மறக்க முடியாத ஒரு திரை ஓவியம் … !!!

சிவாஜி, ராதா, இளையராஜாவின் இசை,
அற்புதமான காமிரா கோணங்கள், மிகச்சிறப்பான கிராமத்து பின்னணி –
எதைச் சொல்வது, யாரைச் சொல்வது, யாரை விடுவது….?

இப்படிச் சொல்வது தான் சரியாக இருக்கும்…


இது முழுக்க முழுக்க பாரதிராஜா படம்….
அவருக்கு ஆயுசு முழுவதுக்கும் –
இந்த ஒரு காவியம் போதும் ….!!!

முதல் மரியாதை திரைப்படத்திலிருந்து
அற்புதமான ஒரு பகுதியை தனியே இணையத்தில்
பார்த்தேன்….. பகிர்ந்து கொள்கிறேன்….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to மறக்க முடியாத ஒரு திரை ஓவியம் … !!!

 1. புதியவன் சொல்கிறார்:

  //இது முழுக்க முழுக்க பாரதிராஜா படம்…. அவருக்கு ஆயுசு முழுவதுக்கும் –
  இந்த ஒரு காவியம் போதும் ….!!!// – அப்படி என நான் நினைக்கவில்லை கா.மை. சார். இந்தப் படம் எடுத்து, படச் சுருளைப் பார்த்ததும் அனைவருக்கும் அதிர்ச்சி. இந்தப் படம் ஓடவே ஓடாது என்று. இளையராஜாவுக்கும் படத்தைப் பார்த்து நல்ல அபிப்ராயம் கிடையாது. இருந்தாலும் இளையராஜா, இசைக் கோர்ப்பு சேர்த்து (சில மாறுதல்களையும் பாரதிராஜா செய்தார் என்று படித்தேன்) படத்தைத் தூக்கி நிறுத்திவிட்டார். இந்தப் படம் சூப்பர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்கான 60 சதவிகித க்ரெடிட் இளையராஜாவைச் சேரும் என்பது என் எண்ணம். (இந்தப் படத்தில் முதலில் எஸ்பிபி நடிப்பதாக-அல்லது சில ரீல்கள் நடித்ததாக, இருந்தது. பிறகு சிவாஜி அவர்கள் உள்ளே வந்தார். அவருக்கும் இந்தப் படத்தைப் பற்றி நல்ல அபிப்ராயம் வரவில்லையாம். என்னப்பா இந்தப் பையன் நடிக்கவே சொல்ல மாட்டேங்கிறான், இப்படிப் பாருங்க, அப்படி நடங்க என்று சொல்றான். என்ன மாதிரி இந்தப் படம் வருதுன்னே தெரியலை என்பதே அவரது அபிப்ராயம். பிறகு இசைக்கோர்ப்பெல்லாம் முடிந்த பிறகு படத்தைப் பார்த்து அசந்துவிட்டாராம். என் சொந்த அபிப்ராயம், சிவாஜியின் மனைவியாக வரும் வடிவுக்கரசியின் நடிப்பு என்னை ரொம்பவே கவர்ந்தது. நல்ல வில்லிதான் நல்ல படத்தின் ரிசல்டுக்குக் காரணமாக அமையும், படையப்பா போல).

  ஆனால் இளையராஜா இசை மட்டும் பாரதிராஜா படம் வெற்றியடையப் போதுமா என்று கேட்டால், போதாது, கதை நன்றாக இருக்கவேண்டும் என்பதுதான் என் அபிப்ராயம் (நிழல்கள் உதாரணம்)

  பாரதிராஜாவின் திறமை ரொம்பவே பளிச்சிட்ட படம், in my opinion கிழக்குச் சீமையிலே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   இந்த மாதிரி விஷயங்களில்,
   ரசனைகள் எல்லாருக்கும்
   ஒரே மாதிரி இருக்காது;
   ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று
   பிடிக்கும்…. சில விஷயங்கள்
   மட்டும் -எல்லாருக்குமே பிடிக்கும்.

