
இன்றைய தலைமுறையினர் யாருக்கும் இந்த
மாதிரி வீடுகள் பரிச்சயம் இருக்காது….
எனது சின்ன வயதில், 12-13 வயதுகளில்,
ஒரு பத்துமாதத்திற்கு, கோவையை அடுத்த சூலூரில்
எங்கள் குடும்பம் தங்கவேண்டிய அவசியம் வந்தபோது,
அந்த கிராமத்தில் இந்த மாதிரி வீடுகளை
பார்த்திருக்கிறேன்….
ஆனால், வசித்து அனுபவமில்லை;
அந்தக் காலத்தில், எவ்வளவு யோசித்து யோசித்து
வீடுகளில் வசதிகளையும், பாதுகாப்பையும்
ஏற்படுத்தி இருக்கிறார்கள்…!!!
திண்ணை, ரேழி, முற்றம், மாடம், தாழ்வாரம், கூடம், பின் கட்டு, பிறை, சந்தனக்கல், துளசிமாடம்
உத்திரம், கொல்லைப்புறம், ஊஞ்சல்
கல்லுரல், அம்மி,கல்சட்டி,
துவைக்கிற கல், கோட்டை அடுப்பு –
எனறெல்லாம் பல சொற்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே கேட்க முடிகிறது….!!!
இந்த காணொலி ஒரு நல்ல அனுபவம்….
………….