ஹளபீடு – ஒரு அற்புதம் -சிவாஜியின் கர்ணன் படத்தில் பார்த்திருப்பீர்களே…!!!

…………………………………………………………..

கர்ணன் – நிலவும் மலரும் மலரட்டுமே – நினைவிற்கு வருகிறதா ….!!!

கர்நாடகா மாநிலத்தில் மைசூரிலிருந்து 149 கி.மீ.தொலைவில்
உள்ள ஹளபீடு, ஹோய்சலேஸ்வரர் கோவில் –

போசளப்பேரரசை சேர்ந்த மன்னன் விஷ்ணுவர்த்தனனால்,
12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டெல்லி சுல்தான்களின்
தொடர்ந்த படையெடுப்புகளால் இந்தக் கோவில் அழிவுக்கு
உள்ளாகி, கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால், இன்றைய நாட்களில், நன்கு பராமரிக்கப்பட்டு,
டூரிஸ்டுகளை சுண்டி இழுக்கிறது…

இந்த கோவிலின் அற்புதத்தை வெளிப்படுத்தும் சில புகைப்படங்கள்
கிடைத்தன…. கீழே –

……………………………………

கஜ சமாரர் …
கிளிக்கு குறி பார்க்கும் அர்ஜுனன் …
மயில்மேல் முருகனும், விநாயகரும் ….
நரசிம்மர் அவதாரம் …
பிரகாரத்தில் – தலைக்கு மேல் கூரையில் கைவண்ணம் காட்டும் சிற்பங்கள்….
சிவனும், பார்வதியும் ….
சுற்றிலும் உள்ள சிற்ப வேலைகள் ….
வராக அவதாரம் ….
கருடன் – விஷ்ணுவையும், விஷ்ணு – லக்ஷ்மியையும் சுமந்து செல்லும் காட்சி…!!!
நுழைவாயில் ….
கோவில் நுழைவாயில் ….

இது கூடுதல் ஹளபேடு சிவாஜி போனஸ் ……!!!!

………………………………………………………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், சினிமா, சினிமா and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ஹளபீடு – ஒரு அற்புதம் -சிவாஜியின் கர்ணன் படத்தில் பார்த்திருப்பீர்களே…!!!

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த இடுகைக்கு சம்பந்தமில்லை;
    இருந்தாலும் முக்கியமானது –

    சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக
    இருக்கும் கிராமத்திற்கு –

    சாதி வேறுபாடற்ற மயானங்களை
    கொண்டிருக்கும் கிராமங்களுக்கு
    10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று
    முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்….

    முதல்வர் ஸ்டாலின் அவர்களின்
    இந்த அறிவிப்பை
    மனதார வரவேற்கிறேன்…
    உளமார பாராட்டுகிறேன்…

    கூடவே, இரட்டை டம்ளர் முறையை
    இன்னமும் கூட கடைபிடிக்கும் ஓட்டல்கள்,
    டீக்கடைகளின் உரிமையாளர்கள் மீது
    கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
    என்றும் அறிவிக்க வேண்டுகிறேன்.

    இந்த தள வாசக நண்பர்களும் இதை
    வரவேற்பீர்கள் என்பதை நானறிவேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      நீங்கள் எழுதியிருப்பது முற்றிலும் சரிதான். ஒருவர் இறந்த பிறகு, அவருடைய காரியங்களை முழுமையாக்க, சமூகத்தின் அனைவரின் பங்களிப்பும் உண்டு. அது இல்லாமல் முழுமை பெற முடியவே முடியாது. அப்படி இருக்கும்போது, மயானத்தில் சாதி வித்தியாசமா?

      சாதி வேறுபாடு களையப்பட வேண்டும். இந்த 10 லட்ச ரூபாய் அறிவிப்பு சாதி வேறுபாடுகளைக் கொண்டு, அதன் காரணமாக அந்த சாதிக்கு இந்த மயானம், இந்த சாதியின் பிணம் இந்தத் தெருவின் வழியாகப் போகக்கூடாது என்று மூடத்தனமாகப் பேசும் இந்துக்கள் திருந்துவதற்கு மட்டும் உபயோகப்படவேண்டும்.

  2. Subramanian சொல்கிறார்:

    நானும் உங்கள் அறிவிப்பை வரவேற்கிறேன்

    சமரசம்…உளாவும் இடமே…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.