   நான் பொதுவாக பார்ப்பது என்று
   தீர்மானிக்கும் படத்தை, ரிலீசாகி
   2-3 நாட்களுக்குள், விமரிசனங்கள்
   எதுவும் வெளிவருவதற்குள்
   பார்த்து விடுவேன்…
   அது என் வழக்கம் -இன்று வரையிலும்..!!!

   இளையராஜாவின் contribution
   கேள்விக்கே இடமில்லாமல்
   வெகு சிறப்பானது.

   படத்தைப் பார்த்துவிட்டு, வெளியே
   வரும்போது என் மனதில் தோன்றியது-
   படம் நன்றாகவே வந்திருக்கிறது.
   ஆனால் ரொம்ப ஸ்லோ…
   இது வணிக ரீதியில் வெற்றிகரமாக
   அமைய வாய்ப்பில்லை; என்பது தான்.

   ஆனால், துவக்க தடுமாற்றத்திற்குப்
   பிறகு, படம் பிரமாதமாக ஓடியது.
   நான் முதலில் பார்த்ததோடு சரி –
   அதன் பிறகு முழுப்படத்தையும்
   ஒருசேர 2-ம் முறை பார்க்கவே இல்லை;
   ஆனால், துண்டு துண்டாக சில முறை,
   சில காட்சிகளை பார்த்திருக்கிறேன்.

   நாளாக, ஆக – படம் எனக்கு இன்னும்
   கூடுதலாக பிடிக்கிறது…
   ——-

   வடிவுக்கரசி ரோல் – வடிவுக்கரசி என்றல்ல…
   எனக்கு – பெண்கள் வில்லி கேரக்டரில்
   வந்தால், அது யாராக இருந்தாலும்
   பிடிக்காது….

   பெண்கள் நல்லவர்களாக மட்டுமே
   இருக்க வேண்டும்…. உலகமே அவர்களை
   நம்பித்தான் இருக்கிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    இந்தப் படத்தை முதலில் திருநெல்வேலி சிவசக்தி தியேட்டரில் பார்த்தேன். பிறகு எம்.எஸ்.ஸியில் இண்டர்னல் எழுதாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து இந்தப் படத்தை மதுரையில் பார்த்தேன். கிராமத்துக் கதையை மிக நன்றாக handle பண்ணத் தெரிந்தவர் பாரதிராஜா. அவருக்கு ஏற்ற மாதிரி அவரது திரைக்கதாசிரியர்கள் அமைந்தனர் (செல்வராஜு, ரத்னகுமார் மற்றும் பலர்)

    படம் கஷ்டப்பட்டுத்தான் 100 நாட்களைத் தொட்டது (அதற்கும், சிவாஜி கஷ்டப்பட்டு அந்தக் கல்லைத் தூக்குவாரே… அந்தப் படத்தைப் போட்டு வெற்றிகரமான 100 நாட்கள் என்று போஸ்டர் ஒட்டியிருந்தனர்).

    இந்திய அரசு (பரிசுக் குழுவும்) சிவாஜிக்கு இழைத்த அநீதி, அவரை நல்ல நடிகராக ரெகக்னைஸ் பண்ணாதது. சிவாஜிக்குக் கிடைக்கவேண்டிய விருதை, பயத்தால் எம்ஜியாருக்கு மடை மாற்றிவிட்டனர்

 2. atpu555 சொல்கிறார்:

  நல்ல படம். ஆனால் ராதா இறுதியில் உயிர் விடுவது கொஞ்சம் அதிகப்படியாக எனக்குத் தெரிந்தது. எனக்குப் பிடித்த பாரதிராஜா படம் புதியவார்ப்புகள்!

