இந்தம்மா என்ன தொழில் செய்கிறார்கள்…?எப்படி வந்தது இத்தனை கோடிகள்….? பணம், வீடு, கார், நிலங்கள்….???

செய்தித்தளம் ஒன்றில் வந்த தகவல்களிலிருந்து
கொஞ்சம் கீழே –

September 19, 2021, 10:38 [IST]

சென்னை: ஊராக உள்ளாட்சி தேர்தலில் மேல்மருவத்தூர்
பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி போட்டியிட உள்ளார்.
இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பங்காரு அடிகளாரின் மனைவி மேல்மருவத்தூர் அருகே
இருக்கும் சித்தாமூர் ஒன்றியத்தின் மேல்மருவத்தூர்
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார்.

இதற்காக அவர் தனது சொத்து மதிப்பு விவரங்களை
மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு 33 கோடி ரூபாய்
சொத்து இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி கணக்கில் உள்ள பணம், நிலம், வீடு, கார்
உள்ளிட்ட சொத்துக்கள் அடக்கமாக மொத்தம் 33 கோடி
ரூபாய் தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

………………………………………………………………………………….

இவர் ஒருவர் பெயரிலேயே இத்தனை கோடி என்றால்,
மற்ற நெருங்கிய உறவினர்கள் பெயரில் இன்னும்
எத்தனையெத்தனை கோடிகளோ….?


இரண்டு கேள்விகள் –

1) இந்த அம்மா என்ன தொழில் அல்லது வியாபாரம்
செய்கிறார்கள்…?… இவரது வருடாந்திர வருமானம் என்ன…?
அதற்கு ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு சமர்ப்பிக்கிறாரா …?
வருமான வரி கட்டுகிறாரா…?

2) தமிழக அரசு – வருமானத்திற்கு அதிகமாக சொத்து
சேர்த்திருப்பதாக பலரின் இருக்கைகள், அலுவலகங்கள்,
வணிகத்தலங்கள் மீது ரெய்டு நடத்துவதும்,
வழக்குப் போடுவதும் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன…

சந்தேகத்திற்குரிய வகையில் சொத்துக்களை குவித்துள்ள
இவர்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா…?

சட்டம் அதன் கடமையை ” இங்கும் ” செய்யுமா…?


அல்லது ஆளும் கட்சியிலும் “பக்தர்கள்” இருக்கிறார்களா…?

( “வருமானம்” என்பது எவ்வளவு என்று தெரிந்தால் தானே,
வருமானத்திற்கு மிஞ்சிய சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்ட
முடியும் என்று சொல்கிறீர்களோ…!!!! )

இன்னும் சில சந்தேகங்களும் கூட –

இத்தனை கோடிக்கணக்கான பணத்தை / சொத்துகளை – இவர்கள் “சம்பாதித்தேன்” என்று சொல்லிக்கொள்ள முடியுமா….? அப்பாவி பக்தர்’களிடமிருந்து மறைமுகமாக “பிடுங்கிய”வை எல்லாம் சம்பாத்தியம் ஆகி விடுமா….?

சுயமரியாதைச் சிங்கங்’கள் மெஜாரிடியாக உள்ள ஒரு சட்டமன்றத்தில் இதைப்பற்றியெல்லாம் யாரும் பேசுவதே இல்லையே … ஏன்…?

திருவாளர் திருமா, திருவாளர் வைகோ, கம்யூனிஸ்ட் தோழர்கள் யாருக்குமே இப்படி அப்பாவித் தமிழ் மக்கள் சுரண்டப்படுவதைக் குறித்து கவலையோ, அக்கறையோ இல்லையா….?

இனமானம் கி.வீரமணியார் – இந்த மக்களைப் பற்றி தன் வாழ்நாளில் எப்போதாவது பேசி இருக்கிறாரா….?

எல்லாரையுமேயா ‘வாக்கு வங்கி’ பயமுறுத்துகிறது….?

தேர்தலில் அரசியலில் இல்லாதவர்கள் கூட வாயை திறப்பதில்லையே- ஏன்….?

அத்தனை தலைவர்களுக்குமா ‘கவர்’ போகிறது ….?

.
……………………………………………………………………………………………………………………….……..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to இந்தம்மா என்ன தொழில் செய்கிறார்கள்…?எப்படி வந்தது இத்தனை கோடிகள்….? பணம், வீடு, கார், நிலங்கள்….???

