

நேரமும், ஆர்வமும் இருப்பவர்களுக்கு இந்த காணொலி பிடிக்கும்…!!!
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் அவர்கள் – தன் இளமைக்காலம், நாடக மேடை வாழ்க்கை, திரையுலக தொடர்புகள் என்று
நிறைய சுவாரஸ்யமான அனுபவங்களை
இங்கே பகிர்ந்து கொள்கிறார்…..
சுவாரஸ்யத்துக்கு – கூட சாருஹாசனும் சேர்ந்து கொள்கிறார்.
இந்த இடுகையை நான் முன்பாகவே
தேர்ந்தெடுத்து, எழுதியும் விட்டேன்… ஆனால்,
இதன், எல்லா பகுதிகளையும் நான் பார்த்த பிறகு தான்
பதிவை வெளியிட வேண்டுமென்று நினைத்தேன்.
அதற்கு சில நாட்கள் ஆகி விட்டன….
நேரம் கைவசம் இருப்பவர்கள், தலைப்பில் ஆர்வம் உள்ளவர்கள் மேலே போகலாம்… ஆர்வம் உண்டு – ஆனால் நேரமில்லை என்பவர்கள் இதை புக்மார்க் செய்துவிட்டு பின்னர் நேரம் கிடைக்கும்போது பகுதி பகுதியாக காணலாம்.
……………………
……………………
அன்பு நண்பர் vic அவர்களுக்கு,
உங்கள் முதல் வீடியோ அற்புதம்.
இந்த தகவலை நான் ஏற்கெனவே எங்கோ
படித்திருக்கிறேன்… ஆனால், அந்த செப்பேடுகளை
பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைத்ததில்லை;
அற்புதம்… நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது.
1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள்
எப்பேற்பட்ட சாதனையாளர்களாக இருந்திருக்கிறார்கள்…!
அந்த செப்பேடுகளை அந்த நண்பர் தொடும்போது எனக்குள்
மிக மிக சந்தோஷம் ஏற்பட்டது….
என்றாவது ஒரு நாள் அந்த செப்பேடுகள் தமிழகத்திற்கு
வந்து சேரும் என்று நம்புவோமாக.
(ஆனால், நெதர்லாந்தைப் போல், நம் அரசு/மக்கள் அதை
பத்திரமாக பாதுகாப்பார்களா…? )
உங்கள் காணொலிக்கு மிக மிக நன்றி.
(ஆமாம் – நீங்கள் எந்த ஊரில், நாட்டில் இருக்கிறீர்கள்…?
எழுதலாமென்றால் – எழுதுங்களேன்….)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்