 3. Vic சொல்கிறார்:

  தங்கள் பதிலுக்கு மனமார்ந்த நன்றி நான் நெதர்லாந்தில் வசிக்கும் இலங்கை வாசி வாசகன் இந்த திரைப்படம் சிவாஜிக்கு ஒரு முக்கியமான திரைப்படம் இதில் அவரை இவ்வளவு சிறப்பாக பயன்படுத்தியதற்கு நடிகர் இயக்குனர் என பன்முகம்கொண்ட பாக்கியராஜ் முக்கியமானவர் பாக்கியராஜ் அப்போது ராஜன். அந்த வார்த்தை ராஜன் என்பதை எப்பொழுதும் பாரதிராஜா வாயில் வந்துகொண்டே இருக்குமாம். இந்தப் பாத்திரத்திற்கு எஸ்பிபி முதலில் தெரிவு செய்யப்பட்டவர் அதன் பின்னர் சிவாஜி தெரிவுசெய்யப்பட்டார் அதற்கும் பாக்கியராஜ் காரணம் என ஊகிக்கிறேன் ஏனெனில் சிவாஜி திரிசூலம் நீதிபதி தீர்ப்பு என்று வகைவகையாக ஒரே டெம்பிளேட் ஸ்டைலில் நடித்துக்கொண்டிருந்தார் அவரிடம் யாருமே நடிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு முன்வரவில்லை நீங்களே செய்து கொள்ளுங்கள் என்ற வகையிலேயே இயக்குனர்கள் இருந்தார்கள் பாக்கியராஜ் இதை உணர்ந்து கொண்டு அவரது எனக்கு ஆகக்குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பே நான் பேசப் போகும் வசனங்களை தந்துவிட வேண்டும் என்ற அவரது கட்டுப்பாட்டுக்கு சரி என்று கூறிவிட்டு கடைசிவரை அதனைக் கொடுக்காமல் கடைசியில் தாங்கள் சொல்ல சொல்ல அவரை பேச வைத்து அல்லது எதையாவது பேசுங்கள் இந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அவரை நடிக்க வைத்த பாரதிராஜாவின் பின்னால் அவருக்கு வசனங்களை பாடமாக்க விடாமல் அவரது வழக்கமான பாணியில் இருந்து மாற்றம் செய்த பாக்கியராஜ் முக்கியமானவர் அது மட்டுமல்ல அவரை தாவணிக்கனவுகள் படத்திலும் அதே போன்று பயன்படுத்தி இருப்பார் உதவி யூடியூப்
  இன்றும் ஒரு யூடியுப் லிங்க் மற்றும் உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் தனியாக காவிரிமைந்தன் புளொஃஐ நடத்தாமல் இன்னும் சிலரை இணைத்துக் கொண்டு இயங்கினால் நன்றாக இருக்கும் நன்றி அன்புடன் நித்தி (vic)

 4. vimarisanam -kavirimainthan சொல்கிறார்:

  நண்ப நித்தி (Vic),

  உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி.

  இனி நான் உங்களை நித்தி என்றே
  அழைக்கலாமென்று நினைக்கிறேன்….
  உங்கள் முழுப்பெயர் என்னவென்று
  சொல்லலாமென்றால், அடுத்த தடவை
  எழுதும்போது சொல்லவும்….

  வரிசையாக –

  1) இந்த வலைத்தளத்தில் அநேகமாக நான்
  தினமும் ஒரு இடுகை எழுதுகிறேன்.
  நான் தினந்தோறும் எழுதும் இடுகைகளை
  நெதர்லாந்திலிருந்து குறைந்தது 15-20 பேர்
  படிக்கிறார்கள் என்று என் dash board
  சொல்கிறது….. அந்த 15-20 பேரில் நீங்களும்
  ஒருவர் என்று இன்று தெரிய வருகிறது.
  இத்தனை பேர் படிக்கிறார்களே – ஏன் ஒருவருமே
  எழுத மாட்டேனென்கிறார்கள் என்று நான்
  பலமுறை நினைத்ததுண்டு. (இதே போல் –
  ஜப்பானிலிருந்து குறைந்தது 20-22 பேர்…!!!)

  இப்போது நீங்கள் அறிமுகப்படுத்திக்கொண்டதற்கு
  நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
  என்றேனும் ஒரு நாள் ஜப்பானிலிருந்தும்
  அந்த தமிழ் இளைஞர்களில் யாராவது
  எழுதுவார்கள் என்றும் நம்புகிறேன்.

  2) முதல் மரியாதை பற்றிய பின்னணி
  தகவல்களுக்கு மிக்க நன்றி…
  சிவாஜி, சுத்தமாக தமிழே தெரியாத,
  வேறு ஒரு மொழி இயக்குநரால்
  இயக்கப்பட்டால் -இன்னும் வித்தியாசமான
  நடிப்பை அவரிடம் பார்க்கலாமென்று
  நான் பலமுறை நினைத்ததுண்டு.
  அது, முதல் மரியாதை,
  தாவணிக்கனவுகளிலும் நிகழ்ந்திருக்கிறது.