  1. புதியவன் சொல்கிறார்:

    என்ன சொல்ல வருகிறீர்கள்? டிரஸ்டைத் தவிர, மனைவி, மகன்(கள்) என்று ஒவ்வொருவர் பெயரிலும் 40-50 கோடி சொத்து இருக்கிறதே, ஒரு கோயில் கட்டினவர்களுக்கே பலவித கல்லூரிகள், சொத்துக்கள் என்று சேர்ந்திருக்கிறதே என்று ஏன் அங்கலாய்க்கிறீர்கள்? 30-35 வருடங்களுக்கு முன்னால் மூணு வேளை கஞ்சிக்குக் கஷ்டப்பட்டவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துச் சேர்ந்துவிட்டது என்று பொறாமையாக இருக்கிறதா? அப்படி என்றால், கிளார்க்காக மாதம் 2000 ரூபாய்க்கு அல்லாடியவர், வாத்தியாராக 4000 ரூ சம்பாதித்தவர்., ஓசி டிக்கெட் பிரயாணி…. என்று ஒவ்வொருவர் பின்னணியும் அலசி, இப்போது எப்படி இத்தனை ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி ஆகிவிட்டார்கள் என்று நினைத்து இன்னும் வயிற்றெரிச்சலை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

    இந்தியாவில் இரண்டு கேடகரிகள்தான், ‘சம்பாதிக்கிறார்கள்’ (மத்தவங்கள்லாம் வேலை செய்துதான் தங்களுக்கு என்று ஏதேனும் வாங்கிக்கொள்ள, வாழ முடியும்). அவங்க, அரசியல்வாதிகள், அப்புறம் டிக்கெட் போட்டு வித்தை காட்டும் சாமியார்கள். எல்லா மதச் சாமியார்களும் (டிக்கெட் போடுபவர்கள்) பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள். (மதச் சாமியார்கள் மற்றும் ‘கடவுள் கிடையாது என்று பஜனை பாடும்’ சாமியார் மடம் உட்பட) எல்லா அரசியல்வாதிகளும் ‘தொழில்’ செய்து பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள். பக்கா அக்கவுண்ட்ஸ் மெயிண்டெயின் பண்ணுவார்கள். திக விற்கு லட்சம் கோடி சொத்து இருக்கிறதாம், அதன் ஒரே அதிபர் வீரமணியின் பையனாம். அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் அறக்கட்டளைகளுக்கும் (ஏன் நடிகர்கள் நடத்தும் அரக் கட்டளைகளுக்கும்) பல்லாயிரம் கோடி சொத்துக்கள் இருக்கின்றன. இவைகளெல்லாம் மட்டும் யார் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வந்தவை? இதில் யாரை யார் குற்றம் சாட்டுவது?

    //சுயமரியாதைச் சிங்கங்’கள் // – அப்படீன்னாக்க என்னா அர்த்தம் சார்? கூட்டணி வச்சுக்க லஞ்சம் வாங்கினால் சுயமரியாதை என்று அர்த்தமா?

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த இடுகையைப் பார்த்த பின்னர் –
    நண்பர் ஒருவர் எனக்கு தனிப்பட மெயிலில் அனுப்பி இருக்கும்
    வீடியோக்கள் கீழே –
    ———————————————————–
    பேத்தி திருமணம் –
    எத்தனை கோடி செலவாகி இருக்கும்….?

    அரசியல் தெளிவு – ஞானம் …..

    இத்தனை பேர் துணை இருக்க …
    -அப்புறம் என்ன கவலை…?

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இப்போது நான் தான் ஜாக்கிரதையாக
    இருக்க வேண்டுமோ….?

    .

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இது பற்றி இன்று ஒரு செய்திதளத்தில்
    வெளிவந்திருப்பது –

    “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்
    கோவிலை மட்டுமன்றி பல்வேறு கல்வி
    நிலையங்களையும் நடத்துகிறது. இவர்கள் கட்டிய
    திருமண மண்டபம், பார்க்கிங் இடம் உள்ளிட்டவை
    நீர்நிலைகளை தூர்த்து கட்டப்பட்டதாக பல
    ஆண்டுகளுக்கு முன்பே புகார்கள் எழுந்தன.
    ராஜா என்பவர் இது தொடர்பாக நீதிமன்றத்தில்
    வழக்கு தொடுத்தார். ஜனநாயக வாலிபர்
    சங்கத்தினர் பங்காரு அடிகளாரின்
    ஆக்கிரமிப்புகளை மீட்குமாறு போராட்டங்கள்
    நடத்தினர்.

    அண்மையில் ஜேப்பியார் கல்வி நிறுவனங்களின்
    ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு மீட்டதைப் போல
    மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்புகளையும் மீட்க
    வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    இந்த சூழலில் தான் உள்ளாட்சி மன்ற

    அதிகாரத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டும்
    என்பதற்காக பங்காரு அடிகளாரின் மகன் ஊராட்சி
    மன்ற தலைவர் பதவிக்கும் அவரது அம்மா
    ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பதவிக்கும்
    குறிவைத்து மீண்டும் இந்தத் தேர்தலில்
    இறங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் எதிர்ப்பின்றி
    போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்
    என்ற நோக்கத்தில் மேல் மருவத்தூர் ஊராட்சி
    மன்றத்தில் காய் நகர்த்தி வருகிறார்கள்
    கோவில் தரப்பினர்” .

    https://www.minnambalam.com/politics/2021/09/20/17/melmaruvarhur-bangaru-adigalar-wife-son-localbody-election-why-background

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.