தார் – என்பது தான் உண்மை..
பெரியாரை நன்கு உணர்ந்தவர்கள் யாரும் இத்தகைய கேள்விகளை எல்லாம் கேட்கவே மாட்டார்கள்….
எனது கருத்தை ஏற்று தாங்கள் எடுத்த நடவடிக்கை கண்டு மிக்க மகிழ்ச்சி கணக்கு எழுதி வைக்கும் வழக்கம் எனது தந்தையாருக்கு உண்டு எனது அண்ணரும் எழுதுவதை கண்டு சிரித்தேன் நான் கணக்கு எழுதுவது இல்லை இருந்தாலும் எழுதவேண்டும் என்ற ஆவல் உள்ளது
யூடியூப் பெரும் சமுத்திரம் ஒருவர் அதில் எடுக்கும் முத்துக்கள் சிலவேளை மற்றவர் கண்ணுக்கு படுவதில்லை சிறப்பாக தோன்றுவதை நண்பர்கள் இங்கு பின்னூட்டம் ஆகவோ அல்லது ஐயா அவர்களுக்கு நேரடியாகவோ ஈமெயில் மூலம் அனுப்பி எல்லோரும் பலனடைய செய்ய வேண்டும் இரண்டாவது தடவை பார்த்தாலும் பிரச்சனை இல்லை.
நாங்கள் பாடசாலையில் படிக்கும் காலத்தில் எல்லா திரைப்படத்திற்கும் போய் பார்க்கும் வசதி இருப்பதில்லை ஆனால் வகுப்பில் யாரோ ஒருவர் அவரது அண்ணனுடனோ தந்தையுடனோ சென்று அனைத்து படங்களையும் பார்த்து கதை சொல்லும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள் அவர்கள் வந்து வகுப்பறையில் சுவாரசியமாக கதை சொல்வதை பலர் அனுபவத்தில் உணர்ந்து இருப்பார்கள் எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது செல்வராஜா என்பவர் எனது சிறுவயது வகுப்பில் சிறந்த கதைசொல்லி அது போன்று தற்போது ஆங்கில திரைப்படங்களுக்கும் சிலர் சிறப்பாக கதை சொல்கிறார்கள் அவர்களின் எனக்குப் பிடித்தவர்கள் மிஸ்டர் தமிழன் பாலா மற்றும் அர்ஜுன் யாரோ மிஸ்டர் தமிழன் பாலா கதைப் புத்தகங்களையும் பேசியுள்ளார் அதில் சாண்டில்யனின் பொன்னியின் செல்வன் 15 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது அர்ஜுன் யாரோ கார்ட்டூன் படங்களுக்கு சிறப்பாக கதை சொல்கிறார் யாராவது இதனை யூடியூபில் பார்க்காமல் இருந்தால் பார்த்து மகிழ்ச்சி அடையுமாறு வேண்டுகிறேன் நன்றி
தினந்தோறும் குளிப்பதைக் கூட , நேரத்தின் அருமை கருதி தவிர்த்தார் என்பது நான் அறிந்த தகவல்
Tamil Books,
இந்த மாதிரி தகவல்களை உறுதி
செய்யக்கூடியவர் –
பெரியார் அவர்களின் “அனைத்து”
விஷயங்களுக்கும் ஒரே authority யான
திருவாளர் மானமிகு வீரமணியார்
மட்டும் தான்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்