  3) நீங்கள் எத்தனை மாதங்களாக அல்லது
  ஆண்டுகளாக – விமரிசனம் தளத்தை
  படித்து வருகிறீர்கள்…? இதற்கு முன்னர்
  இங்கு பின்னூட்டம் எழுதலாமெனறு
  ஏன் உங்களுக்கு தோன்றவில்லை…?
  நான் இளைஞர்களுக்கு அந்நியமாகத்
  தெரிகிறேனா, தொலைவில் இருக்கிறேனா என்ன ….?

  4) நெதர்லாந்து பற்றி கூட இங்கே சில
  இடுகைகள் எழுதியிருந்தேனே பார்த்தீர்களா…?
  அவ்வளவு அழகான இடம்தானா நெதர்லாந்து…?

  சுமாராக அங்கே எவ்வளவு தமிழர்கள்
  இருக்கிறீர்கள்….? எல்லாராலும் தமிழ் படிக்க
  முடியுமா…? ( இன்றைய ஐ.டி.துறை இளைஞர்களால்
  தமிழ் படிக்க முடிவதில்லை என்பது மிகவும்
  வருத்தமான விஷயம்…)

  5) மற்றவர்களையும் இங்கே இணைத்துக்கொண்டால்
  நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறி
  இருக்கிறீர்கள்….

  உங்கள் யோசனையை உளமாற வரவேற்கிறேன்.

  நான் கிட்டத்தட்ட கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து
  இந்த வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

  நான் முன்பெல்லாம் மற்றவர்களை இங்கே எழுத
  அழைக்காததற்கான முக்கிய காரணம் –

  துவக்கத்திலிருந்தே நான் அதிகமாக அரசியல் மற்றும்
  சமூக நலன் சார்ந்தே எழுதிக் கொண்டிருந்தேன்.

  அநேகமாக எனது எல்லா இடுகைகளும் கடுமையான
  விமரிசனங்களை கொண்டிருக்கும்.
  அரசியல்வாதிகளையும்,
  ஆளும் கட்சிகளையும்
  மத்திய, மாநில அரசுகளையும்,
  சமூகத்தில் உலவும் போலி மனிதர்களையும்,
  போலி சந்நியாசிகளையும் –
  மிகக்கடுமையாக சாடிக் கொண்டிருந்தேன்….
  இதற்காக நான் பல
  எதிர்விளைவுகளையும் சந்திக்க நேர்ந்தது….

  என் கொள்கைகளுக்கு, என் எழுத்துக்கு – அதனால்
  ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு – முழுக்க முழுக்க
  நான் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நான்
  எண்ணியதால் – யாரையும் துணைக்கு அழைக்கவில்லை;

  ஆனால் – அதையும் மீறி கடந்த காலங்களில் –

  பல நண்பர்கள்,
  பின்னூட்டங்களின் மூலம் எனக்கு பெரும் துணையாக,
  அரணாக இருந்தார்கள். அவர்கள் யார், எந்த ஊர்,
  என்ன தொழில் – என்பதெல்லாம் ஒன்றும் எனக்கு
  தெரியாது… ஆனால் உடுக்கை இழந்தவன் கை போல்
  எனக்கு ஏற்பட்ட இடுக்கண் களைய முயன்றார்கள்….
  ஆறுதல் தந்தார்கள்……தங்களின்
  பின்னூட்டங்களின் மூலம் எனக்கு வலு சேர்த்தார்கள்.

  இப்போதெல்லாம் அரசியல் எழுதுவதை கொஞ்சம்
  குறைத்துக் கொண்டிருக்கிறேன்…( நிறுத்தவில்லை…!!!)

  எனக்குப் பிடித்த பல்வேறு விஷயங்களைப்பற்றி
  எழுதிக் கொண்டிருக்கிறேன்.

  இங்கே நான் எழுதுகின்ற செய்தி – உங்களுக்கு
  மட்டும் என்றில்லாமல் –

  வாசக நண்பர்கள் அனைவருக்கும் போய்ச்சேர
  வேண்டும் என்பதால், உங்களுக்கு தனியே
  பதில் எழுதாமல் – இங்கேயே –
  இந்த தளத்திலேயே எழுதுகிறேன்.

  ஓரளவு தமிழில் கருத்துகளை தெளிவாகச் சொல்ல
  முடியும் என்கிற நம்பிக்கையுடைய நண்பர்கள்
  யாராக இருந்தாலும், இந்த விமரிசனம் தளத்தில்
  எழுதலாம்… அவர்களது எழுத்தை
  விமரிசனம் தளத்தில் – அவர்கள் பெயரிலேயே
  பிரசுரம் செய்ய நான் மிகவும் விரும்புவேன்.

  வாசக நண்பர்கள் அனைவருக்குமே
  இந்த அழைப்பினை நான் விடுக்கிறேன்.

  ஒரே ஒரு கட்டுப்பாடு தான்….

  அவர்கள் யாரும், தாங்கள் சார்ந்த அல்லது
  தாங்கள் விரும்பும் கட்சிக்கான
  விளம்பர மேடையாக இதை பயன்படுத்திக்
  கொள்ள முயற்சிக்கக் கூடாது….

  அரசியல் தவிர்த்த மற்ற விஷயங்களுக்கு –
  “வானமே எல்லை….” ( அசிங்கம் இல்லாமல்,
  ஆபாசம் இல்லாமல் …)

  மேலே தளத்தின் about column பார்த்திருப்பீர்கள் –

  ————–
  இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
  நல்லதைப் பாராட்ட வேண்டும்.
  கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
  (இன்றில்லா விட்டாலும் நாளையாவது
  மாறுமல்லவா ? )
  அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
  ஆபாசமின்றி எழுத வேண்டும்.
  —————

  இதன் கூட இன்னும் சில விஷயங்களையும்
  சேர்த்துக் கொள்ளலாம்….

  இயன்ற வரை சுவாரஸ்யமாக,
  பயனுள்ளதாக – அல்லது
  நல்ல பொழுதுபோக்கானதாக – எழுத வேண்டும்.
  —————–

  நண்பர்கள் எழுதும் கட்டுரைகளை எனது –

  kavirimainthan@gmail.com

  – என்கிற விலாசத்திற்கு மின்னஞ்சல் மூலம்
  அனுப்பி வைக்கலாம்.

  நான் படித்துப் பார்த்து விட்டு, இயன்ற அளவு
  விரைவாக இந்த தளத்தில் பிரசுரம் செய்கிறேன்.
  ( என் லட்சியங்களுக்கு விரோதமானதாக
  இல்லாதவரை, அவை அப்படியே பிரசுரிக்கப்படும் )

  உங்கள் பின்னூட்டத்தின் மூலம்
  இந்த அழைப்பை அனைத்து நண்பர்களுக்கும்
  விடுக்க முடிந்ததற்கு மகிழ்வடைகிறேன்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்
  22/09/2021

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நித்தி,

  மறந்து விட்டேன்.
  நீங்கள் சேர்த்திருக்கும் “கிட்டி” அவர்களின்
  காணொலி அருமையாக இருக்கிறது.
  கிட்டி’யின் நடிப்பு வித்தியாசமானது…
  நான் மிகவும் ரசிப்பேன்….

  அவரது ரசனையும் வித்தியாசமானது
  என்று இப்போது தெரிகிறது…!!!
  நீண்ட நாட்களாக அவரை திரைப்படங்களில்
  காண முடிவதில்லை;

  சில வருடங்களுக்கு முன்னர்,
  சென்னை கடற்கரை மணலில்
  “அன்னா ஹஜாரே” அவர்களுக்கு ஆதரவாக
  ஒரு பேரணி நடந்தது… அதில் அவரை பார்த்தேன்…
  அவருக்கு அருகே நானும் நடந்துகொண்டிருந்தேன்…
  ஆனால் – நாங்கள் ஒருவருக்கொருவர்
  அறிமுகமானவர்கள் அல்ல….

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s